|
கார்னேஷன் |
கார்னேஷன் பற்றிய தொழில்நுட்பக் கையேடு
|
இரகங்கள்
ஸ்டேன்டர்டு வகைகள்
சிவப்பு – டோமிங்கோ, மாஸ்டர், காடினா, பிக் ரெட், டாரெக், காபோ, ஐகார்டிலி
வெள்ளை – பால்டிகோ, வெயிட் லிபர்டி, எமோஷன், வொயிட் டோனா, லிசா
இளஞ்சிவப்பு – டோனா, சார்மென்ட், டுமாஸ், பிங்க் டோவர், பிசாட்
வெளிர் இளஞ்சிவப்பு – சார்மென்ட், கிப்ரோ பிக் மாமா, டோனா, கோலெம்
மஞ்சள் – டயானா, கிரோ, சோடோ, சாலமன்கா, லிபர்டி
ஆரஞ்சு – சோலார், ஸ்டார், போல்கார்
டபுள் – மலகா, ஸ்டார், அதேனா, ஹேப்பி கோலெம் |
|
|
|
பிங்க் டேனா |
துன்ந்ரா |
வெயிட் துன்ந்ரா |
|
|
ஸ்ப்ரே வரை
எஸ்டிமேட், இந்திரா, வேரா, துராகா, அமோர், கிஷ் சிகா ஆகியவை பிரபலமான ஸ்ப்ரே வகைகளாகும்.
சிவப்பு – ரெட் ஐ, ரெட் ப்யூகோ, ரெட் விட்டல், ஆவிரோ
வெள்ளை – வொயிட் பிரஷ்டீஜ், மில்கி வே, எல்விஸ், டி - 587
இளஞ்சிவப்பு – ரோசா போபே, ஸ்பர் சுப்ரிமா, டி-925, செலப்ரேசன், ஒசிரிஸ்
மஞ்சள் – ஸ்டெல்லா, ப்ரெஷ்டீஜ், மிலா, சோனியா, ஏபிரில்
ஆரஞ்சு – சன் சைன், ஆட்டம், பேன்சி ப்யூகோ, டிஸ்னே, இலட்
டபுள் – பெர்ரி, ஆர்பிட் பிளஸ், நடேஜா, பிகாரோ
|
ஸ்ப்ரே வரை |
|
வளரும் சூழல் - காற்றோட்டமான இரும்பு சட்டம் போன்ற அமைப்பு
காலநிலை – குளிர்ந்த காலநிலை. பகல் நேரத்தில் வெப்பநிலை 18-240 செ மற்றும் இரவு வெப்பநிலை 10-150 செ. ஈரப்பதம் 70-75 சதவிகிதம்.
மண் – நல்ல வடிகால் வசதியுடைய வண்டல் மண். கார அமிலத் தன்மையின் அளவு 5.5 முதல் 6.5.
பருவம் – இது ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகிறது. கட்டுப்பாடான சூழலில் வளரும்.
இனப்பெருக்கம் மற்றும் நடவு:
சிறு செடி அல்லது பக்கக் கன்றுகள் நடவிற்குப் பயன்படுத்தப்படுகின்றன. 5-10 செ.மீ அளவுடைய நுனி துண்டுகளை NAA 500 ppm ல் விதை நேர்த்தி செய்து வேரைத் தூண்ட வேண்டும். துண்டுகளை கார்பன்டிசம் 2கி/லி கரைசலில் நனைக்க வேண்டும். 3 அடி அகலம் மற்றும் 45 செ.மீ உயரம் கொண்ட படுக்கைகள் அமைத்து 45 செ.மீ இடைவெளி விடவும். 15x15 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். துண்டுகள் 21 நாட்களுக்குள் நல்ல வேர் அமைப்பை பெற்றுவிடும்.
புகைமூட்டுதல்
டெசாமெட் 30 கி/மீ2 அல்லது ஹைட்ரஜன் பராக்சைடு @ 300 மிலி/மீ2
படுக்கை அளவு :100 செ.மீ அகலம், 30 செ.மீ உயரம் மற்றும் போதுமான அளவு நீளம்
இடைவெளி : 6 வரிசை நடவு – 15x15 செ.மீ (25 செடிகள்/மீ2)
5 வரிசை நடவு -15x15 செ.மீ (22 செடிகள்/மீ2)
பாசனம் – சொட்டு நீர் பாசனத்தில் 30 செ.மீ இடைவெளியில் சொட்டுவான்கள் பொருத்த வேண்டும். (5-6லி/மீ2/நாள்)
வளரும் சூழல்
பகல் வெப்பநிலை – 20-250 செ.
இரவு வெப்பநிலை – 10 – 150 செ.
சிக்கலான ஒளி காலம் 13 மணி
ஆர்.ஹச்.50-60 சதவிகிதம் |
கார்னேஷனில் நடவு முறை
ஊட்டச்சத்து:
உற்பத்தியை அதிகரிக்க பின்வரும் உரப்பாசன அட்டவணையை பின்பற்றலாம்.
ஊட்டச்சத்து |
அளவு (கி/ மீ2 /வாரம்) |
|
மொட்டு உருவாகும் பருவம் வரை |
மொட்டு உருவானது முதல் அறுவடை வரை |
தொட்டி – A (திங்கள் மற்றும் வியாழன்) |
அமோனியம் நைட்ரேட் |
3.0 கி |
2.0 கி |
19:19:19 |
3.0 கி |
2.0 கி |
மக்னீசியம் சல்பேட் |
2.5 கி |
2.5 கி |
போரான் |
1.0 கி |
1.0 கி |
நுண்ணூட்டச்சத்துக்கள் |
1.0 கி |
1.0 கி |
தொட்டி – B (செவ்வாய் மற்றும் வெள்ளி) |
பொட்டாசியம் நைட்ரேட் |
5.0 கி |
5.0 கி |
கால்சியம் நைட்ரேட் |
8.0 கி |
9.0 கி |
சிறப்பு நடைமுறைகள்
கார்னேஷன் தாவரத்திற்கு ஆதரவாக கம்பி வேளி அமைத்தல் : 4 பதியன்கள்
முதல் பதியன் : 7.5 x 7.5 செ.மீ
இரண்டாவது பதியன் : 10 x 10 செ.மீ
மூன்றாவது பதியன் : 12.5 x 12.5 செ.மீ
நான்காவது பதியன் : 15 x 15 செ.மீ
|
|
கார்னேஷனில் கம்பி வேலி அமைத்தல் |
|
ஆதார பொருள் :
கார்னேஷன் பயிரானது போதுமான ஆதரவு கொடுக்காவிட்டால் வளையும் தன்மை கொண்டது. எனவே வளரும் பருவத்தில் பயிருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். நல்ல ஆதரவு பொருள் நைலான் வலைக்கண்ணுடன் கூடிய மெட்டாலிக் வயர் வூவன் ஆகும். ஒவ்வொரு 2 மீட்டர் வயரும் பந்தற்காலுடன் இணைக்கப்பட வேண்டும். படுக்கைகளின் இரண்டு பக்கங்களிலும் உள்ள பந்தற்கால்கள் உறுதியாக இருக்க வேண்டும். மெட்டாலிக் வயர் படுக்கைளில் உள்ள பந்தற்கால்களுடன் இணைக்கப்பட வேண்டும். படுக்கைகளில் நைலான் வயர்களை வலை போல் அமைக்க வேண்டும். கீழ்பகுதியில் உள்ள வலை 10 x10 செ.மீ மற்றும் இரண்டு வலை 12.5 x12.5 செ.மீ மற்றும் மேலுள்ள வலை 15 x15 செ.மீ.
முளை முறித்தல்
-
பயிர் எவ்வளவு பரவ வேண்டுமோ அதற்கு ஏற்றாற்போல் ஒற்றை முளை முறித்தல் அல்லது இரண்டு முளை முறித்தல் முறையை பயன்படுத்தலாம்.
-
முளை முறித்தலுக்கு விடியற்காலை நேரம் உகந்தது.
-
செடி ஐந்த கணுக்கள் விட்டிருந்தால் முதல் முளை முறித்தல் வேண்டும். இது ஒற்றை முனை முறித்தலாகும். இது ஆறு பக்கத் தண்டுகள் வளர உதவும்.
-
இரண்டு முதல் மூன்று பக்கக் கிளைகளை மறுபடியும் முளை முறித்தல் வேண்டும். இந்த இரட்டை முளை முறித்தல் முறையில் அனைத்து பக்கக் கிளைகளையும் கிள்ளி விட வேண்டும்.ஷ
|
கார்னேஷனில் முளை முறித்தல் |
மொட்டு நீக்குதல்
ஸ்டேன்டர்டு கார்னேஷனில், பக்க மொட்டுகள் நீக்கப்படுகின்றன மற்றும் ஸ்ப்ரே கார்னேஷனில் முனை மொட்டுகள் நீக்கப்படுகின்றன.
பாசனம்
2 முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை மண்ணின் ஈரப்பதத்தை பொருத்து பாசனம் செய்ய வேண்டும். நீர்த் தேங்கும் கொள்ளளவு 60 முதல் 65 சதவிகிதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பயிரின் அதிகபட்ச நீர்த் தேவை 4-5 லி/மீ2/நாள்.
உரமிடுதல்
அடியுரமாக வேப்பம் புண்ணாக்கு 2.5 டன்/எக்டர், பாஸ்பரஸ் 400 கி/1000 சதுர அடி மற்றும் மக்னீசியம் சல்பேட் 0.5 கிகி/ 100 சதுர அடி அளிக்க வேண்டும்.
மேலுரம்
கால்சியம் அமோனியம் நைட்ரேட் மற்றும் 5:3 மற்றும் பொட்டாசியம் குளோரைடு 5:3 என்ற விகிதத்தில் கலந்து 2.5 கி/செடி/மாதம் என்ற அளவில் மேலுரமாக அளிக்க வேண்டும். |
பல்வேறு வளர்ச்சிப் பருவத்தில் பயிரின் தோற்றம் |
|
|
|
|
|
பயிர் பாதுகாப்பு
அசுவிணி
அறிகுறிகள்
மொட்டுகள் மற்றும் இலைகளின் பின்புறம் பாதிப்பு ஏற்படும். இலைகளின் வளர்ச்சி குன்றும். முதிர்ந்த இலைகளில் புள்ளிகள் தோன்றும். முதிர்ந்த பூச்சிகள் இலைகள், தண்டுகள் மற்றும் மொட்டுகளில் சத்துக்ளை உறிஞ்சிவிடும்.
கட்டுப்பாடு
தியோமெத்தோஜெம் 1 மிலி/லி அல்லது இமிட்டாகுளோபிரிட் 2மிலி/லி அல்லது அசாடாப் 0.5 to 1.0 கி/லி செடிகளின் மேல் தெளிக்க வும்.
|
|
|
செடிப்பேன்
அறிகுறிகள்
இளம் உயிரி மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இலைகள் மற்றும் பூக்களிலிலுந்து சாற்றை உறிஞ்சிவிடும். அவற்றின் எச்சங்கள் பழுப்பு நிறத்திலிருக்கும் சிறிது நேரம் கழித்து கறுப்பு நிறமாக மாறிவிடும். இலைப்பகுதி வெள்ளி நிறமாக மாறுகிறது.
கட்டுப்பாடு:
ஃபிப்ரோனிலி 1.5 மிலி/லி அல்லது இமிட்டாகுளோபிரிட் 2மிலி/லி அல்லது டைமெத்தோயேட் 30 இசி 1மிலி/லி தெளிக்கவும். |
|
|
செடிப்பேன் தாக்கிய மலர்கள் |
செடிப்பேன் தாக்காத மலர்கள் |
|
சிவப்பு சிலந்தி
அறிகுறிகள்
இவை மெல்லிய வலைகளை உற்பத்தி செய்துவிடும். இவை மிகவும் மெல்லிதாக இருப்பதால் கண்டுபிடிப்பது சிரமம். இவை இலைகளில உள்ள சாற்றை உறிஞ்சிவிடும். இதனால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். இலைகள் பழுப்பு நிறமாக மாறினால் அவை உதிர்ந்துவிடும். அதிக பாதிப்பிற்கு உண்டான தாவரங்கள் நிறம் மாறி வளர்ச்சி குன்றிவிடும். |
|
|
|
சிவப்பு சிலந்தி தாக்குதல் |
தாக்கப்பட்ட மொட்டு |
தாக்குதல் அறிகுறிகள் |
|
கட்டுப்பாடு
-
அபாமெக்டின் 1.9 இசி 0.5 மிலி/லி அளிக்கவும்
-
அசார்டிராக்டின் 50,000 பிபிஎம் 3 மிலி/லி
-
அதிகமாக பாதிக்கப்பட்ட தாவரத்தை அழித்துவிட வேண்டும்.
மொட்டு துளைப்பான்
புழுக்கள் இலைகள் மற்றும் மொட்டுகளை தாக்குகின்றது. மொட்டுகளில் உள்ள துளைகள் தெளிவாக தெரியும். இறுதியில் பாதிக்கப்பட்ட மொட்டுகள் திறக்காமல் போய்விடும். வெப்ப காலங்களில் இவை அதிகமாக தாக்குகின்றன.
கட்டுப்பாடு
- பெசிலஸ் துரிங்கியன்சிஸ் 2 கி/லி தெளிக்கவும்
- டிரைகோகிராமா ஒட்டுண்ணி முட்டைகளை ஏக்கருக்கு 1 லட்சம் விட வேண்டும்.
- ஸ்பைனோசேடு 0.75 மிலி/லி அல்லது தியோடிகார்ப் 0.5 மிலி/லி தெளிக்கவும்
நோய்கள்
வாடல் நோய் : கார்பன்டிசம் 0.1% அல்லது டெபெனோகோனோசோல் 0.05% கொண்டு மண் நனைத்தல் வேண்டும் அல்லது சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ் 25 கி/மீ2 மண்ணில் அளிக்க வேண்டும் அல்லது இலைவழித் தெளிப்பாக 0.5% மாத இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
இலைப்புள்ளி நோய்: பேசிலஸ் சப்டிலிஸ் 25 கி/மீ2 மண்ணில் அளிக்க வேண்டும் தொடர்ந்து இலைத்தெளிப்பாக 0.5% மாத இடைவெளியில் அளிக்க வேண்டும்.
அறுவடை
நடவு செய்த 110 முதல் 120 நாட்களில் பூக்க ஆரம்பிக்கும்.
அறுவடை பருவம்
ஸ்டேன்டர்டு வகை – பெயிண்ட் பிரஷ் பருவம்
ஸ்ப்ரே வகை – இரண்டு பூக்கள் மலர்ந்து மற்ற மொட்டுகள் நிறத்தை காட்டும் சமயம்
மகசூல் – இரண்டு வருடங்களில் 15 மலர்கள்/செடிகள் (350-375 பூ தண்டுகள்/மீ2) |
Disorder
புறவிதழ் வட்டம் வெடித்தல்
நிறைய இதழ்களுடைய பயிர் வகைகளில் புறவிதழ் வட்டம் வெடித்தல் ஏற்படுகிறது. மாறுபடும் வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவையும் புறவிதழ் வட்டம் வெடித்தல் ஏற்பட காரணங்கள். புறவிதழ் வட்டம் பாதியாக அல்லது முழுவதுமாக வெடித்துவிடும். இதழ்கள் தங்கள் ஆதரவை இழந்து வளைந்துவிடும். இதனால் பூவின் வடிவம் மாறிவிடும். வெப்பநிலை சமன் செய்தல் மற்றும் உரம் அளிப்பதன் மூலம் இதை நிவர்த்தி செய்யலாம்.
இலை சுருள்தல்
வளரும் நுனிகள் சுருண்டு போகும். இளம் தண்டுகளின் நுனிகள் வளர்ச்சி குறையும். தண்ணீர் மற்றும் பொட்டாசியம் பற்றாக்குறையினால் நுனிகள் சுருங்கி கார்னேஷன் பூக்கள் இறந்துவிடும்.
பூக்கும் பருவம் மற்றும் அறுவடை
பூத்தல் நடவு செய்த ஆறு மாதத்தில் தொடங்கி ஒரு ஆண்டு ஆறு மாதங்கள் வரை தொடரும். பொதுவான கார்னேஷன் வகையில் இதழ்கள் மூடாமல் தண்டுகள் செங்குத்தாக இருக்கும். தெளிப்பு வகையில் இரண்டு பூக்கள் திறந்த நிலையிலும் மீதமுள்ள மொட்டுகள் நிறத்தை காட்டும். 5 கணு கொண்ட காம்புகளை பக்க கிளைகள் வளர்வதற்காக விட்டு தினமும் அறுவடை செய்யலாம்.
அறுவடை பின்சார் தொழில்நுட்பம்
தண்ணீரில் சிட்ரிக் அமிலம் கலந்து காரஅமிலத் தன்மை 4.5 முதல் 5 ஏற்படுத்த வேண்டும் மற்றும் 5 மெட்ரிக் கிராம் சோடியம் ஹைபேகுளோரைடு 1 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். பூக்கள் வாடாமல் அதிக நாட்கள் இருக்க கொய்மலர்களை இந்த கரைசலை 4-5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அறுவடை செய்தவுடன் பூத்தண்டின் அடிப்பகுதியை நீக்கி பக்கெட்டில் பாதுகாப்பு வேதிப்பொருளில் வைக்க வேண்டும். பாதுகாப்பு கரைசலில் 2 முதல் 4 மணி நேரம் வைத்த பின் குளிர்பதன அறையில் 0.20 செ – ல் 12 முதல் 24 மணி நேரம் வைக்க வேண்டும். மலர்கள் சந்தைப்படுத்தும் முன் இரண்டு முதல் நான்கு வாரங்கள் சேமிக்க முடியும். அதன் பிறகு பூக்கள் அட்டைப் பெட்டிகளில் பேக் செய்யப்படுகின்றன. போதுமான காற்றோட்டம் இருக்க ஓட்டைகள் இருக்க வேண்டும். அட்டைப் பெட்டிகள் மூடி போடுவதற்கு முன் குளிர்விக்கப்படுகின்றன. தண்டுகளின் மேற்பகுதியில் பிளாஸ்டிக் இலகுவாக சுற்றப்பட்டு அட்டைப்பெட்டி மூடப்படுகிறது. இந்த அட்டைப் பெட்டிகள் 00 செ –ல் காற்றோட்டமான அறையில் வைக்கப்படுகின்றன. ஈரப்பதம் 90 முதல் 95 சதவீதம் இருக்க வேண்டும்.
தரம் பிரித்தல்
தண்டுகளின் தடிமன், நீளம் மற்றும் தரத்தைப் பொறுத்து பூக்கள் A, B, C, D என தரம் பிரிக்கப்படுகின்றன. |
தரம் பிரித்தல் மற்றும் பேக் செய்தல் |
*கார்னேஷனில் துல்லிய உற்பத்தி தொழில்நுட்பம்
வ.எண் |
சாகுபடி முறைகள் |
பரிந்துரைகள் |
1. |
புகையூட்டம் |
டெசாமெட் 30கி/மீ2 |
2. |
வளர் ஊடக கலவை |
10:1:1 அளவில் 30 கிகி/மீ2 கலவை – 25 கிகி தொழு உரம், 2.5 கிகி மண் புழு உரம், 2.5 கிகி தேங்காய் நாருடன் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் ஒவ்வொன்றும் 20 கி/மீ2 இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தெளிக்கவும். |
3. |
நடவு அடர்த்தி |
15 X15 செ.மீ 25 செடிகள்/மீ2 |
4. |
நடவு பருவம் மற்றும் பறிக்கும் பருவம் |
30 நாள் வயதுடைய வேர் துண்டுகள் மற்றும் 5 கணுக்களின் போது ஒற்றை பறிப்பு |
5. |
குளிர்வித்தல் |
40 செ –ல் 4 மணிநேரம் |
6. |
|
சுக்ரோஸ் 10%+சிட்ரிக் அமிலம் 100 பி.பி.எம் + 8-ஹைட்ராக்ஸி கினோலின் 400 பி.பி.எம் – 24 மணி நேரம் வைக்க வேண்டும் |
7. |
நிறுத்தி வைக்கும் திரவம் |
சுக்ரோஸ் 5%+சிட்ரிக் அமிலம் 50 பி.பி.எம் + பென்சில்அடினைன் 75 பி.பி.எம் |
8. |
பேக்கிங் தொழில்நுட்பம் |
பாலித்தீன் பைகள் 50 தடிமன் + சி.எப்.ஜி 4 சதவிகிதம் |
*துல்லிய உற்பத்தி தொழில்நுட்பங்கள் பரிந்துரைக்கபட்ட வழக்கமான சாகுபடி முறைகளுடன் சேர்த்து பின்பற்ற வேண்டும். |
|
|