சொர்க மரம் - சைமரூபா கிளௌக்கா
தோன்றிய இடம் : பிரேசில். கடல் மட்டத்திலிருந்து 3000 அடிக்கு மேலிருக்கும் இடங்களில் காணப்படுகிறது. பொதுவாக உப ஈரமான சூழல்களில் இந்த மரம் நன்கு வளரும். இந்த மரம் நன்கு வளர்வதற்கு 20 – 26o செல்சியஸ் வெப்பநிலை அவசியம்.
சுழற்சி வயது (சுவடிகள் வயது): 60 – 80 ஆண்டுகள்.
இடைவெளி: 4 மீ*4 மீ, 6 மீ*6 மீ
ஆயத்த சாகுபடி: மே – ஜுன் மாதங்களில், வட்டு உழவை வைத்தி ஆயத்த சாகுபடியை செய்யலாம்.
நாற்றங்கால்: ஏப்ரல் – ஜுன் மாதங்களில், சைமரூபா நாற்றுகளை, நாற்றங்கால் கலவை நிரம்பிய பாலித்தீன் பைகளில் நட வேண்டும். இரண்டு வயதிற்கும் மேற்பட்ட நாற்றுகளை நடுவயலில் நடலாம்.
நடுதல்: மானாவாரி இறுதிநிலை விவசாய நிலங்களில் (அ) தரிசு நிலங்களில், பருவமழைக்கு முன் நாற்றுகளை நட வேண்டும்.
குழி அளவு: 45* 45* 45 செ.மீ அளவு குழிகளை வெட்டி அதனை மேல் மண் மற்றும் 3-5 கிலோ உரத்தை நிரப்ப வேண்டும். முதல் கோடையில், ஒரு வாரத்திற்கு 2-5 லிட்டர் நீர் பாய்ச்சினால் மரம் நன்றாக வளரும்.
பராமரிப்பிறகு பின்: முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, முறையாகக் களைகளை நீக்க வேண்டும்.
சிறப்பு அம்சம்: மகரந்த சேர்க்கைக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட தாவரங்களை சில கிளைகளோடு ஒட்டுவதால் நன்கு விளைச்சல் கிடைக்கும்.
பயிர் பாதுகாப்பு: சில சிலந்திப் பூச்சிகளும் மரப்பட்டை உண்ணிகளும்தான் இந்த மரத்தை தாக்குவதாக கூறப்படுகிறது.
மகசூல்: சைமரூபா விதைகளில் 60-65 சதவீதம் எண்ணைச்சத்து உள்ளது. ஒவ்வொரு வளர்ந்த மரமும் 10 கிலோ விதைகளை விளைவிக்கும். ஒரு வருடத்திற்கு ஒரு ஹெக்டாருக்கு 600-800 கிலோ எண்ணையை எடுக்கலாம்.
பயன்கள்: சமையல் எண்ணெய் , சோப்பு தயாரித்தல், மருத்துவ குணம், வயிற்றுப்போக்கைக் குணப்படுத்தல், மெல்லிய மரச்சாமான்கள் மற்றும் தீக்குச்சிகளைத் தயாரித்தல்
|