வனவியல் :: அடிக்கடி கேட்கப்படும் கேள்வி
இயற்கை சுற்றுலா

1. யாரெல்லாம் இயற்கை சுற்றுலாப் பயணிகள் ?
இயற்கை சுற்றுலா எல்லா வயதினர்க்கும் சமமானது . இயற்கை சுற்றுலாவை தேர்ந்தெடுப்பவர்கள், சமூக பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல்
கண்ணோட்டத்தோடு  வாழ்பவர்கள்.

2. பழங்குடி மக்களுக்கு இயற்கை சுற்றுலா எவ்வளவு முக்கியம்?
பழங்குடி மக்களின் உரிமைகளை மதிக்கவும், அவர்களின் பொருளாதாரம் மேம்படவும், அவர்களின் பகுதியை சுற்றுலாவிற்கு வருபவர்கள் கண்டுகளிக்கவும் இயற்கை சுற்றுலா மிகவும் பயன் படுகிறது. மேலும் அவர்களின் கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாக்க இயற்கை சுற்றுலா பயன் படுகிறது.

3.ஏன் இயற்கை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது?
உலக சுற்றுல்லா துறையில் இயற்கை சுற்றுலா வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு துறையாகத் திகழ்கிறது. பல்லுயிர்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் உதவுகிறது. நமது அழகான பூமியின் இயற்கை எழிலையும் கலாச்சார மரபையும் பேணிப் பாதுகாக்கிறது. உள்ளூர் மக்களின் ஆற்றல் திறனை மேம்படுத்தி அவர்களின் சுயமேம்பாட்டிற்கு அதிகமாக பங்கு வகிக்கிறது.

4. நான் ஏன் என்னை இயற்கை சுற்றுலாவில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்?
இயற்கை சுற்றுலா என்பது அதிமான ஆதாயம் தரக்கூடிய ஒன்றாகத் திழற்கிறது. புதிய இடங்களை கண்டுபிடிக்கவும், புதிய நண்பர்களிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளவும்கணப், களிப்புறவும் இயற்கை சுற்றுலா பயன்படுகிறது.
வெறும் படங்கள் எடுக்கவும், அடிச்சுவடியை பதிப்பதற்கும் மேலே இயற்கை சுற்றுலாவின் பயன்கள் மிக அதிகமாக உள்ளது.

5. இயற்கை சுற்றுலாவிற்கு இணையதளங்கள் எதுவும்  இருக்கிறதா?
www.ecotour.org  
www.ecotourism.org 
- www.rainforest-alliance.org
www.planetvivo.org 

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016