விவசாயிகள் பயிற்சி

மான்காது வேலமரம்

பிறப்பிடம்: 4-6 வருடங்கள்

இடைவெளி: 2 X 2 மீ (அ) 1 X 4மீ

விதையளவு: 2500 செடிகள் /எக்டேர், சுமார் 100 கிராம் / எக்டேர்

செய்யவேண்டிய சாகுபடி முறைகள்: சட்டிக் கலப்பையைக் கொண்டு ஒருமுறை உழவு செய்ய வேண்டும். 30X30X30 செ.மீ. அளவுள்ள குழிகள் தோண்ட வேண்டும். செம்மண் கலந்த வண்டல் மண் சாகுபடிக்கு ஏற்றது.

நாற்றங்கால்: விதைகளை வெந்நீர் கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும். இதன் மூலம் 96% விளை முளைப்புத் திறனை ஏற்படுத்தலாம். விளைமுளைப்புத் திறன் 6-7 வருடங்கள் வரை வீரியமாகவே இருக்கும். 10 X 20 செ.மீ. அளவுள்ள நெழிதாள் பைகளில் 3:1:1 எனும் விகிதத்தில் மண் மணல் : எரு கலவையை நிரப்பி அதில் ஒரு விதை வீதம் ஊன்ற வேண்டும். நான்கு முதல் 5 மாதங்கள் வரை சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர்க்கப்படுகிறது.

நடவு: வட கிழக்குப் பருவமழை தொடங்கி ஒரு மழை பெய்தவுடன் நடவு செய்ய வேண்டும். மழைநழுர் தேங்குமளவு 50 செ.மீ. சுற்றளவில் வரப்புயர்த்தி வைத்தல் நல்லது.

களைக்கட்டுப்பாடு: தேவையற்றது.

பயிர்பாதுகாப்பு: குறிப்பிடத் தக்க பூச்சி நோய் தாக்குதல் எதுவுமில்லை.

அறுவடை : நான்கு வருட முடிவிற்குப் பிறகு தரைக்குமேலுள்ள கட்டைகளின் பருமன் சுமார் 60 டன்கள்/எக்டேர் கிடைக்கும்.

சிறப்பியல்புகள்:மானாவாரியில் நன்கு வளரக்கூடியது. வேர்களில் ரைசோடியம் முடிச்சுகளை உடையது. மிகக் குறைந்த மழைப்பொழிவுள்ள பகுதிகளிலும் (600-800MM) வளரும் தன்மையுடையது. மேலும் கார மற்றும் சரளை மண்ணிலும் சிறப்பாக வளரும். இதன் கட்டை மிகக்  குறைந்த ஈரப்பதமுடையது (25%) அதிக முட்கள் கிடையாது. மேலும் இலைத் தண்டு இலையாக செயல்பட்டு ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகிறது.

பயன்பாடு: எரிபொருள் மற்றும் தீவனம்

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016