இரகங்கள்: தரமான வகைகள் : பான்பயர் ஆரஞ்சு , பான்பயர் மஞ்சள்.ஸ்ப்ரே வகைகள் : ரேகன் மஞ்சள் ,ரேகன் வெள்ளை, நானாகோ போன்றவை
காலநிலை : கொய் செவ்வந்தி நிழல் குடில்களில் பின்வரும் சூழலில் வளர்க்கப்படுகின்றன.வெப்பநிலை : 16 - 250Cஈரப்பதம் : 70 - 85%கார்பன்டை ஆக்ஸைடு : 600 - 900 பிபிஎம்
ஒளிக்காலம் : பயிர் வளர்ச்சிப் பருவத்தில் 13 மணி நேர ஒளி மற்றும் 11 மணி நேர இருள் 4-5 வாரங்களில் மற்றும் மொட்டு அரும்பும் பருவத்தில் 10 மணி நேர ஒளி மற்றும் 14 மணி நேர இருள் தேவைப்படும்.
மண்: வடிகட்டிய நல்ல காற்றோட்டமுள்ள வண்டல் மண் அல்லது 1:1:2 மண், உரம், மற்றும் தேங்காய் நார் அதனுடன் 5.5 – 6.5 கார அமிலத் தன்மை.
வளரும் ஊடகங்கள்: வளரும் ஊடகம் மண், உரம் மற்றும் தேங்காய் நார் மட்கு ஆகியவை முறையே 1:1:2 என்ற விகிதத்தில் உள்ளடக்கியது. 1மீ அகலம், 0.3 மீ உயரம் மற்றும் தேவைப்படும் நீளத்திற்கு படுக்கைகள் அமைக்க வேண்டும். மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 அதனுடன் 1 – 1.5 இசி (மின் கடத்துத்திறன்) இருக்க வேண்டும்.
இனப்பெருக்கம்:
வளர்நுனி துண்டுகள் மற்றும் திசு வளர்ப்பு செடிகள் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. வணிக ரீதியாக வளர்நுனி துண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆரோக்கியமான செடி தண்டிலிருந்து 5-7 செ.மீ. நீளத்திற்கு துண்டுகளை வெட்டி, வேர்களைத் தூண்ட ஐபிஏ ( 1000 பிபிஎம் ) கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும்.
நடவு:
1மீ அகலம், 0.3 மீ உயரம் மற்றும் தேவைப்படும் நீளத்திற்கு படுக்கைகள் அமைக்க வேண்டும். (நடவு இடைவெளி பொறுத்து செல் அளவு ) படுக்கைகள் மீது நடவு செய்யப்படுகிறது.
|
|
|
இடைவெளி :15x 15 செ.மீ. ( 45 தாவரங்கள் / மீ 2 ) அல்லது 10 x 15 செமீ ( 67 தாவரங்கள் / மீ 2 ).
நீர்ப்பாசனம்:சொட்டு நீர் பாசனம் 8 -9 லிட்டர் தண்ணீர் / மீ 2 / நாள் தேவை.
ஊட்டச்சத்து :டிஏபி உரம் -50 கிராம் / மீ 2 அடியுரமாக அளிக்க வேண்டும். வாராந்திர அட்டவணை – நடவு செய்யப்பட்ட 3 வது வாரத்தில் இருந்து
உரம் |
அளவு (கிராம் / மீ 2) |
திங்கள் |
புதன் |
19-19-19 |
3.0 |
1.0 |
பொட்டாசியம் நைட்ரேட் |
3.0 |
1.0 |
கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் |
2.0 |
1.0 |
அமோனியம் நைட்ரேட் |
2.0 |
1.0 |
மெக்னீசியம் சல்பேட் |
2.0 |
1.0 |
|