கரையான்

கரையான் பூச்சிகள்
கரையான் பூச்சிகள் நாற்றாங்கால் பூச்சிகளில் மிக முக்கியமான குழுவாக இருக்கின்றன. அவைகள் தரையின் கீழ் உள்ள கிழங்குகள், வேர்கள் மற்றும் காட்டு மரங்களின் தண்டுப் பகுதியில் உள்ள உணவை உட்கொள்கின்றன. மரச் செடி வளர்ப்பு நாற்றாங்கால்களில் அதிக  சேதம் விளைவிக்கும் கரையான் பூச்சிகளின் வகைகளில் அகேந்தோடெர்மிஸ், மேக்ரோசெர்மிஸ், ஓடென்டோடெர்மிஸ், மைக்ரோடெர்மிஸ் போன்ற இனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. வன நாற்றங்கால்களான சவுக்கு, ஈட்டி, தைல மரம், மல்பெரி, சீமை கருவேல் போன்ற பல மரவகைகளில் இந்த கரையான் பூச்சிகளானது அதிக விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
சேதம் இயல்பு
கரையான்கள் நாற்றுகள், துண்டுச் செடிகள் போன்றவைகளில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும், இவை இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பாதிப்பு மாறுபடுகிறது. முக்கியமாக தரை மட்டத்திற்கு மேல் 20 செ.மீ வரை சேதத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் துண்டுச் செடிகளில் பூமிக்கு அடியில் உள்ள கரையான்கள் தாக்கி அழுகச் செய்கின்றன. பாதிக்கப்பட்ட கன்றுகள் மஞ்சள், காய்ந்து போதல் மற்றும் பின்னோக்கி மடிதல் போன்ற அடையாளங்களை தெரிவிக்கின்றன.
மேலாண்மை நடவடிக்கைகள்
வெவ்வேறு துறைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சிவப்ப நிற எறும்புகளை நாற்றாங்கால் படுக்கையின் மீது விடுவதால் அவை கரையான்களை அழிக்கின்றன.
தாய் படுக்கைகள் மீது (அ) பரவல் அறைகள் மீது குளோரேபைரிபாஸ் TC20 என்ற பூச்சிக் கொள்ளியை 2 மி.லி /லி என்ற வீதத்தில் தெளிக்க கரையான்கள்  திறம்பட கட்டுப்படும்.

Updated on May, 2014
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014