தோட்டக்கலை :: நிழ எழிலூட்டுதல் :: மலர் அமைப்பு முறை |
|
பூந்தோட்டத்தின் அங்கங்கள் பருவத்தில் பூக்கும் மலர்ச்செடிகளையும் பல்லாண்டு காலம் வரை பூக்கும் குத்துச் செடிகளையும் நட்டு மலர் பாத்திகள் அமைக்கலாம். மலர்ப் பாத்திகளை வேண்டிய வடிவில் அமைக்கலாம். பூந்தோட்டத்தின் பரப்பளவிற்கேற்ப்ப பாத்திகளின் எண்ணிக்கை இருக்கலாம். கல்வாழை, டாலியா, லில்லி, சம்பங்கி ஆகிய செடிகளை தனித்தனிப் பாத்திகளில் நட்டு அமைக்கப்படும் மலர்ப்பாத்திகள் மிகவும் அழகாக இருக்கும். குட்டையான செடிகளை முன்புறத்திலும் உயரமாக வளரும் செடிகளை புறமாகவும் நடவு செய்யலாம். இம்முறை சிறு மற்றும் பெரு நகரங்களிலுள்ள தாவர பூங்காக்களில் சிறுவர் மற்றும் குழந்தைகளுக்காக பொழுது போக்கிற்காகவும் மற்றும் சிந்தனை அறிவைத் தூண்டுவதற்காகவும் பயன்படுகிறது. சவுக்கு, காகிதப்பூ, பைன் மற்றும் குப்ரசுஸ் ஆகிய தாவரங்களைப் பயன்படுத்தி மனித உருவ அமைப்பு மற்றும் கூடாரங்கள் மறைவுகள் போன்றவைகள் உருவாக்கப்படுகிறது. இந்த உருவ அமைப்பினை ஏற்படுத்துவதற்கு அனுபவம் வாய்ந்த கவாத்து நிபுணர் தேவைப்படுகிறது. இதுபோன்ற தாவரங்களை நெருக்கமாக வளர்த்து மிதமாக வளர்ந்த பிறகு தேவையான உருவ அமைப்புகளைக் கவர்ந்து செய்து பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக மழைக் காலங்களில் அதிக அளவு வளர்ச்சி இருப்பதால் சீராக பராமரித்தல் அவசியம். தாவர வளைவுகள் பூந்தோட்டங்களில் நடைபாதையின் மேல் அரைவட்டங்களில் இரும்பு கம்பிகளை தொடர்ச்சியாக 8-9 மீட்டர் உயரத்தில் அமைக்க வேண்டும். அதன்பின் அக்கம்பிகளில் மீது குறிப்பிட்ட தாவரங்களை அதன் மேல் படர விட்டு வளர்ப்பது ஆகும். இவ்வகையான தாவரங்களை வளர்ப்பதற்கு அலமண்டா, இரங்கூன் கொடி மற்றும் துன்பர்ஜியா போன்ற கொடிவகைகள் உகந்தவைளாக கருதப்படுகிறது. பூக்கின்ற கொடிகளைக் கொண்டு உருவகற்களை அமைத்தல். வைரோஸ்டீஜியா, வெட்ரியாவாலிபிலிஸ், முல்லை, மல்லி காகிதப்பூ போன்ற அதிக கவர்ச்சியான பூக்களைக் கொண்ட செடிகளைப் பயன்படுத்தி பல்வேறு உருவங்களில் பயிற்சி செய்து பராமரிக்கலாம். மரத்தொகுப்பு பெரிய பூங்காக்களில் அழகு மற்றும் பயனுள்ள மர வகைகளை ஒரே இடத்தில் வகைவாரியாக நட்டு பராமரிக்கலாம். இம்முறையை அர்ப்பேரேட்டம் என அழைக்கப்படுகிறது. இதில் அழகு தரும் பூக்கும் மரங்கள் , நறுமணம் தரும் மரங்கள், அழகான இலை அமைப்பு மற்றும் மரங்களின் மரங்களின் வடிவ அமைப்புகளுக்கு ஏற்றாற்போல பிரித்து நாம் நடலாம். டிராபி பூந்தோட்டத்தின் மையத்திலோ அல்லது முக்கியமான இடத்திலுள்ள வளரும் மரம் அல்லது ஏதாவது ஒரு பொருளைச் சுற்றியோ அழகிய அழங்காரப்பூந்தொட்டிகளை நெருக்கமாகப் பல அடுக்குகளில் அடுக்கும் முறை டிராபி எனப்படும் இதற்கு உகந்த தாவரமாக கருதப்படுவது அக்லோனிமா , பெகோனியா குறுந்தாவரங்கள் போன்றவைகளாகும். தாவர வளைவுகள் பூங்காக்களின் பிரதான நுழைவாயில்கள் மற்றும் பூந்தோட்டத்தின் பிற முக்கிய பகுதிகளின் நுழைவாயில்களில் இலகுவாக வளையும் தன்மை கொண்ட செடிகளைக் கொண்டு வளைவுகளாகப் பயிற்சி செய்து பராமரிக்கலாம். இவ்வகையான தாவர வளைவுகள் அமைப்பதற்கு அலமண்டா, துன்பர்ஜியா , பீநாரி, காகிதப்பூ போன்ற கொடிவகைகள் உகந்தவைளாக கருதப்படுகிறது. பாதைகள் ஒரு அழகிய பூந்தோட்டம் பலரால் கண்டு மகிழ உருவாக்கப்படுகிறது. இதனின் பல அங்கங்களை பார்த்து ரசிக்க தோட்டத்தின் எல்லா பகுதிக்கும் சென்று வர வேண்டியது அவசியம். இதற்கான பாதைகள் தோட்டங்களின் இன்றியமையாத ஒன்றாகும். பூந்தோட்டத்தின் தன்மைகளைப் பொருத்து பாதையின் அகலம் அமைகிறது. பொருந்தா பாதைகள் அமைத்து அதன் அழகு கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறிய பாதையாகுமானால் அது 3 அடி அகலத்திருக்கலாம். இதுவே பெரிய தோட்டமாக இருந்தால் 10-15 அடி அகலம் வரை அமைக்கலாம். பாதைகள் நேராகவோ அல்லது தேவையான அளவு வளைவுகளுடனோ இருக்கலாம். குறுகிய வளைவுகள் தோட்டங்களின் அழகைக் கெடுத்துவிடும். பாலங்கள் படிக்கட்டுகள், அடுக்குகள் பூந்தோட்டங்கள் மன அமைதியை நாடி வருவோருக்கு ஓர் சிறந்த உறைவிடம். பூந்தோட்டங்களைத் தேடி வரும் பலர் தங்களது தனிமை இனிமையாகக் கழிய வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. இவ்வகையான மக்கள் தங்களது தனிமையை உறுதி செய்ய குடில்கள் உதவுகின்றன. இது தவிர இவை குடை போல் நிழல் தருவதுடன் அழகிய பூந்தோட்டத்தில் முளைத்த பெரிய காளாண்கள் போன்ற பிரம்மையை நமக்குத் தரும். பொதுவாக கடலுக்கு அருகாமையிலுள்ள பூந்தோட்டங்களில் இவ்வகைக் குடில்கள் பெரும்பாலும் நிரந்தர அங்கமாகவே அமைவது சிறப்பு. பாறை அமைவிடம் மனதினால் ஆக்கப்படும் பூந்தோட்டங்கள்யாவும் அவன் மனதை பாதித்த இயற்கையின் பிரதிபலிப்பாகவே இருக்கும். எனவே பூந்தோட்டங்கள் பல நேரங்களில் இயற்கையின் அளப்பரிய வடிவத்தின் சுருக்கிய அமைப்பாகத் தென்படலாம் பெரிய மலைக் குன்றுகள், மலைத் தொடர்கள் நம்மின் உள் உணர்வுகளை தூண்டி ஆழ் மனதில் அமரும் போது அவற்றின் புறப்பரிமானமாக சிறிய பாறைகளைப் பயன்படுத்தி அதன் பிரதிபலிப்பை உண்டாக்குவதின் முயற்சியே பாறை அமைவிடம் அல்லது பாறைத்தோட்டம். இவ்வகையான பூந்தோட்டங்கள் நம்மை இயற்கையின் வாசலுக்கு இட்டுச் செல்வது போல் ஓர் பிரம்மையை ஏற்படுத்த தவறுவதில்லை. இவ்வகைப் பூந்தோட்டங்கள் சிலநேரம் கரடுமுரடான பாறைகளைக் கொண்டும், சில நேரம் வளவளப்பான பாறைகளைக் கொண்டும் அமைக்கப்படுகின்றன. பாறைகளின் வடிவம், அமைப்பு, புறத்தோற்றம் இவையாவும், தொகுப்போரின் எண்ண அலைகளின் வெளிப்பாடாக இருக்கும். நீர்த்தேக்கம் பூந்தோட்டத்தின் புறத்தோற்றத்தினைப் பிரதிபலிக்க நீரின் உதவியை நாடி அவற்றின் கண்ணாடியாக நீர்த்தேக்கங்கள் பயன்படுகின்றன. இதனை அமைக்க இடத்தேர்வு மிகவும் முக்கியமானது. சரியான இடத்தை தேர்வு செய்து அமைக்கும் போதுதான் அதன் பயனை முழுமையாக்க முடியும். இவ்வகை நீர்த்தேக்கம் பல வடிவங்களில் அமைக்கப்பெற்று அவற்றில் தாமரை, அல்லி போன்ற நீர்வாழ்தாவரங்களும் மீன் போன்ற உயிரினங்களும் பயன்பாட்டை மேலும் வலுப்படுத்தும். அமர்விடங்கள் பூந்தோட்டங்களைக் கண்டு மகிழ வருவோர் அதனை அமர்ந்து மகிழ வசதிசெய்ய தேவைக்கேற்ற அமர்விடங்கள் அவசியமாகிறது. நிழல் தரும் தாவரங்களுக்கு கீழ் சிமெண்ட்டால் ஆன அமர்விடங்கள் அல்லது மரத்தாலான அமர்விடங்கள் நிர்மானித்து காண்போரை ஆசுவாசப்படுத்தலாம். பறவைக் குளியல் பூந்தோட்டத்திற்கு மனிதன் மட்டும் சொந்தாகாரன் அல்ல. அவை இயற்கையின் உறைவிடம் என்பதால் பறவைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். எனவே பறவைகள் வந்து தமது அலகுகளையும், இறக்கைகளையும் நனைக்க சிறிது நீர் நிற்குமாறு பறவைக் குளியல் அமைப்பது அவசியம். இவ்வமைப்புகள் கல்தூண்களில் அல்லது சிமெண்ட்டாலான சிறு கட்டட அமைப்புடன் செய்யலாம். தடுப்புகள் பூந்தோட்டங்கள் பல அங்கங்களின் தொகுப்பாகும். ஒவ்வொன்றும் அதன் அழகை வெளிப்படுத்த அவற்றைப் பிரித்துக் காட்டுவது அவசியமாகிறது. இதற்காக பூந்தோட்டங்களில் மரத்தடுப்புகள் மற்றும் கம்பிகளினாலான தடுப்புகள் அமைக்க வேண்டும். இத்தடுப்புகளில் படரும் செடிகளைப் படரவிட்டு முழுமையான தடுப்பாக செய்யலாம். இவ்வகைத்தடுப்புகள் தேவைக்கேற்ப அமைத்து பயன்பெறலாம். விளையாட்டுப் பொருள்கள் பூந்தோட்டங்கள் சிறுவர் சிறுமியருக்கும் சொந்தம்தான். அவர்கள் கண்டு மகிழ்ந்த பின்னர் ஆடி மகிழ சீசா, ஊஞ்சல், சறுக்கு, இராட்டினம் போன்ற விளையாட்டுப் பொருள்கள் அமைப்பது அவசியம். குழந்தைகள் இதனைப் பயன்படுத்தி மகிழ்வதைக் கண்டு பெற்றோர் இன்புறுவர். இவற்றினை நிர்மாணிக்கும் போது அவையாவும் ஆபத்தை விளைவிக்காமல் பாதுகாப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வளைவுகள் பூந்தோட்டங்களை இணைக்க வளைவுகள் அவசியம். அவை நிழல் குடைபோல் அமைந்தால் பயன்படுத்துவோருக்கு மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் இருப்பது போன்ற உணர்வு மேலிடும். இதற்காக சிமெண்ட் தூண்கள் இருபுறமும் அமைத்து கம்பிகள் கொண்டு இணைத்து அவற்றில் படரும் கொடிகள் வளர்த்து அவை நிழல் தருமாறு செய்யலாம். இவற்றைப் பலவகையான தோட்டங்களை இணைக்க பயன்படுத்தலாம். உருவங்கள், சிலை பிரம்மாண்டமான உருவங்கள் சில பூந்தோட்டங்களில் அமைப்பது அதனின் அழகை மேலும் வலுப்படுத்தும் மெரினாவில் உள்ள உழைப்பாளிகள் சிலை, அமெரிக்காவின் லிபர்ட்டி சிலை இவ்வகைகளைச் சாரும். பூந்தோட்டங்களில் இவ்வகையான சிலைகள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைக்கலாம். இவ்வகை அமைப்புகள் தொகுப்போரின் எண்ணப்போக்கைப் பொறுத்து இடம்பெறும் அல்லது இடம்பெறாமலும் போகலாம். |
|
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015 |