- இந்த கலப்பினமானது சவ்காட் ஆரஞ்சு குட்டை x மேற்கு கடலோர நெட்டையிலிருந்து தேர்வு செய்யப்பட்டது
- காய்க்க ஆகும் காலம் 3 முதல் 4 வருடங்கள்
- சராசரி மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 116 காய்கள்
- கொப்பரைத் தேங்காயின் அளவு 215 கி/காய் ஒன்றுக்கு
- எண்ணெயின் அளவு 68%
சிறப்பு அம்சங்கள்
- இந்த கலப்பினமானது கேரளாவில் உள்ள மத்திய மலைத் தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தால், 1991ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது பெரும்பரப்பளவில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
- நாற்றங்காலில், இந்த வகை கலப்பினக் கன்றுகள் அபரிதமான வளர்ச்சியுடன், வெண்கல நிற இலைக் காம்புகளுடன் காணப்படும்
- நல்ல மேலாண்மை முறைகள் பின்பற்றப்படும் சூழ்நிலைகளுக்கு இந்த இரகம் சிபாரிசு செய்யப்படுகிறது
- வேர் வாடல் நோய் பாதிப்பு காணப்படும் பகுதிகளில், மேற்கு கடலோர நெட்டை இரகத்தைக் காட்டிலும், சந்திரசங்கரா இனத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது
|