||| | | | | |
தோட்டக்கலை :: மலரியல் பயிர்கள் :: மரிக்கொழுந்து

இரகங்கள் : உள்ளூர்

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நன்கு வடிகால் உள்ள மண் நீர் வசதி உள்ள நீர்நிலைகளில், குளிரான நன்கு வளரக்கூடியது.

விதை மற்றும் விதைப்பு : விதை அளவு 1.5 கிலோ / எக்டர், விதைகள் நவம்பர் மாதத்தில் உயர்த்தப்பட்ட பாத்திகளில் விதைக்கவேண்டும். வளர்ந்த நாற்றுக்களை ஒரு மாததம் கழித்து 15 x 7.5 செ.மீ இடைவெளியில் பாத்திகளில் நடவேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்)

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

SSP

மரிக்கொழுந்து

12.5

12.5

75

289

209

313

நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும். தழை, மணி, சாம்பல் சத்து 125:125:75 கிலோ / எக்டர் என்ற விகிதத்தில் 25 டன் தொழு உரத்துடன் இடவேண்டும். மணி மற்றும் சாம்பல் சத்து அடியுரமாகவும் இடவேண்டும்.

பயிர்க்காலம் : 5 முதல் 6 மாதங்கள்

அறுவடை

மரிக்கொழுந்து நட்ட இரண்டரை மாதத்திலிருந்து அறுடைக்கு தயாராகிறது. அதன் பிறகு 30 முதல் 40 நாட்கள் இடைவெளியில் அறுவடையைத் தொடர்ந்து செய்யலாம்.

எண்ணெய் சதவீதம் : ஐம்பதாம் நாளில் அறுவடை செய்யப்பட்ட பயிரில் எண்ணெய் சதவீதம் 0.13 ஆகவும், எழுபத்தைந்தாம் நாளில் அறுவடை செய்யப்பட்ட பயிரில் எண்ணெய் சதவீதம் 0.23 ஆகவும் இருக்கும்.
தழைச்சத்தை மேலுரமாகவும் இடவேண்டும். நடவு செய்த 25வது நாளில் 50 கிலோ தழைச்சத்தினையும், 75,110 மற்றும் 150வது நாட்களில் தலா 25 கிலோ தழைச்சத்தினையும் இடவேண்டும் (ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும்).

 

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014