தோட்டக்கலை :: மலரியல் பயிர்கள் :: மல்லிகை

இரகங்கள் : குண்டுமல்லி

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதியுடைய வளமாக இருமண்பாடு கொண்ட செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. வடிகால் வசதி இல்லாத களர் மற்றும் உவர் நிலங்கள் சாகுபடி செய்ய உகந்தவை அல்ல. மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 8 வரை இருக்கவேண்டும். குண்டுமல்லி அதிக மழையைத் தாங்கி வளரக்கூடிய ஒரு வெப்பமண்டலப் பயிர்  ஆகும்.
விதையும் விதைப்பும்

இனப்பெருக்கம் : வேர்விட்ட குச்சிகள் மற்றும் பதியன்கள்

பருவம் : ஜுன் - நவம்பர்

குச்சிகளின் எண்ணிக்கை  : ஒரு எக்டர் நடவு செய்ய 6400 பதியன்கள் தேவைப்படும்.

நிலம் தயாரித்தல் :

நிலம் தயாரித்தல்  மற்றும் நடவு : நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவேண்டும். பிறகு 30 செ.மீ நீளம், அகலம், மற்றும் ஆழம் உள்ள குழிகளை 1.25 மீட்டர் இடைவெளியில் எடுத்து ஒவ்வொரு குழியிலும் 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரம்  இட்டு குழிகளின் மத்தியில் பதியன்களை நட்டு நீர்ப்பாய்ச்சவேண்டும்.

நீர் நிர்வாகம்

செடிகள் வேர்ப்பிடித்து நன்கு வளரும் வரை வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாயச்சவேண்டும். பிறகு காலநிலைக்கேற்ப நீர்ப் பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்து ஊட்டசத்து மேலாண்மை

மல்லிகைச் செடிக்கு 60 கிராம் தழைச்சத்து, 120 கிராம் மணிச்சத்து மற்றும் 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இரு பகுதிகளாகப் பரித்து கவாத்து செய்தவுடன் ஒரு முறையும் பின்பு ஜுன் - ஜுலை மாதத்தில் மறுமுறையும் செடியினைச் சுற்றி இட்டு மண்ணோடு கலக்கச் செய்யவேண்டும்.

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிராம் செடி ஒன்றிற்கு)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிராம் செடி ஒன்றிற்கு)

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

மல்லிகை

60

120

120

470

30

பரிந்துரைக்கப்பட்ட 100 சதவிகித அளவு உரத்தை பிரித்து உரப்பாசனமாக வார இடைவெளியில் அளிக்கவும். வழக்கமான முறையில் ஒற்றை சூப்பர் பாஸ்பேட், யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உரப்பாசனத்தில், கரையும் உரப்பாசனங்களான பாலி ஃபீடு (19:19:19), KNO3 (13:0:45), யூரியா, மோனோ அமோனியம் பாஸ்பேட் (12:61:0), சல்பேட், பொட்டாசியம் போன்றவை உபயோகிக்கப்படுகின்றன.

உரப்பாசன அட்டவணை (100% RDF – 500:1000:1000 கிகி/எக்டர்)


வரிசை எண்
பயிர் பருவம் காலம் (வாரங்களில்) உர அளவு மொத்த உரம் அளிக்கப்படும் ஊட்டச்சத்து தேவையான %
தழைச் சத்து மணிச் சத்து சாம்பல் சத்து தழைச் சத்து மணிச் சத்து சாம்பல் சத்து
1 நடவு செய்தது முதல் நாற்று பருவம் (1 முதல் 4வது வாரம் வரை) (செப்டம்பர்) 4 19:19:19
13:0:45
யூரியா
132
166
7.2
25
22
3.3
25
-
-
25
75
-
10 10 10
  50 25 100
2 பூக்கும் பருவம் (5வது முதல் 20வது வாரம் வரை) (அக்டோபர் – ஜனவரி) 16 19:19:19
13:0:45 யூரியா
395
800
22
75
65
10
75
-
-
75
225
-
30 30 30
  150 75 300
3 பூக்கும் பருவம் முதல் அறுவடை (21வது முதல் 42வது வாரம் வரை) (பிப்ரவரி – மே) 20 19:19:19
13:0:45 யூரியா
658
833
108
125
108
16
125
-
-
125
375
-
50 50 50
  250 125 500
4. மீதமுள்ள நாட்கள் (42வது முதல் 52வது வாரம் வரை) (ஜீன் -ஆகஸ்ட்) 12 19:19:19
13:0:45
யூரியா(46%நைட்ரஜன்)
132
166
7.2
25
22
3.3
25
-
-
25
75
-
10 10 10
  50 25 100
  மொத்தம் 52     500 250 1000 100 100 100

75 சதவிகித மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட்டாக அளிக்கவும் = 4600 கிகி/எக்டர் (அடியுரம்)
சுருக்கம்


வ.எண்

உரம்

தேவையான அளவு (கிகி/எக்டர்)

1.

75 சதவிகித மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட்டாக அளிக்கவும்

736 கிகி x 6.25 = 4600

2.

19:19:19

1317

3.

13:0:45

1965

4

யூரியா

144.4

களைக்கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

தரையிலிருந்து 50 செ.மீ உயரத்தில் நவம்பர் இறுதி வாரத்தில் மல்லிகைச் செடிகளைக் கவாத்து செய்யவேண்டும். கவாத்து செய்யும் போது நோயுற்ற உலர்ந்த குச்சிகள் மற்றும் குறுக்காக வளர்ந்த கிளைகளையும் வெட்டி விட்டு சூரிய ஒளி நன்கு படுமாறு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு

மொட்டுப்புழு : இவை இளம் மொட்டுக்களை தாக்கி பெருத்த சேதங்களை உண்டு பண்ணும். இவற்றைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

சிலந்திப் பூச்சி : இவை இலைகளைக் கடித்து சேதப்படுத்தும். இதனைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 0.2 சதம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

நூற்புழு : மண் மாதிரி எடுத்து  நூற்புழு தாக்குதலைக் கண்காணிக்கவேண்டும். தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் வெளிறிய இளம் மஞ்சளாகி பின்னர் கருகிவிடும். இதனைக் கட்டுப்படுத்த 10 கிராம் டெமிக் குறணை மருந்தினை வேர்ப்பாகத்தின் அருகில் இட்டு நீர்ப்பாய்ச்சவேண்டும்.

இலைகள் மஞ்சளாதல் : இலைகள் மஞ்சளாவது, இரும்புச்சத்து குறைபாடு, வேர் அழுகல் மற்றும் வேர்ப்புழு தாக்குதலால் உண்டாகிறது. இரும்புச்சத்து குறைாட்டினால் இலைகள் மஞ்சளாவதைத் தடுக்க லிட்டருக்கு 5 கிராம் பெர்ரஸ் சல்பேட் கரைசலை 3 மாதங்களுக்கு ஒரு முறை தெளிக்கவேண்டும். வேர் அழுகளுக்கு காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25 சததம் கரைசலை செடியினைச் சுற்றி மண்ணில் ஊற்றவேண்டும். நல்ல வடிகால் வசதியுள்ள நிலங்களில் குண்டு மல்லியை பயிர் செய்வதன் மூலம் இந்நோய் வராமல் கட்டுப்படுத்தலாம். வேர்ப்புழு தாக்குதலுக்கு 5 கிராம் ப்யூரடான் குறணைகளை செடியைச் சுற்றி இட்டு மண்ணுடன் கலந்து நீர்ப்பாய்ச்சவேண்டும்.

அறுவடை

மல்லிகைச் செடி மார்ச் - ஏப்ரல் மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும். செடிகள் நட்ட முதல் ஆண்டிலேயே பூக்க ஆரம்பிக்கும். இரண்டாம் ஆண்டிலிருந்து தான் சீரான விளைச்சல் இருக்கும். நன்கு வளர்ந்த மொட்டுக்களை அதிகாலையில் பறித்துவிடவேண்டும்.

மகசூல் : எக்டருக்கு 8750 கிலோ பூ மொக்குகள் கிடைக்கும்.