வனவியல்

விதைக்கரணைப் பெருக்கம்

நெருக்கு ஒட்டுகட்டுதல், மொட்டு ஒட்டுக் கட்டுதல், பதியன் போடுதல் ஆகிய போத்துக்கள் மூலம் நடவு செய்யும் முறைகள் பொதுவாக வெகு சீக்கிரம் பயனளிப்பதில்லை. சாதாரண பொதுக்கள் மூலம் ஒவ்வொரு தண்டுத்துண்டும் ஒரு தாவரமாகத்தான் வளர முடியும். ஆனால் விதைக்கரணைப் பெருக்கம் மூலம் ஆயிரக்கணக்கான தாவரங்களை உருவாக்க முடியும். இந்த முறை மரப்பயிர்களுக்கும் மிகவும் அதிகமாக பயன்படக்கூடிய ஒன்றாகும். ஏனென்றால் மரப்பயிர்களுக்கும் பழப்பயிர்களுக்கும் நீடிய இனப்பெருக்ககாலம் இருப்பதோடு மட்டுமல்லாமல் வேறுபட்ட காரணிகளாக இருக்கின்றன. உதாரணமாக தைல மரம், தேக்கு மரம் மற்றும் பழ மரங்களான தேங்காய் ஆகியவை தூய்மைஇன மரபை சேர்ந்தவை அல்ல. தமிழகத ்தில் உள்ள சந்திராப்புரத்தின் தைல மரத்திற்கும் “எலைட்” தேக்கு மரத்திற்கும் தற்போது திசு வளர்ப்பு முறைகள் கிடக்கின்றன.        
நோயில்லா தாவரங்களை பிரித்தெடுத்தல்
விதையில்லாப் பெருக்கத்தின் மூலம் வரும் சிற்றினங்களுக்கு வைரஸ் மூலம் நோய் தொற்றுதல் ஒரு பெரிய பாதிப்பாக உள்ளது. வளர்திசுக்களில் பொதுவாக வைரஸ் கிருமி தொற்றாது. இதனை அறிந்த மாரல் மற்றும் மார்டின் டாலியா தாவரத்தில் வளர்நுனி வளர்ப்பு  முறை மூலம் நச்சுயிரற்ற தாவரங்களை உருவாக்கினர். இந்த முறையானது எழுமிச்ச இனமரங்களிலும், ஆப்பிள் இனமரங்களிலும், செய்யப்பட்டது. இப்படி செய்வதன்மூலம் சத்தான வீரியமான அதிக விளைச்சல் தரக்கூடிய தாவரங்களை உருவாக்க முடியும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016