நோய் மேலாண்மை

ஈகிள் மார்மலஸ்


குடும்பம் : ரூட்டேசி
தமிழ் பெயர் : வில்வம்
பயன்கள்:
வேறு பயன்கள் : மரப்படை, வேளாண் கருவிகள் செய்வதற்குப் பயன்படுகிறது. பழங்கள், வயிற்றுப்போக்கு போன்றப் பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. கனிந்தப் பழங்கள், இனிப்பாக இருப்பதனால் சர்பத் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. மரத்தண்டுகளிலிருந்து மரப்பசை அதிகம் வடிவதனால் பசைத் தயாரிக்க உதவுகிறது.      
விதைகள் சேகரிக்கும் நேரம் : ஜனவரி – ஜூலை; அக்டோபர் – நவம்பர்
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை : 150
முளைத்திரன் : விதைகள் மிகவும் சிறியதாக இருப்பதனால் பூச்சிகள் அதிகம் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதனால், விதைகளை சேகரித்த உடன் அதை விதைத்து விட வேண்டும்.
விதை நேர்த்தி :  
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : விதைகள் நடப்படும் கொள்கலனில் அதிகமாக மணலை நிரப்பி அதில் விதைகளை விதைத்து முறைப்படி
நீர்ப் பாய்ச்ச வேண்டும். மூன்று அல்லது நான்கு மாதங்களில் விதைகள் முளைத்து விடும். நாற்றுகள் பிடுங்கும் உயரத்திற்கு வளர்ந்தப் பிறகு பிடுங்கி நடு வயலில் நட வேண்டும். 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016