தச்சு மற்றும் கட்டுமான மரங்கள் ::பெருமரம்

பெருமரத்தின் தாயகம் ஆஸ்திரேலிய கண்டமாகும். இது சைமருபேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. மொலூாகஸ் தீவில் இதே இனத்தைச் சார்ந்த மற்றொரு மரத்திற்கு இடப்பட்ட பெயரான அய்லாந்தஸ் இம்மரத்திற்கும் சூட்டப்பட்டுள்ளது. எக்ஸெல்ஸா என்பது மரத்தின் ஓங்கி வளரும் தன்மையைக் குறிப்பதாகும். இம்மரம் வறண்ட பகுதிகளுக்கு ஒரு வரப்பிரசாதாமாகும். நம் நாட்டில் குஜராத், இராஜஸ்தான், பஞ்சாப் ஒரிசா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வறண்ட பகுதிகளில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் இம்மரத்தை வளர்த்து பயன் பெறலாம்

பெருமரம்

 

மரம் வளரும் சூழ்நிலை

  • எந்த வறட்சியிலும் வளரும் தன்மையுடையது
  • 80 -12.50 செ.(குறைந்தளவு) மற்றும் 450-470 செ.(அதிகளவு)
  • அதிக வெப்பம், மித வெப்பம் ஆகியவைகளைத் தாங்கக்கூடியது.
  • நீர்வளம் குறைந்த பகுதிகளிலும் மிகக்குறைந்த மழைபெய்யும் பகுதிகளிலும் நன்கு வளரக்கூடியது.
  • வளம் அற்ற மண்ணிலும் வளரும் தன்மையுடையது.
பெருமரக் கன்று
பெருமர இலைகள்

மரம் வளர்ப்பு முறை

  • ஒரு ஏக்கரில் அதிக அளவாக 360 மரங்களை நடவு செய்யலாம்.
  • 12 அடிக்கு 12 அடி இடைவெளி விட்டு நடவு செய்யலாம்.
  • நல்ல நிலமாக இருப்பின் சுமார் 550/650 கிலோ எடையுள்ள மரம் கிடைக்கும்.
  • தோட்டத்தைச் சுற்றி வேலிப் பயிராகப் பயிரிடும் போது சுமார் 90 மரம் 10 அடி இடைவெளிக்கு நடவு செய்யலாம்.
  • முதலில் வளரும் செடியின் கிளைகளை அகற்றி மரம் நேராக வளரவிட வேண்டும்.
நாற்றாங்கால் அமைப்பு
மரத் தோட்டம்

வருமானம்

(i)தரிசு நிலத்தில்

399 மரங்கள்×120 டன்×சுமார் ரூ.2,000=ரூ.2,000=ரூ.2,40,000

(ii)நல்ல நிலத்தில்

422 மரங்கள்×220டன்×சுமார் ரூ.2,000=ரூ.4,40,000

மரத்தின் பயன்கள்

இம் மரத்தில் அதிகமாகத் தீக்குச்சி தயாரிக்கப்படுகிறது. இதன் பக்கக்கிளை விட்டு அடுப்பு உபயோகத்திற்குப் பயன்படுகிறது. மரத்தின் தழைகள், இலைகள் மண்புழுவிற்கு உணவாக பயன்படுகின்றன.

பெரு மர விதை கொத்துகள்
பெரு மர விதைகள்

பீதணக்கன் மரத்தின் இதர பயன்பாடுகள்

இம் மரம் பென்சில் எழுதுப் பலகை நசடு பலகை தயாரிக்கப் பயன்படுகிறது. வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் மரப்பெட்டி, தக்காளி பெட்டி, டீ மற்றும் செஸ்ட் கேஸ்கள் ஒட்டுப்பலவை (பிளைவுட்) செய்யவும் பயன்படுகின்றது. மேலும் பழ வகைகள் அடி படாமல் எடுத்துச் செல்லும் பெட்டிகள் தயாரிக்கப் பயன்படுகிறது. கட்டிட வேலைகளுக்குகான செண்டிரிங் பலகைகளாகப் பயன்படுகிறது. இதன் வேர்கள் வருடம் முழுவதும் பசுமையாக இருப்பதால் மண் அரிப்பை தடுக்கின்றன.

Updated on :April, 2015

தொடர்புக்கு
முதல்வர்,  
வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்,
கோயமுத்தூர் -  641301.
தொலைபேசி: 04254 - 222398, 04254 – 220460
அலைபேசி: 9443505843, 9489056727
மின்னஞ்சல்: deanformtp@tnau.ac.in


 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024