வனவியல் ::
மரங்களின் பண்பகப் பண்ணையை குளிர்முறை பாதுகாத்தல்:
தற்போதைய காலகட்டத்தில் மரபியல் வளங்கள் குறைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையை சீர்படுத்த மரங்களின் பண்பாகப் பண்ணையைக் குளிர்முறை பாதுகாக்கும் முறை மிகப் பயனுள்ளதாயிருக்கிறது. இந்த முறையில் உயிரணு, திசுக்கள் மற்றும் உறுப்புகள் ஆகியவையை உறையவைத்து நீண்ட காலம் பாதுகாக்க முடியும். இதன்மூலம் பண்பாக வங்கிகள் மற்றும் பண்பாகப் பண்ணையை பரிமாற்றம் செய்தல் ஆகிய இவ்விரண்டுமே இம்முறை மூலம் சாத்தியமே.

விதைக்கரணை களஞ்சியங்கள் மற்றும் பண்பகப் பண்ணை  
வளர்திசு வளர்ப்புகள் மற்றும் ஆய்வுக்கூட சோதனை முறையில் இளஞ்செடிகளை ஒரு அட்டபெட்டிக்குள் வைத்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல முடியும். உறைந்த அணுக்கள் மற்றும் திசுக்களை திரவ நைட்ரஜன் சிலிண்டர்களில் வான ஊர்தி மூலம் கொண்டு செல்ல முடியும். அதனால் பண்பகப் பண்ணையை உருவாக்குவது மிக பயனுள்ளதாக இருக்கும்.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016