வேளாண் காடுகள் குறிப்பிட்ட நிலப்பரப்பில் பயிர்கள் மற்றும் கால்நடைகள் இணைந்த நிலப்பயன்பாட்டுத் திட்டங்களின், இணைந்த சேர்க்கை முறையாகும்.
இக்கூட்டு முறையானது
- அடிப்படை மூலாதாரத்தைப் பாதுகாப்பதோடு பன்முக விளைபொருட்களை உற்பத்தி செய்வது
- தாயகத்தின் பன்முகத்தன்மைகொண்ட மரங்கள் மற்றும் புதர்களை வளர்ப்பது
- மிகக் குறைவான இடுபொருட்கள் மற்றும் எதிர்மறையான சுற்றுச் சூழலுக்கும் பொருத்தமானதாகவும்
- நிலப்பயன்பாட்டுத் திட்டத்தை மட்டுமல்ல, சமூக பொருளாதார பண்பாட்டுத் தளங்களுக்கு உகந்ததாகவும், மற்றும்
- செயலமைப்பு ரீதியாக ஒருமுகத்தன்மையை விட சிக்கலானது
- வேளாண் காடுகள் என்பவை எவ்வித நிலப்பயன்பாட்டிற்கும் உகந்த, ஒரலகு நிலப்பரப்பில் வேளாண் பயிர்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றின் உற்பத்தியை நிலைநிறுத்துவது அல்லது அதிகரிப்பதுடன், அதன் நிர்வாக செயல்முறைகள், சமூக பண்பாட்டிற்கேற்றவாறு உள்ளூர் மக்களின் சூழலியல் மற்றும் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டது.
- வேளாண் காடுகள் எனும் சேர்க்கைப் பெயரானது ஒரலகு நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற மரங்கள், கால்நடைகள் மற்றும் உணவுப் பயிர் உற்பத்தி ஆகியவற்றை இணைத்து ஒரு குறித்த வரிசையில் நிரந்தரமாகவோ அல்லது நிலையான அடுக்குமுறையிலோ மேற்கொண்டு விளைச்சலை நிலைநிறுத்தி அதிகப்படுத்துவதாகும். வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் பொருளாதாரம் மற்றும் சூழலியலுக்கிடையேயான பிணைப்பையும், அவைகளின் திட்டப்பிரிவுகளையும் உள்ளடக்கியது.
சமூகக்காடுகள் மரபுரீதியான காடுகள் அல்ல, அவை மக்களின் நுகர்வுப் பொருட்கள், சேவைகள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு ஏற்படுத்தப்படுவதாகும். இவ்வரையறை உள்ளூர் மக்களின் வனப்பொருட்கள் தேவைகளை நிறைவு செய்கின்ற நோக்கமுடையது. சா(1985) வரையறுத்தபடி சமூகக்காடுகள் உள்ளூர் மக்களின் எரிபொருள், கால்நடைத்தீவனம் போன்றவற்றை எவ்வித் தடையுமின்றி நிறைவு செய்கின்ற கருத்தியல் உடையது. |