உரமிடுதல்
அடியுரம்:
வேப்பம் புண்ணாக்கு எக்டருக்கு 2.5 டன்
பாஸ்பரஸ் - 400 கி/100 சதுர அடி
மக்னீசியம் சல்பேட் - 0.5 கிகி/100 சதுர அடி
மேலுரம்:
கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் மற்றும் மூரியட் சல்பேட் 5:3 என்ற விகிதத்தில் கலந்து 2.5கி/தாவரம்/மாதத்திற்கு அளிக்க வேண்டும்.
சாகுபடிக்குப் பின்:
- தேவைப்படும்பொழுது கைக்களை எடுக்க வேண்டும்.
- 2 மாதங்கள் வரை பூ மொட்டுகளை நீக்கி பின் பூக்கவிட வேண்டும்.
- தண்ணீர் மற்றும் உரங்களை எளிதாக உறிஞ்சுவதற்கும், வேரிற்கு காற்றோட்டம் அளிக்கவும் மண்ணை கிளறி விட வேண்டும்.
- புதிய இலை வளர்ச்சியை ஊக்குவிக்க நல்ல சுகாதார வசதிகளை ஏற்படுத்த பழைய இலைகளை நீக்க வேண்டும்.
சிறப்பு நடைமுறைகள்:
இலை சீரமைப்பு
அவ்வப்போது பழைய இலைகளை நீக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு:
பூச்சிகள்
அசுவினி
இமிடாகுளோபிரிட் 17.8% எஸ்.எல் @ 1மிலி/லி அல்லது டைமெத்தோயேட் 30 இசி 2 மிலி/லி தெளிக்கவும்.
வெள்ளை ஈ
இமிடாகுளோபிரிட் 17.8% எஸ்.எல் @ 1மிலி/லி அல்லது டைமெத்தோயேட் 30 இசி 2 மிலி/லி தெளிக்கவும்.
இலைப்பேன்
ஃப்ரோனில் 2 மிலி /லி அல்லது டைமெத்தோயேட் 2மிலி/லி தெளிக்கவும்.
சிவப்பு சிலந்தி
அபமெக்டின் 1.9 இசி 0.4மிலி/லி அல்லது ப்ரோபர்கைட் 1 மிலி/லி தெளிக்கவும்.
நூற்புழு
வேர் முடிச்சு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த பேசில்லஸ் சப்டிலிஸ் (BbV 57) அல்லது சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் 2.5 கிகி/எக்டர் நடவு செய்யும்போது மண்ணில் அளிக்க வேண்டும்.
நோய்கள்:
மலர் மொட்டு அழுகல் : காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1 கி/லி தெளிக்கவும்.
சாம்பல் நோய் : நனையும் கந்தகம் 2 கி/லி அல்லது அசோக்ஸிஸ்ராபின் 1 கி/லி தெளிக்கவும்.
பூக்கும் மற்றும் அறுவடை பருவம்:
பூக்கள் முற்றிலும் திறந்த நிலையில், அறுவடை செய்ய வேண்டும். மலர் தண்டுகளை சோடியம் ஹைபோகுளோரைடு கரைசலில் (5-7 மிலி/லிட்டர் தண்ணீரில்) 4 முதல் 5 மணி நேரம் ஊற வைப்பதால் ஆயுட்காலம் நீடிப்பு செய்யப்படுகிறது.
அறுவடை பின்சார் தொழில்நுட்பம்:
பூக்கள் தண்டுகளுடன் சேர்த்து அறுவடை செய்யப்படுகின்றன. தண்டுகள் 2-3 செ.மீ விட்டு வெட்டி புதிய குளோரின் தண்ணீரில் வைக்கப்படுகிறது. பிறகு ஒரே மாதிரியாக உள்ள மலர்களாக தரம் பிரிக்கப்படுகிறது. பின்னர் மலர்கள் தனித்தனியாக பேக் செய்யப்பட்டு பின்னர் இரண்டு அடுக்குகளாக காட்டன் பெட்டிகளில் வைக்கப்படுகின்றன. |
|
தண்டு உடைதல்:
இது அறுவடைக்குப் பிறகு ஏற்படும் பொதுவான பிரச்சனையாகும்.
மஞ்சள் மற்றும் ஊதா விளிம்பு:
நைட்ரஜன் பற்றாக்குறையால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுகின்றன. பாஸ்பரஸ் பற்றாக்குறை காரணமாக மஞ்சள் நிறம் மற்றும் ஊதா விளிம்பு தோன்றுகிறது. நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதன் மூலம் ஜெர்பராவில் மலர் உற்த்தியை அதிகரிக்கலாம்.
தரம் பிரித்தல் :
தண்டின் நீளம் மற்றும் விட்டத்தின் அடிப்படையில் மலர்கள் A,B,C மற்றும் D என தரம் பிரிக்கப்படுகின்றன.
மகசூல்
பயிரின் மகசூல் 2 தண்டுகள் /தாவரம்/மாதம். அறுவடை நடவு செய்த மூன்று மாதத்திலிருந்து இரண்டு வருடம் வரை செய்யப்படுகிறது. திறந்த பகுதியில் 130-160 பூக்கள்/மீ2/வருடம் மற்றும் பசுமைக்குடிலில், 175-200 பூக்கள்/மீ2/வருடம் மகசூல் கிடைக்கும்.
|