விவசாயிகள் சங்கம்
இந்திய விவசாயிகள், கஷ்டப்பட்ட வேலை செய்து அறுவடைச் செய்தாலும், அவர்களுக்கு நல்ல விலை கிடைக்காததால் இன்னும் அவர்கள் ஏழ்மையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பொருள்களுக்கு விலையை நிர்ணயிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். இந்த நிலையில் தற்சமயம் பொருள்கள் குழுக்கள், விவசாயிகள் ஆர்வக் குழுக்கள் மற்றும் விவசாயிகள் (கூட்டமைப்புகள்) சம்மேளனம் தோற்றுவிக்கப்பட்டடு, அவர்களின் பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யும் தன்னம்பிக்கையை உருவாக்க முடியும்.
விவசாய ஆர்வக் குழுக்கள் என்பது தாங்களாகவே நிர்வகிக்கக்கூடியதும். குறிக்கோள் மற்றும் ஆர்வத்தை தங்களுக்குள் பரிமாற்றக் கொள்ளக்கூடிய தன்னிச்சையான குழு. குழுக்களின் நபர்கள் ஒன்றாகக்கூடி வேலைசெய்து, அவர்களுக்குள் இருக்கக்கூடிய வளங்களை எல்லாம் சேர்த்து, இதர வளங்களை நல்லமுறையில் பெறுவதும், முடிவான பயன்களை அவர்களுக்குள் பரிமாறிக் கொண்டு, குறிக்கோள்களை அடைதல்.
குழு உருவாக்குதலின் பயன்கள்:
- தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தை விவரத்தை அறிதல்
- வாங்குதல் மற்றும் விற்கும் திறனை அதிகரித்தல்/மேம்படுத்துதல்
- உபயோகமானதும் சார்ந்ததுமான செயல்களை சேமித்தல்
- நீடித்து இருப்பதற்காக அதிகமாக ஊக்கப்படுத்தல்.
- சமூக பிணைப்பை உண்டாக்குதல்/ உருவாக்குதல்
நோக்கங்கள்
- உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சினைகளுக்கு விவரம் கொடுத்தல்
- சுய உதவி முறையை உருவாக்குதல்
- ஒருங்கிணைத்து வளங்களை கொடுத்தல்
- உறுப்பினர்கள் பொருளாதார அளவுக்கோலினை தாண்டுதல்
- பயிற்சி மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான மேடையை உருவாக்குதல்
- தொழில் முறை மற்றும் பயிற்சி செயல்களுக்கு முக்கியத்துவம் வழங்குதல்.
குழுவின் செயல்பாடுகள்
- கூட்டங்களை நடத்துதல்
- தகவல்களை பரிமாறிக் கொள்வதில் ஈடுபடல் (இதர குழுக்களுடன் சேர்ந்து)
- தொழில் நுட்ப பயிற்சி பெறுதல்
- வயல் சோதனை நடத்துதல்
- மொத்த விற்பனை மற்றும் வாங்குதல் செய்தல்
- சந்தை பின்னலை ஏற்படுத்துதல் மற்றும் சந்தை நிலவரத்தை வரைதல்
- தனிப்பட்ட நபர்களின் தேவைகளுக்கு உறுதுணையாக இடுதல்
- குழுவின் செயல்பாடுகளுக்கு சுழற்சி நிதியை மேலாண்மை செய்தல்
- தொழில் முறை மற்றும் பொருள் வாய்ப்புகளை அறிதல்
- தனிப்பட்ட நபர்களால் களைய முடியாத பிரச்சினைகளுக்கு, பணம் செலுத்தி வழி காணுதல்.
- தனிப்பட்ட நபர்களிடம் இல்லாத பணத்தை கொடுத்து உதவுதல்.
குழுவின் குணாதிசயங்கள்
- குறிப்பிட்ட செயல்களை நோக்கி செயல்பாடுகள்
- ஒரு தலைப்பு
- குறைந்த நாள்
- குழுவின் உறுப்பினர்கள் வேறுபட்ட ஆர்வத்துடன் இருத்தல்.
குழு உருவாக்குவதற்கு முதலில் தேவையானவைகள்
குழுவின் தலைப்பை முடிவெடுத்தல்
குழுவின் தலைப்பை முடிவெடுக்க கீழ்க்கண்ட வழிகளை பின்பற்ற வேண்டும்.
பிரச்சினைகளை கண்டறிதல்:
நீங்கள் மற்றும் உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்கள் தொழிலைப் பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள். நீங்கள், தினந்தோறும் நடக்கும் பிரச்சினை மற்றம் காரணங்கள் அறிந்திருப்பீர்கள் ஆனால் வெளியாட்கள், அதை புரிந்துக்கொள்ளவோ அல்லது காணவோ தேவையில்லை. எனவே, நீங்கள் அதை அடுத்தவர்களுடன் கலந்து ஆலோசிக்கவும்.
தேவைகளை முழுவதுமாக பெறுதல்
நீங்கள் உங்கள் பிரச்சினைகளை களைய தேவையானதை கண்டறிந்திடுக. இதை குழுவாகவோ அல்லது விரிவாக்க பணியாளர்களின் உதவி கொண்டோ அல்லது உங்களுக்கு வழிகாட்டக்கூடியவர்களைக் கொண்டோ உங்கள் தேவைகளை அறிக.
எடுத்துக்காட்டுக்கு
தேவைகளின் பொதுவான வகைகளை அறிதல்
- தொழில்நுட்ப உதவி கொண்டோ அல்லது மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை கொண்டோ உற்பத்தியை மேம்படுத்துதல்.
- புதிய பொருள்கள் அல்லது தொழில்களை, அறிமுகப்படுத்த, மாதிரிகளை செய்து காட்ட அல்லது மேம்படுத்தி செய்ய தொழில்நுட்ப உதவியைப் பெறுதல்.
- புதிய அணுகுமுறையை செயல்படுத்தலாமா என்பதை தொழில்நுட்ப உதவி கொண்டு முடிவெடுத்தல்.
குழுவின் தலைப்பைக் கண்டறிதல்
தங்களின் தேவைகளுக்கு உருவாக்கப்பட்டவைகள், தனிப்பட்ட நபர்களை விட குழுவினரால் நல்ல திறம்பட செய்யக்கூடியதாக, தலைப்பு நோக்கி இருத்தல் வேண்டும். தலைப்பானது, தனிப்பட்ட உற்பத்தி பிரச்சினையாகவோ அல்லது தேவையாக இல்லாமல், அது பொருள்களின் விற்பனையை மேம்படுத்தக் கூடியதாகவோ அல்லது லாபத்தை அதிகப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த பிரச்சினையோ தேவையோ, உங்களின் விற்பனையை அதிகப்படுத்தக்கூடியதாகவோ, உங்கள் பொருள்களில் விலையை மேம்படுத்தக் கூடியதாகவோ இல்லையெனில், குழு அத்தகைய தேவையை நோக்கி இருந்தால், குழுவின் ஆர்வம் விரைவாக குறையக்கூடும். உங்களின் தொழிலில் ஏற்படக்கூடிய பிரச்சினை அல்லது தேவைகளைப் பற்றி ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் அறிந்திருப்பீர்கள். அப்படி உங்களுக்குத் தெளிவாக தெரியாவிடில், பின்வரும் முறைகளை அறிய உதவி செய்யும்.
பிரச்சினைகளுக்கு அறிவுகிளர்ச்சி மூலம் தீர்வு காணுதல்
எடுத்துக்காட்டு: லாபத்தையோ வருமானத்தையோ குறைக்கக் கூடியதான நெல்லில் குறைந்த மகசூல், மாவில் வண்டுத்துளைப்பானின் தாக்குதல் மக்காச்சோளத்தை அறுவடை செய்ய அதிக காலம் எடுத்தல் போன்றவை ஒவ்வொரு பிரச்சினைக்கும், தேவைகளின் வகையை கண்டறிதல் எடுத்துக்காட்டு/ உதாரணம்:
நெல்லில் குறைந்த மகசூல் உற்பத்தியை மேம்படுத்த தொழில்நுட்ப உதவியை நாடுதல் அல்லது புதிய தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துதல்.
தேவைகளை பட்டியலிடுதல்
உங்களின் விருப்பத்திற்குகேற்றபடி, உங்களின் தேவை சிறியதாகவோ அல்லது நீண்டதாகவோ இருக்கலாம். அதில், குழு உபயோகமானது, செய்யக்கூடியது என்பதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
உங்களுடைய குழு உறுப்பினர்களிடம் விவாதித்து, முடிவெடுத்து அதை செயல்படுத்து செயல்களில் ஒரு தேவையைத் தேர்ந்தெடுத்து அதில் முதலில் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும். அதுவே குழுவின் தீர்வு அல்லது தலைப்பாகும். நீங்கள் ஒரு தலைப்பில் செயல்பட வேண்டும். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகளில் ஈடுபட வேண்டுமெனில், ஒன்றுக்கு பின் இன்னொன்றை செய்யக்கூடியதாகவும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குழுவோ தேவைப்படும்.
குழுவின் பொறுப்புகள்:
விவசாயி ஆர்வ குழுவில், பொதுவாக தீர்வுக்கான, ஒவ்வொருவரும் இணைந்து செயல்பட்டாலும், குழு ஒரு குழு தலைவரை தேர்வு செய்து, அவர் இதர உறுப்பினர்களுக்கு, புத்தகத்தை பொறுப்பாக வைத்திருத்தல். பதிவை பாதுகாத்து வைத்திருத்தல் போன்ற பொறுப்புகளை செய்ய பணிக்க வேண்டும்.
எப்போது பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்?
குழு என்ற கருத்து உருவாகும் போதும், ஆரம்பக்கால உருவாக்கத்தின் போதும், ஒரு தலைவர் இயற்கையாக உருவாகிவிடுவார். மக்கள், குழு என்ற கருத்தோடு வரும்போதே, பொறுப்புகள்/ வழிகள் இயற்கையாகவே ஆரம்பமாகிவிடும். இந்த வழிகளின்/ முறைகளில் செயல்களில் ஆர்வத்தை உருவாக்குதல், விவாதத்தை தொடங்கி வைத்தல் ஆர்வமான கருத்துக் கூட்டத்தை தயாரித்தல் மற்றும் பங்கேற்றல் என்பன போன்றவை நடக்கும். குழு தோன்றுவிக்கும் கூட்டத்தின் போது, தேவையான பதவிகளுக்கு தலைவர்கள் மனுத்தாக்கல் செய்யப்பட்டு, ஓட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நடைமுறை தலைவர் பொறுப்புக்கு ஓட்டு மூலம் தேர்வு செய்வது போல் ஆரம்ப தலைவர் தேர்வுக்கு தேவையில்லை.
என்ன என்ன தலைவர் பொறுப்புகள் உள்ளன?
குழுவுக்கு குழு உண்மையான தலைவர்களின் தேவை மாறுபட்டாலும் ஒவ்வொரு குழு, கீழே கொடுக்கப்பட்ட பொறுப்புக்காவது தலைவர்கள் தேவை.
வேலை தகுதி |
|
பொறுப்பு |
குழு தலைவர் |
: |
கூட்டுத்தலைவர், குழுவின் பிரதிநிதி, மொத்த மேலாண்மை பொறுப்பு, பேச்சாளர், இணை - நிதி கையெழுத்திடுபவர் |
இணை குழு தலைவர் |
: |
குழு தலைவர் இல்லாவிடில் இவர் அதற்கு ஈடு செய்வார். குழு தலைவருக்கு உதவி தேவைப்படும். இவரின் கருத்துகளை குழு தலைவருடன் பரிமாறிக் கொள்ளுவார். |
செயலாளர் |
: |
தகவல் தொடர்பு
வங்கி, தயாரித்து அனுப்புதல், ஒவ்வொரு நிமிடத்தை எடுத்து அதற்கான செயல்களை செய்ய வகுப்பார். |
கருவூலஅதிகாரி/புத்தக காப்பாளர் |
: |
குழுவின் பொருளாதார அறிக்கையேடுகளைக் காத்தல். வங்கி கணக்கு மற்றும் இருப்பு பணத்திற்கு கரு பொறுப்பு சுழல் நிதியை மேலாண்மை செய்தல், உறுப்பினர்களிடமிருந்து கட்டணம் வசூலித்தல், கடன் வசதிகள் ஏதும் இருந்தால் அதை மேலாண்மைச் செய்தல். இணை - நிதி கையெழுத்திடுபவர். |
பதிவு / கோப்புகள் காப்பாளர் |
: |
கோப்புகள் மற்றும் மேற்கோள் ஏடுகள்/ நூல்கள் சேமித்தல் மற்றும் பாதுகாத்தல் |
இத்தோடு, குழுவின் செயல்பாடுகளுக்கு, தனித்தனி செயல்களுக்கு சிறப்பு தலைவர்கள் இருப்பார்கள். குழுவின் அளவு மற்றும் தேவைக்கு ஏற்ப, சிலவற்றின் செயல்பாடுகளை பலரும் கவனிப்பார். ஆனாலும் அது குழுவைப் பொறுத்தது.
ஆர்வத்தை அறியும் கூட்டம்/தயாரிப்பு பணிகள்:
உங்களின் கருத்துக்களின் மீது, போதுமானவர்கள் ஆர்வத்துடன் உள்ளார்கள் என நீங்கள் நினைத்தால், நீங்கள் ஆர்வத்தை அறியும் கூட்டத்தை நடத்தலாம். இந்த கூட்டமானது போதுமான ஆர்வம் இருக்கிறதா என அறியும் சாதாரணக் கூட்டமே.
ஒருவருக்கும் ஆர்வமில்லையெனில், நீங்கள் ஒரு வெற்றிகரமான குழுவை அமைக்க முடியாது. நீங்கள் உங்கள் அருகிலுள்ளவர்களிடம் பேசியோ அல்லது கூட்டத்தை கூட்டியோ, ஆர்வத்தை உருவாக்கி கொள்ளலாம். ஆனாலும் அது குழு உருவாக்குவதற்கு போதுமானதாக இருக்கும் என அறிந்து அமைக்கலாம்.
- ஆரம்ப கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுத்தல்
- உண்மையான கருத்துக்களை உருவாக்கக்கூடிய எல்லோரை அழைத்தும் ஆர்வமுள்ள இதர கிராம உறுப்பினர்களை பொதுவாக அழைக்கவும் செய்தல்.
- அநேக பங்கேற்பாளர்களுக்கு உகந்த இடத்தையும் நேரத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும். கிராமத்திலுள்ள சமூக கட்டடம் அல்லது கிராமத்தினர் வீடே நல்லது.
குழு தோற்றுவிக்கும் கூட்டம்
போதிய அளவு குழு உருவாக்குவதற்கு உதவு/துணை இருப்பதாக அறிந்தால், நீங்கள் முதல் கூட்டத்தை நடத்தலாம். கீழ்க்கண்டவற்றை, முதல் கூட்டம் நடத்தும்போது நினைவில் கொள்ள வேண்டும்.
- கூட்டத்தின் தலைப்பு அல்லது விளைவை அமைத்தல்
- உறுப்பினர் விவரத்தை/பட்டியலை முடிவெடுத்தல்
- தலைவர்களை தேர்ந்தெடுத்தல்/ஒருங்கிணைத்தல்/மேலாண்மை செய்தல்
- செயல்படுத்தக்கூடிய திட்டத்தை வரைதல்
- கட்டணத்தை நிர்ணயித்து சேகரித்தல்
- புத்தகத்தை வைத்திருக்க வேண்டிய முறைகளை விவாதித்து, ஆரம்பித்தல்
- நடைமுறைகளை விவாதித்து கடைபிடித்தல்
- கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டவைகளை அஜெண்டா மற்றும் காலம் உட்பட சேகரித்து ஆவணம் தயாரித்தல்.
அந்தந்த மாவட்ட பதிவு துறை, மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திலிருந்து சங்கம் அமைக்க
தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். |