தோட்டக்கலை :: மலரியல் பயிர்கள் :: கலப்பு ரோஜா
  கலப்பு ரோஜா (Rosa hybrida) ரோஜா ரகங்கள்new
      ரோசேசியே

இரகங்கள்:
கிளாடியேட்டர், பேபி பிங்க், சோபியா லாரன்ஸ், YCD 1, YCD 2, YCD 3 போன்றவை பொதுவாக சாகுபடி செய்யப்படுகின்றன.

YCD 1 YCD 2 YCD 3

மண் மற்றும் காலநிலை:

இது அதிக உயரத்திற்கு (1500 மீ மற்றும் அதற்கு மேல்) ஏற்றது. இது சமவெளிகளில் வளமான வண்டல் மண் மற்றும் உப்பு இல்லாத நீரில் வளரும். ரோஜா வளர சிறந்த வெப்பநிலை குறைந்தபட்சம் 150 செ மற்றும் அதிகபட்சம் 280 செ ஆகும். வளர்ச்சியை தீர்மானிப்பதில் ஒளி முக்கிய காரணியாகும். நாளின் நீளம் 12 மணி நேரத்திற்கும் குறைவாக இருந்தால் மேக மூட்டம் அதிகமாக இருந்தால் வளர்ச்சி மெதுவாக இருக்கும். அதிக ஈரப்பதமான சூழ்நிலையிருந்தால் செடியை பூஞ்சை நோய் தாக்கும்.  வெப்ப மண்டலங்களில் வெயில் காலங்களில் 250 – 300 செ மற்றும் மேகமூட்டம் உள்ள நாட்களிவ் 180 – 200 செ. உகந்த வெப்பநிலை 150 – 180 செ ஆகும்.

ரோஜா இனப்பெருக்கம் மற்றும் நடவு:

மலைப்பகுதிகளில் வேர்த் துண்டுகள் மற்றும் பதியன் நாற்றுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு வயதுடைய பதியன் கன்றுகள்  75 X 75 செ.மீ இடைவெளியில் நடப்படுகிறது.

பின்செய் நேர்த்தி:

செடி வளரும் வரை தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு வாரம் ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் கவாத்து செய்தல் வேண்டும். களைகளை கட்டுப்படுத்த டையூரான் எக்டருக்கு 2.5 கிகி தெளிக்க வேண்டும். தெளிப்பு மருந்துகளை தவிர்க்க வேண்டும்.

pruning-roses[1]

கவாத்து செய்தல்

தாவரங்களுக்கு ஆதரவு

படுக்கைகளின் இரு புறங்களிலும் 3மீ அளவிற்கு குச்சிகள் நட வேண்டும். படுக்கைகளின் ஓரங்களில் 30 செ.மீ – 40 செ.மீ இடைவெளியில் செடிகளுக்கு ஆதரவு கொடுக்க வயர்கள் அல்லது பிளாஸ்டிக் சரம் கொண்டு குச்சிகளுடன் கட்ட வேண்டும்.
இடுகைகள் படுக்கையில் இருபுறமும் 3 மீட்டர் உள் வைக்கப்படுகிறது. 40 செ.மீ இடைவெளியில் - படுக்கையின் இரு சேர்த்து, பாதையில் செல்ல கம்பிகள் அல்லது பிளாஸ்டிக் சரம் 30 செ.மீ பதிக்கப்படுகிறது. படுக்கை முழுவதும் கம்பிகள் இடையே, மெல்லிய சரங்களை நிலையான படுக்கைகள் அகலமாக வைத்து கட்டப்படுகிறது.

மொட்டு நீக்குதல்:
சில இரகங்கள் நடு மொட்டுக்கு அருகில் பக்க மொட்டுகள் உருவாகும். இந்த பக்க மொட்டுகளை நீக்க வேண்டும். மொட்டு நீக்குதல் தொடா்ந்து செய்ய வேண்டும்.
படுக்கைகள் மண் தளர்துதல் :
6 மாதங்களில் மண் கட்டியாக வாய்ப்பு உள்ளது. இதை பாசனம் மூலம் தளர்த்த வேண்டும்.

வளைதல்:
இலை ஒவ்வொரு தாவரத்திற்கும் உணவுக்கு ஆதாரமாக உள்ளது. நடவுக்குப் பிறகு, 2 முதல் 3 கண் மொட்டுகள் முக்கிய கிளையில் முளைவிடும். இந்த முக்கிய தண்டுகள் வளைக்கப்பட்டு மண்ணில் வைக்கப்படுகிறது. இவை இரண்டு தளிர்களுடன் வளரத் தொடங்கும். இவை இரண்டு அல்லது மூன்று தளிர்கள் ஐந்து இலைகள் கொண்டு அமைப்பு உருவானவுடன் வெட்டி எடுக்கப்படுகிறது.

வளைவு

இலைகள் நீக்கம்

இது சில தாவர இனங்கள் பூத்தலைத் தூண்ட முக்கியமாக செய்யப்படுகிறது. இலை நீக்கம் முறையாக கைகளால் அல்லது தண்ணீர் அளித்து செய்யப்படலாம். தளிர்கள் கவாத்தின்போது சீரமைக்கப்படுகின்றன.

உரமிடுதல்:

மூன்று மாத இடைவெளியில், கவாத்திற்குப் பிறகு 10 கிகி தொழுவுரம் மற்றும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 8:8:16 கி என்ற அளவில் ஒரு செடிக்கு அளிக்க வேண்டும். வருடத்திற்கு செடிக்கு 75:150:50 என்ற அளவில் வருடத்திற்கு செடிக்கு அளிக்க வேண்டும்.

அறுவடை:

இதழ்கள் முழுவதும் விரியாமல், முழுமையான நிறம் வந்தவுடன் அறுவடை செய்யலாம். 1-2 முதிர்ந்த இலைகளை விட்டு பூவை வெட்டி எடுக்க வேண்டும். புதிய வலுவான தண்டுகள் வளர இந்த முதிர்ந்த இலைகளை விட வேண்டும். அதிகாலையில் அறுவடை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

secatures harvest
   

அறுவடை பின்சார் தொழில்நுட்பம்:

அறுவடை செய்தவுடன் ரோஜாக்களை பக்கெட் தண்ணீரில் பசுமைக்குடிலில் வைக்க வேண்டும் மற்றும் குளிர்சாதன கிடங்கிற்கு மாற்ற வேண்டும் (2-40 செ). ரோஜாக்களின் இரகம் மற்றும் தரத்தை பொறுத்து நீளம் அமையும். அதன் நீளத்தை பொறுத்து பூக்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. இரகத்தை பொறுத்து 40-70 செ.மீ வரை இருக்கும். 10-12 பூக்களை கொத்தாக பேக் செய்ய வேண்டும்.

100_0535 

100_0546

100_0537

குளிரவைத்தல்

தரம் பிரித்தல்

சிப்பமிடுதல்

பயிர் வினையியல் மாறுபாடுகள்:

குருட்டு மர மாறுபாடு :

பொதுவாக பசுமை குடிலில் ரோஜா செடியில் பூக்கள், அல்லிகள் மற்றும் இனப்பெருக்க பாகங்கள் வளரும். சில தண்டுகளில் பூக்கள் அபிவிருத்தி இல்லாமல் இருக்கும். இத்தகைய தளிர்கள் குருட்டு மரம் என்றழைக்கப்படும். மலர்கள் இருக்கும் ஆனால் இனப்பெருக்க பாகங்கள் இல்லாமல் இருக்கும். இத்தளிர்கள் பொதுவாக சிறியதாக மெல்லிதாக இருக்கும். ஆனால் அவை கணிசமான நீளம் மற்றும் தடிமன் அடையும். இவை குறைவான வெப்பநிலை, இரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள், பூச்சிகள், பூஞ்சை நோய்கள் மற்றும் பிற காரணிகளால் ஏற்படும்.  

எருது தலை அல்லது உருமாறிய மலர்கள் :

மொட்டுகளில் ஒரு புறம் மட்டும் இதழ்கள் விரிந்து மொட்டுகள் தட்டையாக தோன்றும். இவை காப்போஹைட்ரேட் பற்றாக்குறையால் ஏற்படுகின்றன. செடிப்பேன் தாக்குதலினாலும் பூக்கள் வடிவம் மாறுகின்றன. மேலும் குறைவான வெப்பநிலையில்  சில இரகங்களில் இவ்வாறு தோன்றும்.

வண்ணம் மறைதல் :

சில மஞ்சள் வகைகளில் நிறம் மங்கும் பிரச்சனை உருவாகும். இந்த வகையில் பூக்களின் இதழ்கள் பச்சை அல்லது அழுக்கு வெள்ளை நிறத்தில் காணப்படும். தெளிவான மஞ்சள் நிறத்தில் இருக்காது. அடிக்கடி கரிம பாஸ்பேட் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பல்வேறு வகையான பயன்படுத்த தொடர்புடையதாக உள்ளது.

வாடல் :

பூவுக்கு கீழுள்ள தண்டு வாடல் ஏற்பட்டு போதிய ஆதரவு பூவுக்கு அளிக்க முடிவதில்லை. இது போதுமான அளவு நீரை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால் ஏற்படுவதாகும்.  1 – 2 அடி விட்டு பூக்களை கிள்ளி 370 செ. தண்ணீரில் வைக்கலாம்.

ரோஜா இதழ்கள் கருப்பாதல்:

இவை குறைந்த வெப்பநிலை மற்றும் உயர் அந்தொசியனின் உள்ளடக்கத்தால் ஏற்படுகின்றன. ஜிஏ 3 சிகிச்சையால் பேக்கரா ரோஜாக்கள் இதழ்களில் அந்தொசியனின் குவிப்பு ஏற்படுத்துகிறது. இந்த விளைவு அதிக வெப்பநிலை (நாள் 30°செ. மற்றும் இரவில் 20°செ.) விட குறைந்த (நாள் 20°செ. மற்றும் இரவில் 4°செ.) வெப்பநிலையில் அதிகமாக இருந்தது.

ஊட்டச்சத்து குறைபாடுகள்:
இரும்பு குறைபாடுகள் இலைகளில் மங்கலான பசுமையை ஏற்படுத்தும். மண்ணின் கார அமிலத் தன்மையை சரிசெய்வதால் இந்த குறைபாடு குறையும்.
மகசூல்:
கலப்பு டீ ரோஜாக்களின் மகசூல் 70 -80 தண்டுகள்/செடி/வருடம் மற்றும் ஃப்ளோரிபன்டாஸ் மகசூல் 80-90 தண்டுகள்/செடி/வருடம்.