1. யார் வேண்டுமானாலும் வன உயிரினத்தை உடைமையாகிக் கொள்ளலாமா ?
வன விலங்குகள் தொடர்பான எந்த ஒரு காரியத்தையும் 1972 ஆம் ஆண்டு வன உயிரின பாதுகாப்புச் சட்டம்தான் பொறுப்பேற்கிறது. இந்த சட்டத்தின்படி வனவிலங்குகளை வேட்டையாடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. முறையான உரிமம் இல்லாமலும் முறையான அனுமதி பெறாமலும் விலங்குகளை வணிகம் செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. பொது மக்களில் எந்த ஒரு நபர் வன உயிரினத்தையோ அல்லது அது சார்ந்த எதையோ ஒன்றை வைத்திருந்தால் அதனை உடனடியே வன உயிரின அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
2. உரிமம் பெற்ற வன ஆயதங்களை தேசிய பூங்காவின் அருகாமையிலோ அல்லது வன உயிரினம் உய்விடதிரற்கு அருகாமையில் வாழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் ?
உரிமம் பெற்ற வன ஆயதங்களை உடையவர்கள், தேசிய பூங்காவின் பத்து கிலோ மீட்டர்க்கு அருகாமையிலோ அல்லது வன உயிரினம் உய்விடதிரற்கு பத்து கிலோ மீட்டர்க்கு அருகாமையில் வாழ்ந்தால் முதலில் வன உயிரின அதிகாரியிடத்தில் பதிவு செய்ய வேண்டும்.
3. வன உயிரினத்தால் தாக்கப்பட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ என்ன இழப்பீடு கிடைக்கும் ?
வன உயிரினத்தால் தாக்கப்பட்டபட்டவர்களுக்கு அல்லது கொல்லப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம்
அ |
இறந்தவரின் வாரிசுகள் |
ரூ.1,00,000/- |
ஆ |
நிரந்தரமாக முடியாதவர்களுக்கு |
ரூ.1,00,000/- |
மேலே குறிப்பிட்டவர்களுக்கு உடனடியாக 25,000 ரூபாயும், அனைத்து முறைகளையும் முடித்தவர்களுக்கு மீதியிருக்கும் நிதியைப் பெற்றுக் கொள்ளலாம். |
இ |
பெரிய காயங்கள் |
ரூ.20,000/- |
2. வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பயிர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் வன உயிரினத்தால் தாக்கப்பட்டபட்டவர்களுக்கு அல்லது கொல்லப்பட்டவர்களுக்குரிய நிவாரணம்
அ |
பயிர்களுக்கு பாதிப்பு |
ரூ.15,000/- |
ஆ |
ஓடுகள் பதிக்கப்பட்ட வீடுகளுக்கு பாதிப்பு |
ரூ.5000/- |
இ |
குடிசை வீடுகளுக்கு பாதிப்பு |
ரூ.5000/- |
|