நோய் மேலாண்மை
கொண்டை வாகை

இயற்கை வாழிடம் மற்றும் வகைப்பாடு:

இம்மரங்கள் பெரும்பாலும் நீர் வளம் பொருந்திய வண்டல் மண் பிரதேசங்களில், ஈரம் நிறைந்த பகுதிகளில் பரவியுள்ளன. இவை இமயமலையின் அடிவாரப் பகுதிகளிலும் யமுனைக்கு கிழக்கே மேற்கு வங்காளம் வரையிலும், சாத்பூரா தொடர்ச்சி, குஜராத் தென்னிந்தியா மற்றும் அந்தமான் போன்ற இடங்களில் பரவலாக காணப்படுகின்றன. மேலும் மிதமான வறண்ட பகுதிகளிலும் காணப்படுகின்றன. இது ஒளி நோக்கு தாவரமாகவும் மிதமான நிழல் விரும்பித் தாவரமாக விளங்குகின்றது. இது வறட்சி எதிர்ப்புத் திறனுள்ளதாகவும் ஆனால் பெரும்பனியால் பெருமடுப்பிலும் பாதிக்கப்படுகிறது. இவை வயது முதிர்ந்த நிலையில், மண்ணிலிருந்து வெளிப்படும் வேர்கள் செடிகளாக முளைக்கின்றன. கொண்டை வாகை மரங்கள் வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகளிலும் மற்றும் வடக்கு மித வெப்பமண்டல அகன்ற இலைக்காடுகளிலும் காணப்படுகின்றன. இங்கு அதிகபட்ச நிழல் வெப்பநிலை 360 செ.முதல் 460 செ ஆகவும் குறைந்த வெப்பநிலை -1 செ. மற்றும் 180 செ வரையிலும் வருட மழைப்பொழிவு 1000-5000 மி.மீ ஆக நிலவுகிறது. இம்மரம் லெகூமினேசியே குடும்பத்தையும், மிமோசாய்டே எனும் துணைக் குடும்பத்தையும் சார்ந்தது.

நடவு செய்யப்படும் இடம் மற்றும் ஆய்த்தங்கள்:

வண்டல் மண் பிரதேசங்களில் இம்மரம் சிறப்பாக வளர்கிறது. மேலும் இத்தாவரம் மிதமான அமில கார நிலையிலும் வளரக் கூடியது. தோப்புகளில் நடப்படும் முன் தேவையற்ற மரங்கள் மற்றும் தாவரங்கள் வெட்டப்பட்டு எரிக்கப்படவேண்டும். 30 செ.மீ X30 செ.மீ. X30 செ.மீ. அளவுள்ள குழிகளில் கோடைக்கு முன்னரே தோண்டப்படுகின்றன. மேலும் இவை நிழலொட்டி மரங்களாக வளர்க்கப்படுகின்றன. மேலமு் இத்தாவரங்கள் கால்நடைகளின் மேய்ச்சலினால் முழுவதுமாக பாதிக்கப்படுகின்றன. இத்தோட்டங்கள் கம்பிவேலிகள் அமைப்பதன் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.

நடவு செய்தல்: இம்மரத்தின் தண்டுப்பகுதிகள் பருவ மழைப்பொழிவுகளின் இடைவெளிகளில் நடப்படுகின்றன. சிறிய மற்றும் பெரிய ஒராண்டு நிரம்பிய இளஞ்செடிகள் பருவநிலைக்கு ஏற்றவாறு நடப்படுகின்றன. சிறிய இளஞ்செடிகள் வெற்றிகரமாக வளர்கின்றன.

இடைவெளி: அசாம் மற்றும் வடக்கு வங்காளம் ஆகிய இடங்களில் 2 முதல் 3 மீ வரிசை இடைவெளியில் கடைப்பிடிக்கப்படுகிறது.  இளஞ்செடிகள் முதலாண்டுகளில் இடைவெளிகளில் நடவு செய்யப்படுகின்றன. தண்டுகள் நடவிற்கு 2 மீ X2 மீ (அ) 3 மீ X 3 மீ இடைவெளிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. வயல்வெளிகளைச் சுற்றிலும் ஒற்றை வரிசையில் 3 மீ (அ) இடைவெளிகளில் நடப்படுகின்றன.

கலப்புத் தோட்டம்: உத்திரப்பிரதேசத்தில் உள்ள பாபர் பகுதிகளில் கொண்டை வாகை மரங்கள் கருங்காலி, தூக்கு கட்டி, முள்ளிலவு ஆகியவற்றுடன் வளர்க்கப்படுகின்றது. இவற்றின் பல்வரிசை மரங்கள் இருப்புப்பாதையின் ஒரங்கள், கால்வாய்கள் மற்றும் சாலையோரங்களில் வளர்க்கப்படுகின்றன.

உரமிடல்: ஒவ்வொரு மாதத்திற்கும் 75 கி சூப்பர் பாஸ்பேட் மற்றும் ரைசோபியம் நுண்ணுயிர் கொண்ட திரவம் அளிக்கப்படுகிறது. இது இளஞ்செடிகள் வேகமாக வளர்வதற்குப் பயன்படுகிறது.

நீர்ப்பாசனம்: ஈரம் நிறைந்த பகுதிகளில் எவ்வித நீர்ப்பாசனம் தேவையற்றவை. நல்ல வளர்ச்சிக்காக வறண்ட கோடைகளில் நீர்பாசனம் தேவைப்படலாம்.  மூடாக்கிடுதல் () ஈரப்பதத்தினை தக்க வைப்பதற்கு சிறப்பானதாக பரிந்துரைக்கப்படுகிறது.

களையெடுப்பு: ஆண்டுக்கு ஒரு முறையென மூன்றாண்டுகள் களை நீக்கம் செய்தல் அவசியம். படரும் கொடிகள், வேறு சில களைச் செடிகளை போட்டி ஏற்டமெலிருக்க நீக்க விட வேண்டும்.

சுத்தப்படுத்துதல் மற்றும் அடர்த்தி குறைப்பு:இத்தகைய சாகுபடி நுட்பங்கள் மரவளர்ப்பியலுக்கு ஏற்றவாறு மேற்க்கொள்ளப்படுகிறது.

அறுவடை: பொதுவாக டிசம்பர் மற்றும் மே மாதங்களில் மேற்க்கொள்ளப்படுகிறது. கணியுறைகளோடு விதைகள் உள்ளபோதே சேரிக்கப்பட வேண்டும்.  இல்லையெனில் வேறுசில பூச்சிகள் மற்றும் வண்டுகளால் சேதமடைந்து விடக்கூடும். தீவனத்திற்காக அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தைப்படுத்தல்: இதன் கடின மரங்கள் அனைத்தும் இந்தியாவெங்கும் வாங்கப்படுகிறது. கட்டைகள் காகிதத்தயாரிப்பு மற்றும் தட்டிப்பலகைகள் மற்றும் தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் பட்டைகள் சாயத் தயாரிப்பிலும் பயன்படுகின்றன.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016