சதுப்பு நிலக் காடுகள்
அறிமுகம்
சதுப்புநிலக் காடுகள் அழிவு
இந்தியாவில் சதுப்பு நிலக்காடுகள்
மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் சதுப்பு நிலக்காடுகளின் பரவல்
தமிழ்நாட்டில்
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக சதுப்பு நிலக்காடுகளின் பரப்பு
பச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள்
தாவர வளங்கள்
இரசாயனக் கலவைகள்
சுனாமியும் சதுப்புநிலக்காடுகளின் பயன்களும்
கிராமத்தார்களின் ஆக்கிரமிப்பு
மீன் வளர்ப்பில் சதுப்பு நிலக்காடுகளின் பங்குகள்
அறிமுகம்:
வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப்பகுதிகளில், உப்புத்தன்மை தாங்கி வளரக்கூடியவற்றையே சதுப்பு நிலக் காடுகள் எனப்படும். இச்சதுப்பு மரங்கள் வளரும் குறிப்பிட்ட இடங்கள் சதுப்பு மண்டலங்கள் எனப்படுகிறது. இவை அதிக வளம்மிக்கவை, எனினும் எளிதில் பாதிக்கப்படக் கூடியவை. இச் சதுப்பு மண்டலத்தினுள் பிற தாவர, விலங்கு உயிரினங்களும் வாழ்கின்றன இயற்கைச் சீற்றங்களும், மனித நடவடிக்கைகளுமே சதுப்பு நிலக்காடுகளின் அழிவுக்கு முக்கியக் காரணங்கள். கடலோரப் பகுதிகளில் உருவாகிவரும் தொழிற்சாலைகளும், அதன் கழிவுகளும், இப்பகுதிகளைப் பாதிக்கின்றன. இதற்கு முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது சிறந்தது.
மேலே
சதுப்பு நிலக்காடுகள் அழிப்பு
மேற்கூறியது போல் சதுப்பு நிலக்காடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அச்சுறுத்தலாக அமைவது 1. மனித நடவடிக்கைகள் மற்றும் 2. இயற்கைச் சீற்றங்கள் ஆகும்.
இயற்கை பாதிப்புகளான, புயல், பருவநிலை மாற்றங்கள் மற்றும் தீடீர் நிகழ்வுகள் இச்சதுப்பு நில மண்டலங்களைப் பாதிப்புள்ளாக்குகின்றன.
அதோடு மனித நடவடிக்கைகளான மாசுபடுத்துதல், நோய்கள், வேளாண்மை செய்யக் காடுகள் அழிப்பு, மீன் பிடிப்பு மேய்ச்சல் மற்றும் மண்ணை அப்புறப்படுத்துதல் போன்றவையும் பாதிக்கின்றன.
மேலே
இந்தியாவில் சதுப்பு நிலக் காடுகள்
இந்தி அரசுப் புள்ளி விவரத்தின் படி சுமார் 6.7150 கிலோ மீட்டர் பரப்பளவில் சதுப்பு நிலக் காடுகள் இருப்பதாகத் தெரிகிறது. இது உலகில் மொத்த சதுப்பு நிலப்பகுதியில் 7 சதவீதமும் (கிருஷ்ணமூர்த்தி 1987) இந்தி கடற்பகுதியில் 8 சதவீதமும் (வண்டவேல், 1987) கொண்டுள்ளது. ஆனால் தற்போதய (1993, காயக்) செயற்கைக்கோள் தகவலின்படி இந்தியாவில் 4,474 கி.மீ2 மட்டுமே சதுப்பு நிலங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு சதுப்பு நிலங்களின் பரப்பளவு குறைந்ததற்குக் கீழ்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன.
வீட்டு வளர்ப்புக் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதால்
விறகுக்காக மரங்களை வெட்டுதல்
ஆற்றுப்பகுதிகளை நோக்கிய அதிக மனித நடமாட்டத்தால்
அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் அமைத்து அதிக நன்னீரை அப்பகுதிகளில் கலக்கச் செல்வதால்
தொழிற்சாலைகளிலிருந்து கழிவுகள் இப்பகுதிகளில் கலப்பதால் இந்திய வன ஆய்வுப்படி 2005 ல் டேராடூன் பகுதியில் 4445 ச.கி.மீ சதுப்பு நிலக்காடுகள் உள்ளனஉ.கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் 87% மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மீதம் 23% அநீதமான் நிகீகோபர் போன்ற வளைகுடாப் பகுதிகளில் 20% காணப்படுகின்றன.
சதுப்பு நிலக் காடுகளின் பரவல் மாநில யூனியன் பிரதேச அளவில் 2005ல் பரப்பளவு கி.மீ2
|
|
வ.எண் |
மாநிலம் யூனியன் பிரதேசம் |
மிக அடர்த்தியான ச.நி.காடுகள் |
ஒரளவு அடர்த்தியான ச.நி.காடுகள் |
திறந்தவெளி ச.நி.காடுகள் |
மொத்தம் |
மாற்றம் w.r.t. 2003 மதிப்பீடு |
1 |
ஆந்திரப் பிரதேசம் |
0 |
15 |
314 |
329 |
0 |
2 |
கோவா |
0 |
14 |
2 |
16 |
0 |
3 |
குஜராத் |
0 |
195 |
741 |
936 |
20 |
4 |
கர்நாடகா |
0 |
3 |
0 |
3 |
0 |
5 |
கேரளா |
0 |
3 |
5 |
8 |
0 |
6 |
மகாராஷ்டிரா |
0 |
88 |
100 |
158 |
0 |
7 |
ஒரிஸா |
0 |
156 |
47 |
203 |
0 |
8 |
தமிழ்நாடு |
0 |
18 |
17 |
35 |
0 |
9 |
மேற்கு வங்கம் |
892 |
895 |
331 |
2118 |
2 |
10 |
அந்தமான் மற்றும் நிக்கோபர் |
255 |
272 |
40 |
637 |
-21 |
11 |
டையூ மற்றும் டாமர் |
0 |
0 |
1 |
1 |
- |
12 |
பாண்டிச்சேரி |
0 |
0 |
1 |
1 |
0 |
|
மொத்தம் |
1147 |
1629 |
1669 |
4445 |
3 |
மேலே |