விதைக்கரனை வனவியல்
மரங்களுக்கான  திசு வளர்ப்பு நுட்பங்கள்
பெருமளவு பெருக்கத்திற்கு தேவையான வசதிகள்:
அ. பொதுவான ஆய்வகம்
ஆ. ஊடகம் தயாரிக்கும் அறை
இ. உட்புகுத்தல் அறை
ஈ. வளர்ப்பு அறை
உ. கடினமாக்கும் அறை

அ. பொதுவான ஆய்வகம்

  • இரட்டை வாலை வடித்தல் அறை
  • கணப்பு அடுப்பு
  • அழுத்தக்கொப்பரை
  • சேமித்தல் அறை
  • கழுவும் தொட்டி

ஆ. ஊடகம் தயாரிக்கும் அறை

  • மின் தராசு
  • நுண்ணலை அடுப்புகார அமில அளவி
  • காந்த கிளறி
  • குளிர்பதனச் சாதனம்

இ. உட்புகுத்தல் அறை

  • காற்றுக் கட்டுப்பாட்டு அறையில் மேலே புற ஊதா விளக்கைப் பொறுத்தி அடுக்குப் பாய்வு அறையில் உருவாக்கி உட்புகுத்தல் பகுதியாக மாற்ற வேண்டும். கூட்டு நுன்பெருக்கி சேர்ந்த ஒளிப்பதிவு செய்யும் கருவியை பொருத்த வேண்டும்.

ஈ. வளர்ப்பு அறை
எல்லாவித திசு வளர்ப்பையும் நன்கு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் நமுக்க சூழ்நிலை, காற்றோட்டம், ஒளியின் தன்மை மற்றும் கால அளவு ஆகிய வசதிகளோடு உட்புகுத்தலை செய்யலாம். இதற்கு 25±2° C  வெப்பநிலை இருக்க வேண்டும். அடுக்குகள் பொருந்திய ஒளிர்வு விளக்குகள் (1000 – 10,000 லக்ஸ்) ஒளிக்கால அளவை சரியாக்கப் பயன்படுகிறது.    

உ. கடினமாக்கும் அறை
பனி பவள அறையில் நீர்த் திவலைத் தெளிப்பானைப் பொருத்த  வேண்டும். பின்பு இந்த அறையில் வைக்கப் பட்டுள்ள செடிகள் வெவ்வேறு ஒளிக்கும் நிழலுக்கும் காண்பிக்கபடுகிறது.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016