இதர மர வகைகள் ::சவுக்குமரம் |
||||||||||||||
சவுக்கு அயலகத்திலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட மரப்பயிராகும். சவுக்கு விரைவாக வளரும் இயல்புடைய பசுமை மாறா அழகிய தோற்றம் கொண்ட ஊசியிலைகளைக் கொண்ட மரமாகும்.
சவுக்கு மரத்தின் வகைகள்:
நாற்றங்கால் வளர்ப்பு முறைகள் -விதை மூலம் இனப்பெருக்கம் ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் நன்கு வளர்ந்த சவுக்கு மரங்களிலிருந்து விதைகளை ஜீன்-டிசம்பர் மாதங்களில் கிளைகளை ஆட்டியோ, குச்சிகள் வைத்து தட்டியோ கீழேவிழும் விதைகளைச் சேர்க்கலாம். ஒரு கிலோகிராம் விதையில் 7.5லிருந்து 10 இலட்சம் வரை விகைதள் இருக்கும் இதன் தூய்மைத் தன்மை 80 முதல் 90 சதவிகிதமாகும். ஈரப்பதம் 7.3 சதவிகிதமாகும். விதை முளைப்பு 7 முதல் 10 நாட்களுக்குள் 50 முதல் 60 சதவிகிதமாகும்.
கன்றகப் பெருக்கம் சவுக்கை இணையாக வளரும் தண்டுகள் மூலமாகவும், தாவர இனப்பெருக்கம் மேற்கொள்ளலாம். இத்தண்டுகள் அல்லது குச்சிகளை வளர்ச்சி ஊக்கியான இண்டோல் ப்யூட்ரிக் அமிலத்தை (IBA) அடிப்படையாகக் கொண்ட வேர் வளர்க்கும் ஹார்மோன்களில் (3000-6000 ppm) நனைத்தெடுத்து கன்றங்களை நேர்த்தி செய்யலாம். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட கன்றங்களை 70 முதல் 80 சதவிகிதம் ஈரப்பதம் உள்ள பசுமைக்குடிலில் (green house) வைக்க வேண்டும். 20-25 நாட்களில் புதிய வேர் உற்பத்தி செய்யப்பட்டு தரமான நாற்றுகள் பெறப்படுகின்றன. நல்ல வளமான தன்மையுடைய மரங்கள் இவ்வாறு இனப்பெருக்கம் செய்யப்படுவதை கன்றுகள் எனலாம். கவாத்து செய்தல் மரத்தின் முக்கால் பகுதிக்கு கீழ் உள்ள பக்கக் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இதன்மூலம் 6-12 மாதங்களில் நல்ல கழிகள் கிடைக்க வழிவகை செய்யலாம். உர நிர்வாகம் 40-50 கிலோ யூரியா, 150 கிலோ சூப்பர்பாஸ்பேட் மற்றும் முயூரியேட் பொட்டாஸ் 100 கிலோ 4 முதல் 5 கால இடைவெளியல் சமப்பகுதியாக பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். ஊடுபயிர் சவுக்கின் ஓராண்டு பயிராக இருக்கும்போது வேளாண்மைப் பயிர்களில் குறிப்பாக நிலக்கடலை, ஊடுபயிராக வளர்க்கலாம். மணற்பாங்கான நிலங்களில் தர்ப்பூசணியும், செம்மண்ணில் எண்ணெய் வித்து பயிரான எள் கடின மண்ணில் பயறு வகைகளையும் ஊடுபயிராகப் பயிரிடலாம். மகசூல் சவுக்கின் அனைத்துப்பகுதிகளும் பயன்படுபவை. ஒரு எக்டேருக்கு 125 முதல் 150 டன் வளர மூன்று ஆண்டுகளுக்கு 4×4 அடி இடைவெளியிலோ 5×5 இடைவெளியிலோ நடுவதன் மூலம் பெறலாம். இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 2-3ஆண்டுகள் இடைவெளியில் ரூ.75,000 வரை வருவாய் பெறலாம். |
||||||||||||||
|
||||||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024.
|