வனவியல் :: அடிக்கடி கேட்கப்படும் கேள்வி |
||
வேளாண் வனவியல் | ||
1. வேளாண் வனவியல் என்றால் என்ன? வேளாண் வனவியல் என்பது நில பயன்பாடு கொண்ட ஒரு அமைப்பு. இது மரங்கள் அல்லது வேறு தாவரங்களின் கலவையை பயிர் வளர்ப்புக்கும் கால்நடை உற்பத்திக்கும் லாபத்தை வழங்கும். 2. வேளாண் வனவியல் காட்டிற்கு சேந்தவையா அல்லது நல்ல விவசாய நிலத்திற்கு சேந்தவையா ? வேளாண் வனவியல் நடைமுறைகள் விவசாய நிலத்தில் அல்லது வனப்பகுதியில் வெற்றிகரமாக அறிமுக படுத்தலாம். இதன் பன்முகத்தன்மை குறிப்பிடதக்கது. வேளாண் வனவியல் குறுகிய காலம் மற்றும் நீண்ட கால விவசாய லாபத்தை அதிகரிக்கும். வேளாண் வனவியல் பயிர்களைப் பயிறுடுவதால் மரங்கள் நீக்கப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழல் நன்மை மேலோங்குகிறது. 3. விவசாயம் செய்வதற்காக அதிக நேரம் முயற்சியும் எடுத்து மரங்களை நீக்கிய பின் ஏன் நான் என்னுடைய நிலத்தில் மரங்களை நட வேண்டும் ? வேளாண் வனவியல் என்பது சீரற்ற மரம் நடும் முறையோ அல்லது நிலத்தை வானமாக்கும் முறையோ அல்ல. உங்கள் நிலம் புதர்கள் அற்ற மரங்கள் அற்ற ஒரு நிலமாக இருந்தால் வேளாண் விவசாயம் வருமானம் ஈன்று தரும் ஒரு கருவியாக அமையும். ஒரு ஹெக்டர் நிலத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிகமான வருவாயைக் கொடுக்கும்.
4. எந்த வேளாண் வனவியல் பயிர்கள் பணத்தைக் கொடுக்கும்? வேளாண் வனப்பயிர்கள் ஒரு சமயம் அதிக வரவு தரக் கூடியதாகவும் மற்றொரு சமயம் மிகக் குறைவான வரவு தரக் கூடியதாகவும் அமையும். 5. பொது மக்களின் நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட மரம் சாரா மரப் பொருட்களை வேளாண் வனவியல் என்று அழைக்கப்படுகிறதா? இல்லை. மரம் சாரா மரப் பொருட்கள் வேளாண் வனவியலோடு இணைக்கப்பட்டுள்ளன. 6. முல்லைப் புல் பரப்பின் பொருளாதார வருவாய் என்ன? முல்லை புல் பரப்பின் மூலம் குறுகிய அனுகூலமும் நீண்ட அனுகூலமும் உண்டு. குறுகிய அனுகூலம் என்று சொன்னால் கால்நடைகளை சூரியனின் வெப்பத்திலிருந்தும் கடுமையான குளிர்ந்த வானிலையிலிருந்தும் 7. கால்நடைகள் மரங்களை செதப்படுத்துமா ? கால்நடைகள், இளமரங்களை சேதப்படுத்தும். மரங்கள் ஒரு பருவத்தை எட்டியப் பிறகு அதிகமான பாதுகாப்பு தேவைப்படாது. 8. நடுவதற்கு நான் எங்கிருந்து மரங்கன்றுகளை வாங்க வேண்டும் ? மரங்களை விதைகளிலிருந்து வளர்க்க செய்யலாம் அல்லது மர நாற்றுப்பண்ணையிலிருந்து விலைக்கு வாங்கலாம். |
||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |