- காய்க்க எடுத்துக் கொள்ளும் காலம் 3 முதல் 4 வருடங்கள்
- சராசரி மகசூல் ஆண்டிற்கு ஒரு மரத்திற்கு 65 காய்கள்
- கொப்பரைத் தேங்காயின் அளவு காய் ஒன்றுக்கு 150 கிராம்
- எண்ணெயின் அளவு 66 %
- இது சவ்காட் ஆரஞ்சு குட்டையிலிருந்து தேர்வு செய்யப்பட்டது.
சிறப்பு அம்சங்கள்
- இந்த இரகம் கேரளாவில் கெளரி கேத்ரம் (அ) செந்தங்கு என்றும் கர்நாடகாவில் கெந்தளி என்றும் அழைக்கப்படுகிறது
- இந்த இரக மரத்தின் மெலிந்த தண்டில், நெருக்கமாக ஒழுங்கான முறையில் அமைந்த ஓலை இடுக்குகள் இருக்கும். மேலும் இந்த மரத்தின் மலர் முடியில் ஆரஞ்சு நிற ஓலைக்காம்புகள், மலர்க் கொத்துகள் மற்றும் காய்கள் அடுக்காக இருக்கும்
- இந்த இரகமானது 1991ம் ஆண்டு, மத்திய மலைத் தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. கேரளா, கா்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வர்த்தக ரீதியாக பயிரிடப்படுகிறது
- அதிக காற்று மற்றும் வறட்சியான பகுதிகளுக்கு உகந்ததல்ல. அதிக காற்று மற்றும் வறட்சியான பகுதிகளில் நடவு செய்யப்பட்டிருப்பின், நல்ல காற்று தடுப்பு அமைப்பதன் மூலம் புயல் பாதிப்பிலிருந்து தவிர்க்கலாம்
|