தோட்டக்கலை :: மலரியல் பயிர்கள் :: கிளாடியோலஸ்
 

கிளாடியோலஸ்

இரகங்கள்:
டிராபிக் கடல், வெள்ளை செழுமை, பிரிசில்லா, சம்மர் சோலார் லைட், பூசா, சுவர்னிமா, ஜாங்சன் வில்லே தங்கம், கே.கே.எல், அர்ச்சனா, பசந்த் பகார், இந்திராணி, கோஹ்ரா, ஆர்த்தி, தர்ஷன் திராஜ், பிந்தியா

காலநிலை:

மிதமான காலநிலை பொருத்தமானது. 27-300 செ வெப்பநிலையில் நன்கு வளரும். 12-14 மணிநேர சூரிய ஒளியில் நன்கு வளரும்.

மண்:

6 முதல் 7 கார அமிலத் தன்மை கொண்ட வடிகட்டிய மணல் கலந்த மண் உகந்தது.

பருவம்:

இப்பயிருக்கு குறைந்தது 10 மணிநேர சூரிய வெளிச்சம் தேவைப்படுகிறது. எனவே அதற்கு தகுந்த பருவம் அல்லது ஒளி மாற்று வழங்கப்பட வேண்டும்.

இனப்பெருக்கம்:

வேர்க்கிழங்கு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. வேர்க்கிழங்குகளை குளிர் சேமிப்பாக 3 முதல் 70 செ-ல் வைக்க வேண்டும் அல்லது எத்திரால் (1000 பிபிஎம்) அல்லது ஜிஏ3 (100 பிபிஎம்) அல்லமு தையோயூரியா (500 பிபிஎம்) கொண்டு முன்று மாதங்கள் விதை நேர்த்தி செய்வதன் மூலம் கிழங்கு உடைவதைத் தடுக்கலாம்.

வயல் தாயாரிப்பு மற்றும் நடவு:

6x2 மீட்டர் படுக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. வேர்க்கிழங்குகள் 5 செ.மீ ஆழம் மற்றும் 40x25 செ.மீ இடைவெளி (88,888 தாவரங்கள் / எக்டர்) அல்லது 25x25 செ.மீ (1,60,000/எக்டர்) நடவு செய்ய வேண்டும்.

நடவு பருவம்:

சமவெளிப் பகுதிகளில் அக்டோபர் மாதம் மற்றும் மலைப் பிரதேசங்களில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடவு செய்யலாம்.

நடவு முறை:
பார் சால் முறை உகந்தது.

நீர்ப்பாசனம்:

மணல் கலந்த மண்ணில் 7 -10 நாட்கள் இடைவெளியிலும், அடர்ந்த மண்ணில் குறைவான இடைவெளியிலும் பாசனம் செய்ய வேண்டும். வேர்க்கிழங்குகளை எடுப்பதற்கு 4 முதல் 6 வாரங்களுக்கு முன் பாசனம் செய்வதை நிறுத்த வேண்டும்.

ஊட்டச்சத்து:

எக்டருக்கு 120 கிலோ தழைச்சத்து, 150 கிலோ மணிச்சத்து மற்றும் 150 கிலோ சாம்பல் சத்து பரிந்துரைக்கப்படுகிறது. 60 கிகி தழைச்சத்து மற்றும் முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் அடியுரமாக அளிக்க வேண்டும். மீதமுள்ள தழைச்சத்து பிரித்து நடவு செய்த 30 மற்றும் 60வது நாட்களில் அளிக்க வேண்டும்.

உரமிடுதல்
அடியுரம்:


தழைச்சத்து 60 கிகி/எக்டர், மணிச்சத்து 150 கிகி/எக்டர் மற்றும் சாம்பல் சத்து 150 கிகி/எக்டர்.

மேலுரம்:

எக்டருக்கு தழைச்சத்து மட்டும் 4 இலைப் பருவத்தில் 30 கிகி  இலைத் தெளிப்பு மற்றும் எக்டருக்கு 30 கிகி மொட்டு விடும் பருவத்தில் மண்ணில் அளிக்கவும்.

அறுவடைக்குப் பின்:

நன்கு வேர் விட்ட பிறகு தேவைப்பட்டால் நீர்ப்பாய்ச்ச வேண்டும். தளிர்கள் சுமார் 20 செ.மீ உயரம் இருக்கும்பொழுது 10 முதல் 15 செ.மீ உயரம் வரை மண் அணைத்தல் வேண்டும். இவை தாவரங்களை காற்று மற்றும் மழை சமயங்களிலும் நிமிர்ந்து வளர உதவுகின்றன மற்றும் களை வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது. இளகிய மண்ணாக இருப்பபின் மண் அணைத்தல் அவசியமாகும். தண்டுகள் மெலிதாகவும் காற்று அடிக்கும் போது வளைந்தால் தடிமனான குச்சிகள் கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

  • சேமிக்கு முன் வேர்க்கிழங்குகளை 40 – 450 செ சுடுநீர் + பூசணக் கொல்லி (கேப்டான் (அ) தைரம் 2 கி/லி) நனைப்பதன் மூலம் நூற்புழு மற்றும் பூசண நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • இலைப்பேன்களை கட்டுப்படுத்த மீத்தைல் 25 இசி 2மிலி/லி அல்லது டைமெத்தோயேட் 30 இசி 2மிலி/லி அளிக்கவும்.
  • அரைக் காவடிப்புழு மற்றும் ஹெலிகோவெர்பாவைக்  கட்டுப்படுத்த மீத்தைல் டெமடான் அல்லது மோனோகுரோடோபாஸ் 2மிலி/லி அளிக்கவும்.

இலைப்புள்ளி:

இலைப்புள்ளியை கட்டுப்படுத்த கார்பன்டிசம் அல்லது மென்கோசெப் 2 கி/லி அளிக்கவும்.

வாடல் நோய் :

பாவிஸ்டான் (0.2%) மண்ணில் ஊற்றுவதன் மூலம் வாடல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

கருகல் நோய்:

கருகல் நோயைக் கட்டுப்படுத்த மேன்கோசெப் 0.2% அளிக்கவும்.

சேமிப்பு அழுகல்:

பெனோமில் (0.2%) தெளிப்பதன் மூலம் சேமிப்பு அழுகலைக் கட்டுப்படுத்தலாம்.

~AUT0003 ~AUT0001
சேமிப்பு அழுகல்

பூக்கும் பருவம் மற்றும் அறுவடை:

மொட்டு இரகத்தின் நிறத்தைக் காட்டும் பொழுது முதல் அறுவடையைத் தொடங்கலாம்.

புளூரைடு உப்புக் காயங்கள் :

இலைகளின் நுனிகளில் புளூரைடு உப்புக் காயங்கள் தோன்றுகின்றன. சூப்பர் பாஸ்பேட் அதிக அளவில் அளிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது.

சிறப்பு நடைமுறைகள்:

பெரிய பூக்கள் உருவாகும் இரகத்தில் பாரத்தை குறைக்க தடிமனான குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.

பயிர் பாதுகாப்பு:
பூச்சிகள்:


இலைப்பேன் : டைமெதோயேட் 30 இசி 2மிலி /லி அல்லது பெனிட்ரோதியான் 50 இசி 2மிலி/லி அல்லது மாலத்தியான் 50 இசி 2மிலி/லி தெளிக்கவும் அல்லது அல்டிகார்ப் 10ஜி 5கி/மீ2 அளிக்கவும்.

அரைக்காவடி புழு மற்றும் ஹெலிகோவெர்பா : மீத்தைல் டெமடான் 25 இசி அல்லது மோனோகுரோடோபாஸ் 2மிலி/லி அல்லது டைமெத்தோயேட் 30 இசி 2மிலி/லி அளிக்கவும்.

நோய்கள்:

இலைப்புள்ளி :
கார்பன்டிசம் 1கி/லி அல்லது மேன்கோசெப் 2கி/லி இலைத் தெளிப்பாக அளிப்பதன் மூலம் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்தலாம்.

பஞ்சு போன்ற அழுகல் : பெனோமில் 1கிகி /எக்டர் இலைவழித் தெளிப்பாக அளிக்கவும்.

பாக்டீரியா கருகல் புள்ளி நோய்: நடவிற்கு முன் வேர்க் கிழங்குகளை 1:100 மெர்குரிக் குளோரைடு கரைசலில் 12 மணிநேரம் நனைப்பதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

பூங்கொத்து அறுவடை:

கிளாடியோலஸ் பூங்கொத்துகளை உற்பத்தி செய்ய 110 முதல் 120 நாட்களை எடுத்துக்கொள்கின்றன. வேர்க்கிழங்கின் வளர்ச்சி நன்றாக இருக்க அறுவடையின் போது நான்கு அடித்தள இலைகளை விட்டு அறுவடை செய்ய வேண்டும்.

பின்செய் நேர்த்தி மற்றும் தரம்பிரித்தல்:

பூக்கள் மற்றும் தண்டுகள் வாடுதைத் தடுக்க தண்டுகளை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். தண்டின் நீளம் மற்றும் பூங்கொத்துகளின் எண்ணிக்கையைப் பொருத்து
A, B, C, D என்று தரம் பிரிக்கப்படுகிறது.

மகசூல்:

2.0 – 2.5 லட்சம் பூக்காம்புகள் /எக்டர்/பயிர் .