இதர மர வகைகள் ::தைலமரம் |
||||||||||
யூகலிப்டஜ் மரி்டுசியே (Myrtacea) குடும்ப வகை மரமாகும். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தயாகமாகக் கொண்டது. தைலமரங்கிளல் 700-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இம்மரங்கள் 330 மி.மீ லிருந்து 1500 மி.மீ வரை மழையளவு உள்ள பகுதிகளில் செழித்து வளரும் இயல்புடையவை. தைல மரம் விரைவாகவும், உயரமாகவும் (20 முதல் 50 மீ வரை) வளரக்கூடியது. மேலும் 2 மீ சுற்றளவு வரை வளரக்கூடியது. வறண்ட மற்றும் சமவெளிப்பகுதிகளில் வளரும் யூக்கலிப்டஸ் டெரிடிகார்னிஸ், யூக்கலிப்டஸ் கமால்டுலென்ஸிஸ் ஆகிய வகைகள் தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு மிகவும் ஏற்றவை.
நிலத்தைத் தேர்ந்தெடுத்தல்:
நாற்றங்கால் வளர்ப்பு முறைகள் தைல மர நாற்றுக்களை விதைகள் மூலமாகவும், விதையில்லா இனப்பெருக்கம் (Vegetative propagation) வழிமுறையான குச்சிகள் (கன்றகப் பெருக்கம்-Cloning) மூலமாகவும் உற்பத்தி செய்யலாம். மகசூல் நான்கு முதல் ஐந்து வருடங்களில் தைலமரம் அறுவடை செய்யப்படும். நல்ல மண் வளம், நீர் வசதியுள்ள இடங்களில் ஏக்கருக்கு சராசரியாக 40 டன் கிடைக்கும். இதன்மூலம் ஒரு ஏக்கருக்கு 4-5 ஆண்டுகள் இடைவெளியில் ரூ.75,000/- வரை வருவாய் பெறலாம்.
தைலமரத்தின் வணிகப்பயன்பாடு காகிதம், காகிதக்கூழ், துகள் அட்டைகள், மொத்த அட்டைகள் தயாரிக்கும் பணிகளுக்கும் பெரிதும் உகந்த மரம் . இம்மர எரிபொருள், கரித்துண்டுகள் தயாரிக்கவும் எளிய மற்றும் கனமான கட்டுமானப்பணிகளுக்கும், இரயில்வே தண்டவாளக் கட்டைகள், பாலங்கள் கட்டுவதற்கும், குச்சிகளாகவும் பயன்படும். இலைகளிலிருந்து பெறப்படும் நீர்மம் பூச்சி எதிர்ப்புத்தன்மையுடையதால் உயிரியல் பூச்சி எதிர்ப்புகள் தயாரிக்கப்பயன்படுகின்றன. |
||||||||||
|
||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024.
|