மலைப் பயிர்கள் |
இரகம் |
விவரிப்பு |
படம் |
1.வெற்றிலை |
எஸ். ஜீ. எம். 1 (1994) |
–பாலக்காடு வகை வெற்றிலையில் தேர்வு செய்யப்பட்ட இரகம், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிக்கும் ஏற்றது. மகசூல் ஒரு எக்டருக்கு அதிகபட்சமாக 109 லட்சம் வெற்றிலைகளை தரக்கூடியது. வெற்றிலை கொடிகள் அடர்ந்ததாகவும் கடினமான தண்டுகளை உடையது. வெற்றிலைகள் லேசான மஞ்சள் நிறம் கலந்த பசுமையான நிறத்தில் காணப்படும் நல்ல காரத்தன்மையும் கொண்டது. |
|
|
2. முந்திரி |
வி. ஆர். ஐ (1981) (VRl) |
– விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நிலையத்தின் வங்கியில் இருந்து கன்று வழி முறையில் தேர்வு செய்யப்பட்ட இரகம். மகசூல் ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் சுமார் 7.12 கிலோ பழங்கள் எடுக்கப்படுகிறது. ஒரு முந்திரி கொட்டையின் எடை 5 கிராம். |
|
|
3.தென்னை |
வீ.எச். சீ. 1 (1982) (VHC) |
இது ஒரு கலப்பின இரகம். காய்ப்பு வருவதற்கு 4 வருடங்கள் ஆகும். மகசூல் ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் இருந்து சுமார் 100 காய்கள் கொடுக்கும். |
|
|
4. பனை மரம் |
எஸ்.வீ.பீ.ஆர் .1 (SVPR. 1) |
இது ஸ்ரீவில்லிப்புத்தூர் உள்ளூர் இரகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரகம். இது தமிழ்நாட்டின் எலல்லா இடத்திற்கும் பயிரிட ஏற்ற இரகம். இது ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் இருந்து 298 லிட்டர் பதனீர் கிடைக்கும். |
|