வனவியல் தொழில்நுட்பங்கள்

பருத்திமரம்

அறிவியல் பெயர்: பாம்பாக்சு சைபா

பருவநிலை: 350 செ முதல் 500 செ அதிகபட்ச வெப்பநிலை, குறைந்த வெப்பநிலை 40 செ முதல் 180 செல்சியஸ் வரை, வருடமழைப்பொழிவு 750 மி.மீ. முதல் 4600 மி.மீ.வரை.

மண்: பல்வேறுபட்ட மண்ணில் வளரக் கூடியது. ஆயினும் வண்டல் மற்றும் மணல் கலந்த மண்ணில் சிறப்பாக வளரக்கூடியது.

இடைவெளி: 3 மீ X 4 மீ (அ) 3.7 மீ X 3.7 மீ  இடைவெளி போதுமானது

வேளாண் - மேய்ச்சல் இயல்புகள்: மேய்ச்சல் பகுதிகளில் வளரக் கூடியது மற்றும் மிதமான பனிப்பொழிவு

நாற்றங்கால் தொழில்நுட்பங்கள்: ஏப்ரல் - மே மாதங்களில் முதிர்ச்சியடையும் கிராமிற்கு 21-38 விதைகள், விதைகள் பஞ்சிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. நாற்றங்கால் மேட்டுப்படுக்கையில் 5 செ.மீ. ஆழத்தில் 23 செ.மீ. இடைவெளிகளில் நடப்படுகின்றன. தொடர்ந்த நீர் பாசனமும், களையெடுப்பும் தொடர வேண்டும். 10 முதல் 15 செ.மீ. உயரம் வளரும்பொழுது மாற்று நடவிற்கு எடுத்துக்கொளளப்படுகின்றன. இவ்வாறு நடப்படும்பொழுது 25 செ.மீ. X 20 செ.மீ. இடைவெளி அவசியம். மிகையான மழைப்பொழிவருவதால் வேருடன் பிடுங்கியும், மற்றைய பகுதிகளில் வேர்மண்டல மண்ணுடனும் நடப்படுகிறது. வேர்த்தண்டின் நீளம் 4 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை இருக்கலாம். இரண்டு வயதுள்ள நாற்றுகள் நடவுக்கு ஏற்றவை.

நடவுமுறைகள்: 300 செ.மீ3 இடங்களில் நடவு செய்ய வேண்டும். கரனை நடப்பிற்கு கடப்பாரையால் துளையிட்டு நட வேண்டும்.

பயிர்பாதுகாப்பு: தண்டு துளைப்பான் தீவிர தாக்குதல் செய்யும்பொழுது பூச்சிக்கட்டுப்பாடு வேதிப்பொருட்கள் கொண்டு செய்யப்படும்.

பயன்கள்: விதைகளின் மீது களர்கள் குறைந்த தரமுள்ளதாக உள்ளது. மரப்பட்டைகள் கயிறு தயாரிப்பிலும் கட்டைகள் பொம்மைகள், தீப்பெட்டிகள், படகு தயாரிப்பினும் பயன்படுகிறது. இளம் மலர்கள் காய்கறி உணவாகப் பயன்படுகிறது. மலர்கள், வேர்கள், காய் மற்றும் கோந்து போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்துகின்றன.

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014