வெட்டுப்புழுக்கள்

வெட்டுப்புழுக்கள் (லெபிடோப்டிரா – நாக்டுடே)
வெட்டுப்புழுக்கள் பெரும்பாலும் மார்ச் – ஏப்ரல் ஆகிய மாதங்களில் கூம்பு இன மரங்களான பைன்கள் மற்றும் டியோடர் போன்ற மரங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவைகள் மேலும் ஆகஸ்ட் – அக்டோபர் போன்ற மாதங்களில் தேக்கு, சவுக்கு, கேசியா மற்றும் சமவெளிகளில் உள்ள முந்திரி நாற்றுகளை தாக்குகின்றன. கருவுற்ற பெண் அந்துப் பூச்சி மட்கிய, கற்கள், களைகள் மற்றும் பிற தாவரங்கள் மீது சிறிய அளவிலான 200 முட்டைகள் வரை இடும். அடுத்த 26 நாட்களுக்கு பிறகு முட்டைகள் குஞ்சு பொறித்து உலர்ந்த இலைகள் மற்றும் பச்சைத் தாவரங்களை உணவாக உட்கொள்கின்றன. இந்த நிலையே வெட்டுப்புழுக்கள் (லார்வா) ஆகும். இந்த வெட்டுப் புழுக்கள் மண்ணில் 30-75 மிமீ வரை ஆழமான பொந்துகளில் மறைந்து காணப்படும். இரவு நேரங்களில் கூட்டுப்புழுக்களாக மண்ணிலிருந்து தரைமட்டத்திற்கு வெளியே வந்து நாற்றுகளின் தண்டுப்பகுதி வழியாக ஏறி இலைகளை உட்கொள்கின்றன. முழுமையாக வளர்ந்த லார்வாவானது சுமார் 40 மி.மீ அளவு வரை குறுகிய முடிகளுடன் மென்மையாக காணப்படுகிறது. வெட்டுப்புழு இனங்கள் கருப்பு வெட்டுப்புழு, பல வண்ண கோடுகள் வெட்டுப்புழு, போன்ற பல வகைகள் உள்ளன.

மேலாண்மை நடவடிக்கைகள் :

  • நாற்றங்கால் படுக்கைகளின் முனைகள், சுற்றுச் சூழல், மற்றும் மாற்றுப் படுக்கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இது அந்துப் பூச்சி முட்டை இடுவதை தடுக்கின்றது.
  • குஞ்சுகள் சேகரிப்பு, மண்ணைத் தோண்டி அழித்தல் போன்ற பணிகள் மூலம் வெட்டுப்புழுக்கள் பெருக்கத்தை தவிர்க்க முடியும்.
  • நாற்றங்கால்களில் பாசனத்தை சேர்த்து வெள்ளமாக நீரை நிரைப்பதன் மூலம் வெட்டுப்புழுக்கள் வெளியேற்றத்தை தவிர்க்க முடியும்.
  • தாய் படுக்கைகளில் சுண்ணாம்பு மற்றும் சாம்பல் கலவையை இடுவதன் மூலம் வெட்டுப்புழு குஞ்சுகள் தாக்குதலை சரிபார்க்க முடியும்.
  • குயினோபாஸ் 1.5% @ எக்டருக்கு 35 கிலோ தூவுவதால் வெட்டுப்புழுக்கள் கட்டுப்படுத்த முடியும்  என கண்டறியப்பட்டுள்ளது.
 
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014