வனவியல் தொழில்நுட்பங்கள்


வனவியலில் ஒப்பந்த பயிர் வளர்ப்பு

வரையறை
ஒப்பந்த பயிர் வளர்ப்பின் குறிக்கோள்கள்
ஒப்பந்த பயிர் வளர்ப்பின் வகைகள்
பின்வருவனவற்றில் ஒப்பந்த பயிர் வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

 


வரையறை

மேலே

ஒப்பந்த பயிர் வளர்ப்பு என்பது விவசாயி மற்றும் நிறுவனத்திடையே வாக்கு மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ, ஒன்று அல்லது அதற்குமேல் உற்பத்தி நிபந்தனைகள் மற்றும் விவசாயப் பொருளின் வர்த்தகம் குறித்து போடப்படும் ஒப்பந்தமாகும். பயிர் ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும் மற்றும் நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் விவசாயிகளுடன் முடிவெடுக்கும் அதிகாரத்தை பகிர்ந்துக் கொள்வர். விவசாயி தன் வசம் இருக்கும் நிலம் மற்றும் உற்பத்திக்குத் தேவையான வேலை ஆட்களை வழங்குவார் உற்பத்தி, இடுபொருள் விவரம், சந்தை வசதி, மேற்பார்வை மற்றும் உற்பத்தி முடிவுகள் போன்றவற்றில் நிறுவனம் தனது புங்கை வழங்கும் (வாட்ஸ், 1994).

ஒப்பந்த பயிர் வளர்ப்பின் குறிக்கோள்கள்

மேலே

  1. நடவுப் பொருட்கள் வழங்குதல்
  2. பயிர் உற்பத்தி வழிக்காட்டுதல்
  3. வங்கிக் கடன் வாங்குவதற்கு உதவுதல்
  4. நிச்சியிக்கப்பட்ட வாங்கும் ஒப்பந்தம்

ஒப்பந்த பயிர் வளர்ப்பின் வகைகள்

மேலே

இடர்களை பகிர்தல் மற்றும் ஒப்பந்த விதிமுறைகளின் வரியறைகளைப் பொருத்து பல்வேறு ஒப்பந்த வகைகள் வேறுபடும். மேலாண்மையின் பார்வையில், இரண்டு வகையான ஒப்பந்தங்கள் இருக்கின்றன.

கட்டுப்படுத்தப்பட்ட மேலாண்மை ஒப்பந்தம்

விவசாயி உற்பத்தி இடுபொருட்களை பெற்று பின்னர் விளைபொருட்களை நிறுவனத்திற்கு விற்க வேண்டும். விளைபொருளின் விலையிற்கு எந்தவித உண்மையான உத்திரவாதமும் இல்லை.

முழுமையான மேலாண்மை ஒப்பந்தம்

விவசாயி மற்றும் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவு உற்பத்தியிற்கு ஒப்பந்தம் அப்பருவத்திற்கு முன்னரே விலை அறிவிக்கப்பட்டு விடும், அதனால் விலை இடர்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவ்விளைபொருட்களுக்கான சந்தையை நிறுவனமே ஏற்படுத்திக் கொடுக்கும்.
கோள்ஸ் மற்றும் உள் (1985), ஒப்பந்தங்களை மூன்று வகையாக வகுத்துள்ளனர்.

சந்தை வரியறை ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தம் அறுவடைக்கு முன்னரே நிறுவனம் மற்றும் விவசாயி இடையே பயிர் விற்பனை குறித்து போடப்படும். விலை, தரம் மற்றும் விளைபொருள் விநியோகிக்கும் நேரம் முதலியவை முன்பே தீர்மானிக்கப்படும்.

வழிவகைகள் வழங்கும் ஒப்பந்தம்

ஒப்பந்தத்தில் ஒப்பந்த நிறுவனம் உற்பத்திக்குத் தேவையான இடுபொருட்கள், விரிவாக்கம் அல்லது கடன் போன்றவைகளை சந்தை ஏற்பாடுகளுக்கு பதில் செய்து கொடுக்கும்.

மேலாண்மை மற்றும் வருமான உத்திரவாத ஒப்பந்தம்

மேலே குறிப்பிட்டுள்ள உற்பத்தி மற்றும் சந்தை இரண்டும் இதில் சேர்த்துக் கொள்ளப்படும். மேலும் சந்தை மற்றும் விலை இடர்கள் விவசாயிகளிடமிருந்து நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும் மற்றும் விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் நிச்சியிக்கப்பட்டதாக இருக்கும். ஆனால் ஒப்பந்த நிறுவனம் குறிப்பிட்டத்தக்க விவசாயின் மேலாண்மையின் பொறுப்பை ஏற்கும்.

பல்வேறு விதமான ஒப்பந்தங்கள் கீழே குறிப்பிட்டுள்ள அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வ.எண்

ஒப்பந்த வகைகள்

இடுபொருட்கள் வழங்குதல்

விளைப்பொருட்களான சந்தையை ஏற்படுத்துதல்

விலை உத்திரவாதம்

வருமான உத்திரவாதம்

1.

கட்டுப்படுத்தப்பட்ட மேலாண்மை ஒப்பந்தம்

ஆம்

ஆம்

இல்லை

இல்லை

2.

முழுமையான மேலாண்மை ஒப்பந்தம்

ஆம்

ஆம்

ஆம்

இல்லை

3.

சந்தை வரியறை ஒப்பந்தம்

இல்லை

ஆம்

ஆம்

இல்லை

4.

வழிவகைகள் வழங்கும் ஒப்பந்தம்

ஆம்

ஆம்

இல்லை

இல்லை

5.

வருமான உத்திரவாத ஒப்பந்தம்

ஆம்

ஆம்

ஆம்

ஆம்



 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014