வாசனை & மலைத்தோட்டப்பயிர்கள்
1.தரமான தேயிலை கிடைக்க எத்தனை இலைகளைஅறுவட செய்ய வேண்டும்
மொட்டுடன் இரண்டு இலைகளை அறுவடை செய்ய வேண்டும்
2.தேயிலையினை எவ்வளவு நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்ய வேண்டும்?
மிகுந்த வளர்ச்சி காலங்களில் - 7-10 நாட்கள் இடைவெளியில்
குறைந்த வளர்ச்சி காலங்களில் - 10-15 நாட்கள் இடைவெளியில்
3. பெரும்பாலான தேயிலை இலைகள் கொப்பளம் போன்ற தேமானற்றம் அளிக்கின்றது. இதற்கு என்ன காரணம்?
இது கொப்புள நோயின் அறிகுறியாகும். இதனைக் கட்டுப்படுத்த
சில்வர் ஓக் மற்றும்
கல்யாண முருங்கை
4. கோடைகாலங்களில் கல்யாண முருங்கையின் இலைகள் தீயிற் கருகினாற் பொல் காட்சி அளிக்கின்றது. அதனை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?
கோடைகாலங்களில் கல்யாண முருங்கையின் தண்டு பகுதியினை கற்றாலை (அ) பாலத்தீன் தாழ்கள் (அ) நீர்த்த சுண்ணாம்பினை நீரில் கலந்து தண்டு பகுதியில் பூச வேண்டும்
5.கடந்த இரண்டு வருடங்களாகஎனது காப்பி தோட்டத்தில் சரியாக பூக்களில் பூப்பதில்லை. இதனை ஏதேனும் செயற்கை முறையில் பூக்க செய்ய முடியுமா?
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சரியான மழை இல்லாதாத தருணத்தில் பூக்கள் பூப்பதில்லை அரும்புவதில்லை எனவே செயற்கை முறையில் தெளிப்பு நீர்ப்பாசனம் செய்வதன் மூலம் அதிக அளவிலான பூக்களை மலர் செய்து மகŸலை அதிகப்படுத்தலாம்.
6.எவ்வளவு நாட்களுக்கு ரப்பர் மரங்களிலிருந்து பால் எடுக்கமுடியும்?
நடவு செய்ததிலிருந்து 12-14 வருடங்கள் வரை அதற்கு பின் மரங்களை வெட்டி விறகு /மரசாதனங்கள் செய்ய பயன்படுத்தலாம்.
7.வணிகரீதியான சாகுபடிக்கு முந்திரி நாற்றுகளை பயன்படுத்தலாமா?
பயன்படுத்த கூடாது. ஒட்டு கன்றுகளையே பயன்படுத்த வேண்டும்.
8.முந்திரி தோட்டங்களில் எந்த வகையான என்ன ஊடு பயிரினை பயிர் செய்யலாம்
நிலக்கடலை பயறுவகைப்பயிர்கள் சிறுதானியப் பயிர்கள்.
9.எனது முந்திரி தோட்டமானது நடவுசெய்த 15 வருமாகின்றது. மேலும் இவற்றிலிருந்து குறைந்த மகŸலையே நான் வருடாவருடம் அறுவடை செய்கின்றேன. இம்மரங்களில் அதிக மகŸல் பெற ஏதேனம் புதிய தொழில் நுட்பம் உண்டா?
இதற்கான தொழில்நுட்பமானது மேற்பரப்பு மாற்று வேலைப்பாடாகும். இதில் வயதாகிய மரங்களை தரைமட்டத்திலிருந்து 1-15 மீ உயரத்தில் வெட்டி விடுதல் வேண்டும். பின் அவற்றில் துளிர்த்து வரும் பகுதிகளை இளந்தளிர், ஒட்டு முறையின் மூலம் தரமான அதிக மகŸல் தரவல்ல தண்டு பகுதியினை சேகரித்து ஒட்டு கட்ட வேண்டும்.
இவ்வாறு ஒட்டு கட்டிய பாகம் நளடைவயில் வளர்ந்து (1-2 வருடம்) நல்ல மகŸல் தரவல்லதாகும். மேலும் இம்முறையினை குறைவாக மகŸல் தரும் மரங்களுக்கும் பின்பற்றலாம்.
10.நான் இராநாதபுரம் மாவட்டததில் வசித்து வருகின்றேன். மேலும் எனது தோட்டங்களில் பயிர் சாகுபடி செய்ய குறைந்த அளவு தண்ணீரே உள்ளது. இதில் நான் பாக்கு சாகுபடி செய்யலாமா?
பாக்கு சாகுபடி செய்ய நல்ல தண்ணீர் வசதி இருக்க வேண்டும்.
11.எனது பாக்கு தோப்பில் அதிக அளவிலான இலை மற்றும் அதனின் அடிபாகம் வீணக் கிடக்கின்றது. இதனை ஏதேனும் பயனுள்ள பொருள்/ லாபம் தாக்கசுடிய பொருட்களாக மாற்ற முடியுமா?
1.பாக்கு மட்டைகள 9அடிபாகம்) உணவு பரிமாரப் பயன்படும் தட்டுகள் செய்து விற்பனை செய்யலாம்
2.எஞ்சிய இலை பாகத்தினை பொடியாக்கி மண் புழுக்கள் கொண்டு மக்கச் செய்யலாம். பின் மண்புழுக்களைப் பிரித்து எடுத்து விற்பனை செய்து லாமீட்டலாம். மேலும் இதனை பாக்கு தோட்டத்தில் ஈடும் பொழுது அங்கக உரத்தேவை குறைந்து மகŸல் அதிகப்படுத்தலாம்
12.கோகோளபயிர் சாகுபடி செய்ய உகந்த இடங்கள் யாவை?
கோகோ பயிரினை தென்னை மற்றும் பாக்கு மர இடைவெளியில் சாகுபடி செய்யலாம்.
13.எனது நிலம் கடற்கரையேரத்தில் அமைந்துள்ள இதில் நான் வெற்றிலை சாகுபடி செய்யமுடியுமா?
உவற்பு /உப்பு சத்து மிகுந்த நிலங்களில் வெற்றிலை சாகுபடி செய்ய முடியாது
14.வெற்றிலை சாகுபடி செய்ய உகந்த துணை/ தாங்கு மரங்கள்/ செடிகள் யாவை?
அகத்தி
15.பெரும்பாலான தென்னை மரங்களில் குரும்பை விழுதல் அதிகமாக உள்ளது. அதனை் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?
வேர் மூலம் தென்னை டானிக் செலுத்துவதன் மூலம் குரும்பை உதிர்வதைக் கட்டுப்படுத்தலாம்
16. எனது தென்னை தோப்பில் உள்ள மரங்களில் இலைகள் வெட்டுப்பட்டு காணப்படுகின்றது.
இது காண்டா மிருக வண்டு தாக்குதலின் ஏற்படும் விளைவுகள் ஆகும். இதனைக் கட்டுப்படுத்த வளரும் குருத்துப் பகுதியில் ஒரு கையளவு மணல் தூவுதல் வேண்டும. மேலும் ஒரு மண் சட்டியில் தென்னை கல்/தெளுகுடன் லிட்ருக்கு 2 மிலி மோனோகுரோட்டடோபாஸ் (அ) மீதைல் டெமட்டான் கலந்து இரவு நேரங்களில் வைப்பதன் மூலம் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம், பின் அரகிலுள்ள தொழுஉரக்கழிவு குழிகளை ன்கு கிளறி கொத்திவிடவேண்டும். அவ்வாறு செய்யும்போது கிடைக்கும் புழுகளை சுண்டு புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும்.
17. மானாவாரி பகுதிகளுக்கேற்ற தென்னை இரகங்கள் யாவை?
விபிஎம் 3 & எஎல்ஆர்(சிஎன்)-1
(வேப்பங்குளம்) (ஆழியார்நகர்)
18. தென்னை தோப்புகளில் ஈரப்பதத்தினை சேமிக்க ஏதேனும் வழிமுறை உண்டா?
தென்னங் தோப்புகளில் ஈரப்பதத்தினை சேமிக்க தேங்காய் மட்டைகளை (அ) மக்கிய தென்னை நார் கழிவுகளை நிலப் போர்வையாக வட்டப்பாத்திகளில் இடலாம்.
19. தென்னை இலையின் அடிப்பகுதியில் சிறிய அளவிலான கூடுகள் காணப்படுகின்றனது. அதனுள்ள சிறிய கருமையான தலைகளுடைய புழுக்கள் இருக்கின்றனது. அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
இது கருந்தலைப் புழுவின் தாக்குதலாகும்
20.தென்னை மரத்தண்டும் பகுதியில் பிசின் போன்ற திரவம் வடிந்துள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் சிறிய துளைகள் காணப்படுகின்றனது. இதனை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?
இது சிவப்பு கூண்டு தாக்குதல் ஆகும்.
21. நான் அறுவடை செய்த தேங்காய் மட்டையின் மீது சிறிய வெடிப்புகள் காணப்படுகின்றது. மேலும் தேங்காய் சிறிய அளவில் உள்ளது. இதனால் என்னால் அதிக விலைக்கு விற்க முடிவதில்லை. இதனைக் கட்டுப்படுத்த வழிமுறைகளைக் கூறவும்
இது ஈரியோபைட் சிலந்தியின் தாக்குதலாகும்
22. நான் தென்னை நாற்றாங்கால் அமைக்க விரும்புகின்றேன்
அதற்கு தேவையான விதை தென்னை /தேங்காயினை எவ்வாறு தேர்வு செய்வது
23.தென்னை நாற்றுகள்/கன்றுகளைத் எவ்வாறு தேர்வு செய்யவேண்டும்?
ஒவ்வொறு நாற்றுகளிலும் குறைந்தது 6-7 இலைகள் இருக்க வேண்டும். மேலும் அதனின் விட்டம் 4 அங்குளம் (10 செ.மீ.) இருக்க வேண்டும்
24. எனது நிலங்கள் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதில் நான் என்னைப்பனை சாகுபடி செய்யலாமா?
மணற்பாங்கான உவற்பு/உப்பு சத்து மற்றும் கல்களைக் கொண்ட மண் வகைகளில் எண்ணைபேனை சாகுபடி செய்ய முடியாது
25 .எண்ணைப் பனையில் அதிக அளவிலான ஆண் பூக்கள் வெளிவருகின்றது/மலர்கின்றது. ஏன், இதனை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?
தண்ணீர் /ஈரப்பத பற்றாக்குறையின் போது பூக்களில் பால் (ஆண்/பெண்) மாற்றம் ஏற்படுகின்றது.எனவே கட்டுப்படுத்த நீண்டகால வறட்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
26. ஏலக்காய் விதைகள் மிகக் குறைந்த அளவு முனைப்புத்திறன் கொண்டுள்ளது. அதனை அதிகப்படுத்த ஏதேனும் புதிய தொழில்நுட்பங்கள் உண்டா?
ஏலக்காய் விதைகளளை கந்தக அமிலம் (அ) †ட்றோகுளோரிக்அமிலத்தில் 20 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின் அவற்றினை நீரில் கழுவி விதைப்பு செய்ய வேண்டும்.
27.எனது ஏலக்காய் வயலில் / எஸ்டேடில் ஓரு சில செடிகள் வெளிறிய பச்சை / மஞ்சள் நிறத இலைகள் காணப்படுகின்றது.அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்.
இது மொசைக் (அ) கட்டே நச்சுப் பயிர் நோய் தாக்குதலாகும்.
28.எனது ஏலக்காய் தோட்டத்தில் மிகக் குறைந்த அளவான காய்பிடுப்பு உள்ளது.காய்பிடுப்பினை அதிகப்படுத்த ஏதேனும் வழிமுழறகள் உண்டா?
ஏலக்காய்இ மகரந்த சேர்கை அதிகப்படுத்துவதன் முலம் காய்பிடிப்பினை அதிகப்படுத்தலாம். எனவே 1 எக்கர் ஏலக்காய் பயிருக்கு 7 -10 தேனீ வளர்ப்பு பெட்டிகளை வைக்க வேண்டும்.
29.கிராம்பினை எந்த தருணத்தில் அறுவடை செய்யலாம்?
பூ மொக்குள் பச்சையிலிருந்து இளம் சிவப்பு நிறமாக மாறும்போதுஇ அதே சமயம் பூக்கள் இதழ் விரியத்தொடங்குவதற்கு முன்னர் அறுவடை செய்ய வேண்டும்.
30.நான் வணிகரீதியாக ஜாதிக்காய் சாகுபடி செய்ய விரும்புகின்றேன்.
வணிகரீதியாக நடவு செய்ய ஓட்டு கட்டிய செடுகளைத் தெர்ந்தெடுக்க வேண்டும். விதைகள் மூலம் உற்பத்தி செய்யப் படும் நாற்றுக்கள் காய் பிடுக்க 6 -7 வருடம் ஆகும்.மேலும் அவ்வாறான கன்றுகள் இருபால்(ஆண் & பெண் மரங்கள்) உற்பத்தி செய்யக் Üடும் . எனவே ஆண் மரங்களில் இழப்பினைத் தடுக்க பெண் மரங்களிலிருந்து செடிகளை நடவுக்குப் பயன்படுத்த வேண்டும்.
31.நான் ஜாதிக்காய் நடவு செய்து 10 வருடம் ஆகின்றது. அவற்றில் பெரும்பாலான மரங்கள் ஆண் மரங்கள். மேலும் பெண் மரங்கள் மிகக் குறைந்த அளவில் மகசூல் தருகின்றது. இவற்றிற்கு மாற்று வழி ஏதேனும் உண்டா?
இதற்கு மேற்பகுதி மாற்று வேலை தொழில்நுட்பம் மூலம் மாற்றி அமைக்கலாம். இதில் பெண் மரங்களில் இருந்து தண்டு மூலத்தை எடுத்து இளந்தளிர் ஓட்டு மூலம் ஓட்டு கட்டுவதாகும். இதன் மூலம் மகசூல் குறைந்த பெண் மரங்கள் மற்றும் மகசூல் தராத ஆண் மரங்களை அதிக மகசூல் கிடைக்க செய்யலாம்.
32.இலவங்க மரங்களில் அதிகமகசூல் கிடைக்க ஏதேனும் வழிமுறைகள் உண்டா?
இலவங்க மரங்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட கிளைகளிருந்து பறித்து நீர் ஆவியாதல் முறை மூலம் இலவங்க எண்னண எடுக்கப் பயன்படுத்தலாம் மேலும் இலைகளை மக்கச் செய்து மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
33.எனது வயலில் அருவடை செய்யப்பட்ட பூண்டுகள் ரப்பர் போன்று காணப்படுகின்றது. இதற்கு ஏதேனும் கட்டுப்பாட்டு முறைகள் உண்டா?
கரகுமின் எடுக்கும் தொழிற்சாலைகளுக்கு உகந்த மஞ்சள் இரகங்களைக் கூறவும்.
அலப்பி (ஆலப்புழா).
34.எனது வயலில் அறுவடை செய்யப்பட்ட மஞ்சளின் கிழங்கு அழுகி காணப்படுகின்றது. இதனை எவ்வாறு கட்டுபடுத்துவது? விதைக்குத் தேவையான மஞ்சளினை எவ்வாறு சேமிக்க வேண்டும்?
விதைப்பதற்கு தேவையான மஞ்சளை நிழற்பகுதியில் மணலை ஊடகமாக கொண்டு சேமித்து வைக்க வேண்டும்.கோடை காலங்களில் அதன் மீது நீர் தெளிப்பது மிகவும் அவசியமாகும். இதன் முலம் விதை மஞ்சளில் உள்ள நீர் சத்து ஆவியாதலைத் தடுக்க முடியும்.
35.மஞ்சளில் ஊடுபயிருக்கு உகந்த பயிர்கள் யாவை?
வெங்காயம், கொத்தமல்லி மற்றும் வெந்தயம்.
36.வெண்ணிலா சாகுபடிக்கு உகந்த தாங்கு / சணை செடிகள் / மரங்கள் யாவை?
கிளைரிசிடியா
கல்யாண முருங்கை
காட்டா மணக்கு
சவுக்கு. மேலும் இதனை தென்னை மரங்களில் ஊடு பயிராக வளர்க்கச் செய்யலாம்.
37.வெண்ணிலா சாகுடியில் செயற்கையான முறையில் மகரந்த சேர்க்கை தேவையா? அதனை எவ்வாறு செய்ய வேண்டும்?
அதிக மகசூல் எடுக்க மகரந்த சேர்கை செய்வது மிகவும் அவசியமாகும்.
38.எந்த தருணத்தில் வெண்ணிலா காய்கள் (பீன்ஸ்) அறுவடை செய்யலாம்?
வெண்ணிலா காய்கள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும் பொழுது அறுவடை செய்ய வேண்டும்.
39.வெண்ணிலா நடவு செய்ததிலிருந்து எவ்வளவு நாட்கள் வரை லாபகரமான மகசூல் எடுக்க முடியும்?
12 -14 வருடங்கள் வரை.
40.எனது நிலம் கீழ் பழனி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இதில் பயிர் சாகுபடி செய்ய விரும்புகின்றேன். இதற்கு எந்த இரகம் சிறந்ததாக இருக்கும்.
பன்னியூர்-1
41.பாக்கு தோப்பில் சாகுபடிக்கேற்ற மிளகு இரகங்கள் யாவை?
பன்னியூர்-1
42.மிளகு கொடிகளை படரச் செய்ய உகந்த துணை செடிகள் மரங்கள் யாவை?
சில்வர் ஓக் மற்றும் கல்யாண முருங்கை.
43.மிளகு காய்களின் வளர்ச்சியினை மேன்படுத்த ஏதேனும் தொழில்நுட்பங்கள் உண்டா?
மிளகு காய்களின் வளர்ச்சியினை ஊக்கப்படுத்த என்ஏஏ (பிளானோபிக்ஸ்) 40 பிபிஎம் தெளிக்க வேண்டும். |