வனவியல் தொழில்நுட்பங்கள் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அறிமுகம் வனவியல் விரிவாக்கம் மற்றும் மேல்விளக்க மூலகம், தமிழ்நாடு காடு வளர்ப்புத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக விளங்குகின்றது. விரிவாக்கம் மற்றும் மேல்விளக்க செயல்பாடுகளை வனவியல் விரிவாக்கப் பிரிவு, நான்கு வனவியல் விரிவாக்க மண்டலங்களின் மூலம் தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 1998 முதல் ஆரம்பிக்கும். திருச்சி, அரசனூர் (மதுரை), ஜீனு (கிருஷ்ணகிரி) மற்றும் பொன்னாங்குடி (திருநெல்வேலி) போன்ற இடங்களில் மண்டலங்களின் தலைமையகம் அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் TAPயின் கீழ் 25 விரிவாக்க மற்றும் மேல்விளக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவாரூரில் ஒரு விரிவாக்க மற்றும் மேல்விளக்க மையம் கட்டமைப்பு நிலையில் உள்ளது. இவ் 29 மையங்களிலும் நன்றாக வசதியுள்ள பயிற்சிக் கூடம் அருங்காட்சியகம் மற்றும் செயல்விளக்க பகுதி, உயிர் உரம் மற்றும் உயிர் ஊட்டம் பொருள் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வனவியல் விரிவாக்க செயல்பாடுகள் இந்த 4 வனவியல் விரிவாக்க மையங்கள் மற்றும் 25 விரிவாக்கம் மற்றும் மேல்விளக்க மையங்கள் மூலமாகவே செயல்பட்டு வருகின்றது. விரிவாக்க மையங்களின் இருப்பிடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
தமிழ்நாட்டில் வனவியல் விரிவாக்க திட்டத்தில் பயிற்சி அளிப்பது ஒரு முக்கிய செயல்பாடகும். வனவியல் விரிவாக்க மையத்தில் வேலை செய்யும் வனவியல் அலுவலர்கள் மற்றும் வனவியல் விரிவாக்க மையங்களிலும் விவசாயிகளுக்கு முறையாக பயிற்சிகள் குறிப்பிட்ட கால இடைவேலைகளில் நடத்தப்படும். பயிற்சியில் லாபகரமான மரங்களை வளர்ப்பதில் உள்ள மேம்பாட்டுத் தொழில்நுட்பங்கள் மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் போன்றவைகள் விவசாயிகள் மற்றும் கலைஞர்களுக்கு பயில்விக்கப்படும். இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு வனங்களின் முக்கியத்துவத்தைக் குறித்த சுற்றுச்சூழல் கல்வி பயில்விக்கப்படும். மர நாற்றுகள் வளர்த்தல் மருந்துச் செடி சாகுபடி செய்தல், தேனீ வளர்த்தல், மண்புழு உரம் தயாரித்தல், மற்றும் வேர் உட்-பூசணம் தயாரித்தல் போன்ற வருமானங்கள் கொடுக்கும் செயல்பாடுகளுக்கு நேரடியாக கிராமப் பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இதுவரை அனைத்து நிலையங்களின் மூலம் 10560 விவசாயிகள், 12630 சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் 1320 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். செயல்விளக்க முறை என்பது மக்களுக்கு மர வளர்ப்பதில் உள்ள மேம்பாட்டுத் தொழில்முறைகள் செய்து காட்டுதலாகும். விவசாயிகளின் ஈடுபாடோடு விவசாய நிலங்களில் செய்து காட்டிய பரப்பளவு.
முள்ளில்லா மூங்கில், காசவரினா ஜங்குனியானா, ஐலாந்தல் யக்சல்சா, மீரியா தூபியா போன்ற விரைவாக வளரக் கூடிய அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் வறட்சியைத் தாங்கக் கூடிய மர இனங்களை விவசாய சமுதாயத்திற்கு இச்செயல்பாடுகள் மூலம் அறிமுகம் செய்யப்படுகின்றது. மேலும் மரக் கன்றுகள் மற்றும் அதிக மதிப்புடைய ஒட்டுகளை 50% மானியத்தில் பொதுமக்களுக்கு தங்கள் வயல்களில் நட விற்கின்றனர். அதிக மதிப்பு வரவு மற்றும் வறட்சியை தாங்கக் கூடிய இரகங்களை தனியார் விவசாய நிலங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் 50000 நாற்றுகள் என்ற விகிதத்தில் 2007-2008ல் விரிவாக்க பிரிவு மட்டுமே நடவு செய்வதற்கு முன்மொழியப்பட்டது. மண்புழு உரம் மற்றும் வேர் உட் பூசணம் தயாரித்தல் மண்புழு உரம் மற்றும் வேர் உட்-பூசணம் தயாரிக்கும் கட்டமைப்புகள் அனைத்து வனவியல் விரிவாக்க மையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மண்புழு உரம் தயாரிப்பதை செய்வதற்கு ஆர்வமாக உள்ள தனி நபர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களும் மண்புழு உரம் தயாரிப்பதன் பல்வேறு அம்சங்களில் பயிற்சி அளிக்கப்படுகின்றது. விரிவாக்க மையங்களில் தயாரிக்கப்படும் மண்புழு உரம் மற்றும் வேர் உட்-பூசணம் இப்பொழுது துறை உபயோகத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது. மற்பாடு, மண்புழு உரம் மற்றும் வேர் உட் பூசணம் பொதுமக்களுக்கு விற்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வனைத்து செயல்பாடுகளும் 4 வனவியல் விரிவாக்க அலுவலர்கள் 17 ரேஞ்சர்கள் மற்றும் 17 வனச்சரகர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. உயிர் உரம் மற்றும் விதை கிடைக்கும் தன்மை நவீன நாற்றங்கால் பிரிவு, தருமபுரியில் உற்பத்தி செய்யப்படும் உயிர் உரங்கள் மற்றும் அதன் அளவுகள்.
ஆதாரம்: |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014 |