||| | | | | |
தோட்டக்கலை :: மலரியல் பயிர்கள் :: சம்பங்கி
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள் :
ஓரடுக்கு : மெக்ஸிகன் சிங்கிள், ‚ங்கார், ப்ரஜ்வார்

இரண்டடுக்கு : பியர்ல்டபுள், சுவாளினி, வைபவ்

மண் மற்றும் தட்பவெப்பநிலை : சுமார் 6.5 முதல் 7.5 கார அமில நிலையுடன் நன்கு வடிகால் வசதியுடைய மண்ணில் நன்கு வளரும்.

இனவிருத்தி மற்றும் நடவு : ஜுன் - ஜுலை மாதங்களில் 25 முதல் 30 கிராம் எடையுள்ள கரணைகளை 45 x 20 செ.மீ இடைவெளியில் 25 செ.மீ ஆழத்தில் எக்டருக்கு 1,12,000 கரணைகள் தேவைப்படும். கரணைகளை அறுவடை செய்து 30 நாட்கள் வைத்திருத்தபின்பே பயன்படுத்தவேண்டும். நடவுக்கு முன் 5000 பிபிஎம் சிசிசியில் (5 கிராம் / லிட்டர்) மூழ்கச்செய்த பின்பு கரணைகளை நடவு செய்தால் மகசூல் அதிகரிக்கும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை :

தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 200:200:200 கிலோ / எக்டர் என்ற விகிதத்தில் 25 டன்  தொழு உரத்துடன் இடவேண்டும். (இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி) நிலையத்தால் பரிந்துரைக்கப்பட்ட உர அளவு.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

நூற்புழு : நூற்புழுக்கள் மண்ணில் இருந்தால செடிகளின் வளர்ச்சி குன்றி இலைகள் வெளிறி மகசூல் பாதிக்கப்படும். இதனைக் கட்டுப்படுத்த வேர்ப்பகுதியில் கார்போஃப்யூரான் குறணை மருந்தினை ஒரு செடிக்கு ஒரு கிராம் என்ற விகிதத்தில் இட்டு உடனடியாக நீர்ப்பாய்ச்சவேண்டும்.

பயிர்க்காலம் : இரண்டு வருடங்கள் சிறந்த மேலாண்மை முறைகளைக் கையாண்டால் மேலும் ஒரு வருடத்திற்குப் பராமரிக்கலாம்.

அறுவடை : கரணைகள் முளைத்த பின்பு 80 முதல் 95 நாட்களில் பூக்களை அறுவடை செய்யலாம். பூக்கள் நாள்தோறும் அறுவடை செய்யப்படவேண்டும்.

மகசூல் : 14 முதல் 15 டன் மலர்கள் / எக்டர் , 8 முதல் 10 கிலோ கான்கிரீட் / எக்டர்

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008