இலவம்பஞ்சுமரம்
அறிவியல் பெயர்: செய்பா பென்டேன்ரா
தாயகம் மற்றும் பரவல்: தென்மெரிக்காவினை தாயமாகக் கொண்ட இத்தாவரம் தற்பொழுது மியான்மர், சாவாதீவு, இந்தியா மற்றும் இலங்வக போன்ற காடுகளில் வளர்கின்றது. தமிழகத்தில் சேலம், தருமபுரி, கோயம்புத்தூர் மற்றும் மதுரையை ஒட்டிய பகுதிகளிலும் வளர்கின்றது.
வளர்ப்பு முறைகள்
நாற்றாங்கால் நுட்பங்கள்: ஆரோக்கியமான புது விதைகள் விதைப்பதற்கு ஏதுவானவை. 20X10 செ.மீ. நீள அகலமுள்ள பாலிதீன் பைகளில் மண், தொழுஉரம் மற்றும் மணல் கலவை நிரப்பி அதில் நேரடியாக தரப்படுகிறது. தினமும் நீர்தெளிக்கப்படவேண்டும். நட்ட பதினைந்தாவது நாள் முதல் முளைக்கத் தொடங்கும்.
இடைவெளி: 7 X 7 மீ
குழியின் ஆழம்: 30 செ.மீ நீளம், 30 செ.மீ. அகலம் மற்றும் 30 செ.மீ. ஆழம் போதுமானது.
களைக்கட்டுப்பாடு: வருடத்திற்கு இரு முறை என இரண்டு வருடங்கள் மட்டும்
நீர்பாசனம்: வருட மழைப்பொழிவு 1000 மி.மீக்கும் குறைவான பகுதிகள் மற்றும் வெப்பம் மிகுந்த கோடையில் பத்து நாட்களுக்கு ஒருமுறை
ஊடுபயிர் வளர்ப்பு: இரண்டு ஆண்டுகள் வரை பருப்பு வகைப் பயிர்களை சாகுபடி செய்யலாம். கால்வாய் நடவில் 6 மீ இடைவெளியில் இருந்து வரப்புகளில் வேளாண் பயிர்களை பயிர் செய்யலாம்.
பயன்கள்:
- பஞ்சு தலையனை மற்றும் மெத்தைகள் செய்யப்பயன்படுகிறது
- காயத்தயாரிப்பு, கையுறைகள் மற்றும் குளிர்கால ஆடைகள் செய்யவும்
- எண்ணெய் சோப்பு தயாரிக்கவும், பிண்ணாக்கு கால்நடைத் தீவனமாகவும்
- கட்டைகள் விறகாகவும் பயன்படுகின்றன
|