தச்சு மற்றும் கட்டுமான மரங்கள் :: சென்ப மரம்
செண்பகம்

செண்பக மரம்

அறிவியல் பெயர்: மைக்கேலியா சம்பகா

பரவல்: ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் பரவியுள்ளது. அடர்ந்த காடுகளிலும், இமயமலைப் பகுதிகளிலும் பரவியுள்ளது. 900 மீ வரையுள்ள மலையடிவாசப்பகுதிகளில் நிறைந்துள்ளன. இந்தியாவிலும் பர்மாவிலும் பரவலாக வளர்க்கப்படுகிறது.

பருவநிலை: அதிகபட்ச நிழல் வெப்ப அளவு 37.50 செ. முதல் 47.50 செ வரையாகும். மேலும் குறைந்த வெப்பநிலையானது 00 செ. முதல்17.50   செ வரையாகும். ஆண்டு மழைப்பொழிவு 2250 - 5000  மி.மீ. மற்றும் காற்றின் ஈரப்பதன நிலை 80 - 90% தூன் மற்றும் தூலை மாதங்களில் 60 - 80%. இது கடல் மட்டத்திலிருந்து 500 மீ முதல் 1500 உயரம் உள்ள பகுதிகளில் வெகு சிறப்பாக வளர்கின்றது.

மண்: மணற்பாங்கான வண்ட மண்ணிலும் ஈரப்பதமிக்க, வடிகால் வசதியுள்ள தரமான மண்ணில் சிறப்பாக வளரும் தன்மையுடையது.

மர வளர்ப்பியல் இயல்புகள்: இளஞ்செடிகள் வறட்சியாலும் அதிகபட்ச ஈரத்தில் அழுகியும் வருகின்றன. மேலும் காட்டுத்தீயாலும் பெருமடுப்பிலான சேதங்களை அடைகின்றது. சூறைக்காற்றாலும், வறண்ட பணியாலும் இவற்றின் மலர்களும், இளம் பிஞ்சுகளும் பாதிப்படைவதுடன் விலங்குகளாலும் சேதமடைகின்றன.

செண்பக மரப்பட்டை
செண்பக மர இலைகள்
செண்பகப்பூ


நாற்றங்கால் நுட்பங்கள்: நன்கு பழுத்த பழங்கள் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் சேகரிக்கப்படுகின்றன. இவை நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு நிழலில் உலர வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இவை இரண்டு வாரங்களுக்குள் விதைத்து விட வேண்டும். இல்லையெனில் விதையின் முளைக்கும் திறன் முற்றிலும் பாதிப்படைந்து விடுவதாக அறியப்படுகிறது.
நிழல்பாங்கான நாற்றங்கால் படுகைகளில் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் விதைக்கப்படுகின்றன (அ) 8-10 செ.மீ. இடைவெளிகளில் நடப்படுகின்றன. நட்டபின் லேசாக மண் கொண்டு மூடப்படுகறிது. பிறகு நிழல் ஏற்படுத்த மூடாக்கு அமைக்கப்பட்டிருந்தால் நிகழப்படுகறிது. பாத்திகளில் புல்முளைப்பதினால் விதைகள் முளைக்காமல் தடுத்துவிடும்.

நடவுமுறைகள்: வெற்றிகரமான முறையாக ஒரு வயதுள்ள இளங்கன்றுகள் நடப்படுகின்றன. (அ) பருவகால இடைவெளியில் நடவு செய்யப்படுகின்றன. நாற்றுகளைப் பறிக்கும் பொழுது வேர் மண்டல மண்ணுடன் பெயர்த்து நடவு செய்வது சிறப்பானது.

பயிர் இடைவெளி: 1.8 மீ X 1.8 மீ மேற்கு வங்காளத்திலும், 2.4 மீ X 2.4 மீ அசோமிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

பயிர் மேலாண்மை: களைக்கட்டுப்பாடு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேவையில்லை. நெருக்கமாக நடவு செய்யப்பட்டிருந்தால் அடர்த்தி நீக்கம் செய்வது அவசியம்.

சேதங்கள் மற்றும் பாதுகாப்பு:

1.நெருப்பு: இத்தாவரம் நெருப்பினால் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் மிகப்பெரிய மரங்களும் கூட அடி மரத்தில் சற்று அதிகமான நெருப்பில் காய்ந்து வருகின்றன.

2.பூச்சிகள்: யூரோசுடைலிஸ் ஃபன்கடிசெரா, எனும் வண்டினால் வருடத்திற்கு ஐந்து முறை சேதமடைகிறது.
இளம் குருத்துகள் மற்றும் இளம் இலைகளின் மீது இடப்படும் இளம் குஞ்சுகள் மரத்தின் சாற்றினை உறிஞ்சி இளம் குருத்து மற்றும் இலைகளைக் காய்ந்து போகச் செய்கின்றன. முதிர்ந்த பூச்சியானது இளம் மரங்களின் தண்டுகளைச் சேதமடையச்  செய்கின்றது. ஏனெனில் இதன் நீண்ட ஆயுட்காலமே இதற்குக்  காரணமாகும். ஆகவே இது இளம் குஞ்சுகளை விடவும் மேலான சேதங்களை  ஏற்படுத்துகிறது.
இப்பூச்சிகளின் தாக்குதல் 1927-ல் வடக்கு வங்காளத்தில் பதிவு செய்யப்பட்டது. முதல் அடர்த்திக் களைப்பிற்குப் முன்னரே முன்றிலொரு பங்கு எண்ணிக்கையைக் குறைத்து விடுகிறது.

தடுப்பு முறைகள்:இளம் கன்றுகளுடன் வேறு பூச்சித்தாக்குதலை தாங்கவியலா வேறு சில தாவரங்களையும் செண்பகத்துடன் நடப்படும்பொழுது இதன் மீதான பூச்சித் தாக்குதல் வெகுவாகக் குறையக் கூடும்.
குறுகிய கால இடைவெளிகளில் வயலாய்வு  செய்வதன் மூலம் பெருக்கம் மற்றும் பரவு மையங்களை அழிக்க இயலும்.
மேலும் நிகோடின் சல்பேட் ஒரு பங்குடன் 1.8 கிலோகிராம் சோப்பு சேர்த்து 450 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம்.

உயிரியல் கட்டுப்பாட்டு முறை:இயற்கை எதிரிகளான ஃபேக்கி நியூரான் பென்டேடோமிவோரா ஒட்டுண்ணி மற்றும் கால்வியா ஃட்ரைகாலர் உண்ணி போன்றவைகளைக் கொண்டும் கட்டுப்படுத்தலாம். மேலும் செவ்வெரும்புகளைக் கொண்டு வந்து செணபகத் தோட்டத்தில் விடுவதன் மூலமாக யூரோடைலிஸ் ஃபன்டிஃபெரா பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

பயன்கள்:இவற்றின் கடின மரக்கட்டைகள் மரச்சமான்கள் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளுக்குப் பெருமளவில் பயன்படுகின்றன. இவை பென்சில் தயாரிப்பு, உயர்வகைப் பெட்டிகள் மற்றும் கனமான அடைப்பான்களிலும்  தயாரிக்கப் பயன்படுகின்றன.
கட்டைகளைக் காய்ச்சி வடிப்பதன் மூலமாக ஒரு வகையான கற்பூரமும் தயாரிக்கப்படுகிறது. மேலும் இது கைவினைப்பொருட்கள் தயாரிப்பிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

தொடர்புக்கு
முதல்வர்,  
வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்,
கோயமுத்தூர் -  641301.
தொலைபேசி: 04254 - 222398, 04254 – 220460
அலைபேசி: 9443505843, 9489056727
மின்னஞ்சல்: deanformtp@tnau.ac.in

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024