||| | | | | |
தோட்டக்கலை :: கேள்வி பதில்கள் :: காய்கறிப் பயிர்கள்

காய்கறிப் பயிர்கள்

1. வீரிய ஒட்டு தக்காளி சாகுபடி செய்ய எவ்வளவு விதை தேவைப்படும்?
ஒரு எக்டருக்கு 150 கிராம்

2. எனது வெண்டை வயலில் ஒரு சில வெண்டை செடிகள் வெளிறிய மஞ்சள் நிறத்துடன் காணப்படுகின்றது. காரணம் என்ன? அதனை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்
இது குறிப்பாக மஞ்சள் தேமல் நோய் தாக்குதலின் காரணமாகும்

3. மிளகாயில் அதிக மகŸல் பெற ஏதேனும் உக்திகள் உண்டா?
மிளகாயில் பூக்கள் உதிர்வதைத் தடுப்பதன் மூலம் அதிக மகŸல் எடுக்க முடியும் எனவே

4. எவ்வாறு வணிகரீதியாக குடைமிளகாய் சாகுபடி செய்ய முடியும்?
வணிகரீதியாக குடைமிளகாயினை நிழல்வலைக்குடில்களில் சாகுபடி செய்யலாம்

5. பஜ்ஜி மிளகாயினை அதிக வெப்ப பிரதேசங்களில் சாகுபடி செய்யலாமா?
பஜ்ஜி மிளகாயினை அதிக வெப்ப மண்டலங்களில் சாகுபடி செய்ய முடியாது. மேலும் இதனை நிழல்வலை குடில் தென்னை மரங்களுக்கிடையே சாகுபடி செய்யலாம்.

6. பூசணி வகைப் பயிர்களுக்கு ஏன் தாமிர வகை பூஞ்சாணக் கொல்லியினை ஏன் பயன்படுத்துவதில்லை
டிடிடி, லின்டேன், தாமிர மற்றும் கந்த பூஞ்சாணக் கொல்லிகளை பரிந்துரை செய்தல் கூடாது. ஏனெனில் அவை தாவர நச்சு விளைவிக்கம் தன்மையுடையதாகும். எனவே இதனைத் தவிர மற்ற வகை பூஞ்சாணக் கொல்லியினை பரிந்துரை செய்ய வேண்டும்.

7. குவார் பிசின் எந்த தாவரத்திலிருந்து எடுக்கப்படுகின்றது.
கொத்த அவரை

8. பந்தல் முறையில் சாகுபடி செய்ய உகந்த அவரை இரகங்கள் யாவை?
கேரு1,2,3,4,5 மற்றும் பூசா இயற்லிபுராலிபிக்

9. செடி முருங்கையில் உள்ள இரகங்களை கூறவும்?
பிகேஎம்-1 & 2

10. நான் ஒரு எக்டர் செடிமுருங்கை சாகுபடி செய்ய விரும்புகின்றேன். அதற்கு எவ்வளவு விதை தேவை?
500 கிராம்

11. எனது முருங்கை பயிரில் அதிக அளவில் கம்பளி புழுக்களில் தாக்குதல் உள்ளது. அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
கம்பளிபூச்சிகள்
குளோரிபைரிபாஸ் (அ) குயினால்பாஸ் 2மிலி/லி தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்

12. சமவெளிப் பகுதிகளில் சாகுபடிக்கு உகந்த கேரட் இரகங்கள் யாவை?
இண்டிய கோல்ட், பூசா கேசர் மற்றும் ஹல்ஃ லாங் டேன்வார்ஸ்

13. சமவெளிப் பகுதிகளில் எந்த பருவத்தில் கேரட் சாகுபடி செய்யலாம்?
ஆகஸ்ட் மாதங்களில் சாகுபடி செய்யலாம்

14. சமவெளிப் பகுதிகளுக்கு உகந்த முள்ளங்கி இரகங்கள் யாவை?
கோ-1, பூசா ராஸ்மி, பூசா செட்கி, பூசா தேசி, ஜேப்பனீஸ் ஒயிட் மற்றும்அர்கா நிஷாந்

15. முள்ளங்கியினை வெட்டிப் பார்க்கும் பொழுது அதனின் மத்தியப் பகுதியானது பஞ்சுயானது பஞ்சுபோன்று கடினமான பகுதிகாணப்படுகின்றது அது ஏன்?
எனவே. சரியான தருனத்தில் அறுவடையினை செய்ய வேண்டும் காலம் கடந்து தாழ்த்தி அறுவடை செய்வதன் மூலம் இவ்வாறு ஏற்படுகின்றது.

16. முள்ளங்கியில் ஏற்படும் ஒரு வகையான நறுமணம் என்ன காரணம்?
ஐசோ தையோசைனேட் என்னும் வேதிப் பொருளேயாகும்

17. பீட்ரூட் சாகுபடியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய உக்திகள் என்ன?
ஒரு பீட்ரூட் விதையிலிருந்து 2-3 நாற்றுகள் முளைத்து வெளிவரும். எனவே சரியான பயிர் எண்ணிக்கையினை பராமரிக்க விதைத்த 10-15 நாளில் செடிகளை களைத்து எடுக்க வேண்டும்
26.நான் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யும் போது 2/3 பங்கு செலவானது விதை கிழங்கிற்கு என செலவு செய்ய நேரிடுகின்றது. இதற்கு ஏதேனும் மாற்று வழிமுறைகள் உண்டா?
உருளைக் கிழங்கினை கிழங்கு மற்றும் விதைகள் மூலம் உற்பத்தி செய்யலாம். விதைகள் (உண்மை நிலை விதைகள்) மூலம் உற்பத்தி செய்வதன் மூலம் சாகுபடி செலவினை வெகுவாக குறைக்கலாம். ஒரு எக்டர் சாகுபடி செய்ய 100-150 கிராம் விதை போதுமானதாகம்.

18. சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாகுபடிக்கு என்ன பயிர் இடைவெளி கடைபிடிக்க வேண்டும்
செடிகளுக்கான இடைவெளி 20 செ.மீ.கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் ஒரு எக்டருக்கு 80,000 செடிகள் வரை நடவு செய்யலாம்

19. எனது வயலில் இருந்து அறுவடை செய்யப்படும் சர்க்கரை வள்ளிக்கிழங்கானது சிறிய துளைகளுடனும், பருகள் போன்ற சேதமும் காணப்படுகின்றது. இதன் மூலம் சந்தையில் குறைந்த விலைக்கே விற்க முடிகின்றது. ஏன்?
இதுகுறிப்பாக கூண் வண்டுகளின் தாக்கதலாகும்

20. எனது நிலம் களிமண் பாங்கான மண்வகையினைச் சார்ந்ததாகும். இதில் நான் மரவள்ளி சாகுபடி செய்து அதிக மகŸல் எடுக்க முடியுமா?
களி மண் வகைகளில் மரவள்ளி சாகுபடி செய்தல் கூடாது. எனெனில் கிழங்கு வளர்ச்சி குன்றி குறைந்த மகŸலே கிடைக்கும். எனவே மணற்பாங்கான இரும் பொறை மண் வகைகளில் சாகுபடி செய்தல் சிறந்ததாகும்.

21. மரவள்ளி/சேகோ ஆலைகளில் கிடைக்கும் மரவள்ளி கிழங்கு பட்டைகளை கால்நடைத் தீவனமாக பயன்படுத்தலாமா?
அவ்வாறு கிடைக்கும் கிழங்கு பட்டைகளை வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும். அவ்வாறு உலர்த்தும் போது அதனின் உள்ள நஞ்சு பொருள் (ஹரோசைனிக் அமிலம்) அழிக்கப்பட்டு கால்நடைகளுக்கு எந்தவித தீங்குகளையும் ஏற்படுத்துவதில்லை.

22. எனது மரவள்ளி வயலில் பெரும்பால செடிகளில் இலைகள் சுருங்கியும், வெளிறிய நிறத்துடனும் காணப்படுகின்றது. இது நன்மையா? தீங்கு ஏற்படுத்துமாயின் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
இலைகளின் சுருக்கமானது மரவள்ளியின் ரைவஸ் நோய் தாக்குதலாகும் இந்நோய் வெள்ளை ஈகள் மூலம் பரப்பப்படுகின்றது. எனவே முதற்கட்டமாக வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 2மிலி/ லிட்டர் தெளிக்க வேண்டும். மேலும் நடவின் போது நோய் தாக்கப்படாத செடிகளிலிருந்துகருணை எடுத்து நடவு செய்ய வேண்டும்.

23. ஒரு எக்டர் நடவு செய்ய எவ்வளவு கருணைகள் தேவைப்படுகின்றன.
17,000

24. நான் மானாவாரியில் மரவள்ளி சாகுபடி செய்ய விரும்புகின்றேன். ஏதேனும் உக்திகள் உண்டா?
கருணைகளை நடவிற்கு முன் பொட்டாசியம் குளோரைட் @ 5 கிராம்/லிட்டர் மற்றும் நுண்ணூட்டங்களான துத்தநாகம் மற்றும் தாமிர சல்பேட் @ 0.5% கலவையில் 20 நிமிடம் நனைத்து நடவு செய்ய வேண்டும்.

25. மரவள்ளியில் ஏதேனும் உயிர் உரங்கள் நேர்த்தி முறை உண்டா?
அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போகபேக்டீரியா நுண்ணுயிர் (30கிராம்/லிட்டர்) கலவையினுள் கருணைகளை 20 நிமிடம் நனைத்து நடவு செய்ய வேண்டும்

26.எனது மரவள்ளி வயலில் ஒரு சில செடிகள் வெளிறிய மஞ்சள் நிறத்துடன் காணப்படுகின்றது. அதனை எவ்வாறு நிவர்த்தி செய்ய முடியும்
வெளிறிய மஞ்சள் நிற இலைகள் உருவாகாக முக்கிய காரணம் இரும்பு சல்பேட் மற்றும் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையேயாகும். எனவே நடவு செய்த 60வது மற்றும் 90வது நாளில் 1% இரும்பு சல்பேட் +0.5% துத்தநாகம் சல்பேட் தெளிக்க வேண்டும்

27.புயல் நேரங்களில் எனது மரவள்ளி வயலில் தண்ணீர் தேங்கி இருக்கும். பின்பு செடிகள் வாடியும் இலைகள் கீழ்நோக்கி விழுந்து விடுகின்றது. ஏன்?
புயல் நேரங்களில் ஏற்படும் கன மழையினால் வயல்பகுதியில்  நீர்தேங்கி பின் கிழங்கு அழுகல் ஏற்படுகின்றது. எனவே கனமழையின் போது நல்ல வடிகால் வசதியினை ஏற்படுத்த வேண்டும். மேலும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு லிட்டருக்கு 2.5 கிராம் என்ற அளவில் கலந்து வேர் பகுதயில் ஊற்ற வேண்டும்.

28. எனது தோட்ட நிலங்கள் விழுப்புரம் மாவட்டத்திலுள்ளது. அதில் நான் பெருவள்ளிகிழங்கு சாகுபடி செய்ய விரும்புகிறேன் என்ன இரகம் சிறந்ததாக இருக்கும்?
கோ1, ‚ரூபா,‚கீர்த்தி, ‚சில்பா

29. விழுப்புரம் பகுதியில் பயிரிடச் சிறந்த சிறுவள்ளி கிழங்கு இரகங்களைக் கூறவும்
‚லதா, ‚கலா

30.நான் சிறு வெங்காயத்தினை விதைமூலம் உற்பத்தி செய்ய முடியுமா? அவ்வாறு இருப்பின் உகந்த இரகத்தின் கூறவும்.
கோ (ஆன்)5

31.எனது வெங்காய பயிரில் வெள்ளை/வெளிய நிறப்பகுதிகள் உள்ள இலைகள் காணப்படுகின்றது. மேலும் அத்துடன் சிறிய கருப்பு நிற பூச்சிகள் காணப்படுகின்றது. இது நன்மையா?

வெளிறிய பகுதிகள் காணப்படுவதற்கு இலைப்பேன் தாக்குதலே காரணமாகும். இதனைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 ஈ.சி. 1மிலி/ லிட்டர் +0.5 மிலி ஒட்டும் திரவமான டிபால் கலந்து தெளிக்க வேண்டும்.

32.பெரு வெங்காயம்/பெல்லாரி வெங்காயம் சாகுபடி செய்ய எவ்வளவு நாள் வயதுடைய நாற்றுக்களை தேர்வு செய்ய வேண்டும்
45 நாள்

33.கிள்ளுக்கீரைக்கு பயன்படும் இரகங்கள் யாவை?
கோ3

34.தானியக் கீரைக்கு பயன்படும் இரகங்கள் யாவை?
கோ4

35.நான் கோ4 கீரை வகை சாகுபடி செய்துள்ளேன்
ஒரு எக்டரிலிருந்து எவ்வளவு மகசூல் கிடைக்கும்?

ஒரு எக்டரிலிருந்து 2.4 டன் தானியம் + 8 டன் பசுங்கீரை அறுவடை செய்யலாம்

36.நான் கருவேப்பிலை சாகுபடி செய்து வருகின்றறேன. தற்போது செடியின் உயரம் சராசரி 2மீ. உள்ளது. மேலும் எனக்கு குறைந்த மகசூலே கிடைக்கின்றது. ஏன்?
பொதுவாக செடிகள் 1 மீ உயரம் வளர்ந்தவுடன் வளரும் கொழுந்து பகுதியினை கிள்ளி நீக்கிவிட வேண்டும். இதன் மூலம் பக்க கிளைகளின் எண்ணிக்கை அதிகமாகி மகŸல் அதிக அளவில் கிடைக்கும்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014