குடும்பம் |
: |
மேலியேசி |
தமிழ் பெயர் |
: |
வேம்பு |
பயன்கள்: |
எரிபொருள் |
: |
4500 கிலோ கலோரி / கிலோ |
தீவனம் |
: |
ஒரளவிற்குப் பயன்படுகிறது |
வேறு பயன்கள் |
: |
மரக்கட்டைகள், காற்றுத்தடுப்பு, நிழல், வேப்பம் புண்ணாக்கு, உரம், தோல் பதனம், காய்கள் மற்றும் இலைகள் சிறந்த பூச்சி விரட்டியாகப் பயன்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு. |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
1750 பழங்கள் அல்லது 4000 சுத்தமான விதைகள் |
முளைத்திரன் |
: |
இரண்டு மாதங்கள். மண் பானைகளில் சேகரித்தால் ஆறு மாதங்கள் வரை முளைத்திரன் இருக்கும். |
முளைப்பு சதவீதம் |
: |
50 % |
விதை நேர்த்தி |
: |
விதைப்பதற்கு முன் விதைகளிலிருந்து கூழ் ஆகற்றுவதனால் முளைவிடுதல் அதிகரிக்கும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
புதிய விதைகள் தொட்டிகளில் நட வேண்டும். முளைப்பு ஒரு வாரத்தில் தொடங்கும். முதலாவதாக வேர்கள் வளரும் பின் தண்டுகள் வளரும். 15 செ.மீ x 3.5 செ.மீ இடைவெளியில் உள்ள விதைப்பாத்தியிலும் நடலாம். 50 % முளைப்பு சதவீதம் உள்ள நாற்றுகளை நடுவதனால் வேகமாக வளரும். உயரமான மரம் வேண்டுமானால், 1:1:1 தொட்டிக்கலவையைப் பயன்படுத்தி உயர் அடர்த்தி நடவு முறையில் நாற்றுகளை நடுவதனால் மரம் உயர்ந்து வளரும். |