||| | | | | |
தோட்டக்கலை :: இரகங்கள் :: பழப் பயிர்கள்

பழப் பயிர்கள்

இரகம்   விவரிப்பு புகைபடங்கள்
  1.நார்த்தங்காய்  
பிகேஎம் 1 (1990)

திருநெல்வேலி மாவட்டம் கடயம் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரகம் மரம் வேகமாக வளரக்கூடியது. ஒரு வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம். பழம் பெரியதாகவும் ஒரு பழத்தின் எடை 52 கிராம், ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் இருந்து 934 பழங்கள் கிடைக்கும். இதனுடைய எடை 36975 கிலோ எடை கொண்டது.

drger

PKM 1 (1990)

  2.பெருநெல்லி  
பவானி சாகர் 1 (1995)

பவானி சாகர் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இந்த இரகம் வெளியிடப்பட்டது. இந்த இரகத்தில் 155 கிலோ பழங்கள் ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் இருந்து கிடைக்கிறது. இந்த இரகம் தமிழ்நாடு முழுவதும் சாகுபடி செய்ய ஏற்ற இரகம்.

wrg

BSR.1 (1995)

  3.ஆப்பிள்  
கொடைக்காணல் .1 (1987)

 

பார்லின் பியூட்டி என்று இரகத்தில் இருந்து இந்த கொடைக்காணல் – 1 இரகம் தேர்வு செய்யப்பட்டது. மரத்தின் உயரம் சராசரி அளவும் மற்றும் அதிக மகசூலும் கிடைக்கும். மகசூல் ஒரு எக்டருக்கு 22 டன் கிடைக்கும். பழங்கள் ஜீலை முதல் ஆகஸ்ட் வரை கிடைக்கும். பழத்தின் பெரிய அளவாக இருக்கும். ஒவ்வொரு பழத்தின் எடை 170 கிராம் பழம் முழுவதும் பழுத்த நிலையில் மஞ்சள் நிறத்தில் காணப்படும். ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் 400 பழங்கள் மகசூல் கிடைக்கும்.

 

ddf

KKL.1 (1987)

  4.அவகடோ  
டிகேடி . 1 (1997)

பழங்கள் பச்சை நிறத்தில் உருண்டையாகவும் மற்றும் சராசரி அளவுகளை கொண்டது. மகசூல் ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் 264 கிலோ பழங்கள் மகசூல் கிடைக்கும். இந்த இரகம் சாகுபடி செய்ய ஏற்ற இடம் பழநி மற்றும் ஏற்காடு மலை பகுதி.

dff

TKD.1 (1997

  5.வாழை  
கோ . 1 (1984)

இந்த இரகம் சாகுபடி செய்வதற்கு அனைத்து இடங்களும் ஏற்ற இடம் ஆகும். வாழை மரத்தின் காலம் 14 முதல் 15 மாதம்.

 

sdvgv

CO 1 (1984)

  6.சீத்தாப்பழம்  
ஏபிகே . 1 (2003)

 

பழத்தின் எடையின் அளவு சுமார் 207.5 கிராம் ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் 72 பழங்கள் கிடைக்கும். முதல் மூன்று முதல் மூன்றரை ஆண்டுக்கு பிறகு அறுவடை ஆரம்பிக்கும். சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலம் மே முதல் ஜீன் மற்றும் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை மகசூல் ஒரு எக்டருக்கு 7300 கிலோ பழம்.

 

  7.அத்தி பழம்  
ஏற்காடு – 1 (திம்லா அத்தி) (1993)

 

ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இந்த இரகங்கள் வெளியிடப்பட்டது. பழங்கள் சிவப்பு நிறத்தில் மற்றும் பழத்தின் அளவு 7 வெ.மீ விட்டம் அகலம் கொண்டது. ஒரு பழத்தின் எடை அளவு 100 முதல் 200 கிராம்.

 

vfgvv

YCD.1 TIMLA FIG (1993)

 

  8.கொய்யா  
திருச்சி (G) .1 (2005)

 

இந்த இரகம் திருச்சி வேளாண் கல்லூரியில் வெளியிடப்பட்டது. மகசூல் ஒரு மரத்திற்கு 40 .52 கிலோ பழங்களை தரும் வல்லமை உடையது. இந்த இரகம் தமிழ்நாடு முழுவதும் சாகுபடி செய்ய ஏற்ற இரகம்.

ergg

TRY (G) 1 (2005)

  9.பலா  
பாலூர் . 1 (1992)

 

இது சராசரியான உயரம் கொண்டது. மகசூல் காலம் நவம்பர் முதல் டிசம்பர். வருட மகசூல் ஒரு மரத்திற்கு 80 பழம், எடை சுமார் 900 கிலோ, சராசரியாக ஒரு பழத்தின் எடை 12 கிலோ.

 

ghgh

PLR.1 (1992)

  10.மா  
பிகேஎம். 1 (1981) – அதிக தொலைவு கொண்டு செல்வதற்கு ஏற்ற இ.ரகம் ஆகும். மகசூல் 336 பழம் ஒரு பழத்தின் எடை 250 – 300 கிராம்.

 

hggh

PKM 1 (1981)

  11.கொடுக்கா புளி  
பிகேஎம்.1 (2008)

பயிர் செய்வதற்கு ஏற்ற பருவகாலம் ஜீன் முதல் செப்டம்பர். பழங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பழம் முதிர்ச்சி அடையும்போது பழத்தின் தோல் மஞ்சள் நிறத்திலும் விதை கருப்பு நிறத்திலும் காணப்படும். மகசூல் ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் 79 கிலோ அதாவது ஒரு எக்டருக்கு 11.85 டன்.

 

htfh

PKM (MT)1
(2008)

  12.பப்பாளி  
கோ. 1 (1972)

பழங்கள் உருண்டையாகவும், அடி பகுதி தட்டையாகவும் காணப்படும். சுமாரான அளவும் மற்றும் மெதுவான தோல்களை கொண்டது. பழங்கள் ஆரஞ்சும் மஞ்சளும் கலந்து காணப்படும்.

 

ghfgh

CO.1 (1972)

  13.மாதுளை  
கோ. 1 (1983)   - பழத்தின் தோல்கள் ரப்பர் போன்றதாகவும், விதைகள் கடிப்பதற்கு மென்மையாகவும் இருக்கும். மகசூல் ஒரு மரத்திற்கு 50 பழங்கள் கிடைக்கும். ஒரு பழத்தின் எடை 340 கிராம்

sdfe

CO.1 (1972)

  14.சப்போட்டா  
கோ .1 (1972) பழத்தின் வடிவம் உருளையாகவும் சுமாரான அளவும் கொண்டது. ஒரு பழத்தின் எடை 125 கிராம் மகசூல் ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் 175 முதல் 200 கிலோ பழங்கள் கிடைக்கும். பழத்தின் நிறம் பழுப்பு நிறத்தில் காணப்படும்.

vcd

CO.1 (1972)

 

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014