தச்சு மற்றும் கட்டுமான மரங்கள் :: சால் மரம்
வெண் குங்கிலியம்
அறிவியல் பெயர் : சோரியா ராபச்ட

தாயகம் : இந்தியா
கால நிலை

  • வெண் குங்கிலியம் அதிகபட்ச வெப்பநிலை 360 செ முதல் 440 செ  மற்றும் குறைந்த வெப்பநிலை 110 செ முதல் 170 செ  வரையாகும். இதற்கேற்ற சராசரி வருட மழைபொழிவு 1௦௦௦ மி மீ  முதல்  35௦௦ மி மீ இருந்தால் நன்கு வளரும்

மண்

  • மலைப்பகுதிகளிலும்,ஆறுகளின் சமவெளிப்பகுதிகளிலும் ஆழமும் ஈரமும் நிறைந்த வளமான மண் பரவியுள்ள இடங்களிலும் நன்கு வளர்கிறது. இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண்  சிறப்பானது.

சால் மரம்

சால் இலைகள்
சால் மலர்கள்

மரவளர்ப்பு இயல்புகள்

  • இதற்கு நல்ல சூரிய ஒளிதேவைப்படுகிறது.ஆனால் நல்ல ஒளியுள்ள நிழற்பாங்கான பகுதிகளிலும் வெகு சிறப்பாக வளர்கிறது.மேலும் இது அதிகபட்ச வெப்பத் தாங்கு தாவரமாகும்.

தாவரப்  பாதுகாப்பு

  • விலங்குகளின் வினைகளால் இளம் நாற்றுகள் பாதிக்கப்படுகின்றன. இவற்றின் கிழங்குகள்  மான் மற்றும் மாடுகளால்  அகழ்இந்தெடுக்கப்படுகின்றன.

சால் விதைகள்

ஒட்டுண்ணித் தாவரம்: இம்மரங்களை சார்ந்து ஒட்டுண்ணியாக  லோரன்துசு அதிக சேதத்தை உண்டாக்குகிறது.

பூஞ்சை தாக்குதல்: பலிப்போருஸ் சோரியா , போர்ம்ஸ் கேர்போசைலி ,சைலேரியா பாளிமொற்ப  போன்றவை பெரும் பாதிப்புகளை நிகழ்த்துகின்றன.

தொடர்புக்கு
முதல்வர்,  
வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்,
கோயமுத்தூர் -  641301.
தொலைபேசி: 04254 - 222398, 04254 – 220460
அலைபேசி: 9443505843, 9489056727
மின்னஞ்சல்: deanformtp@tnau.ac.in


 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024