இரகங்கள்
முன்பருவ இரகங்கள்
ஐரிஷ் பீச் மற்றும் செளக்ஸ் பைபின், இந்த இரகங்கள் ஏப்ரல் மே மாதம் வரை பலன் கொடுக்கும்.
இடைக்கால இரகங்கள்
காரிடன் மற்றும் வின்ட்டர்ஸ்டீன். இந்த இரகங்கள் ஜீன் முதல் ஜீலை வரை பலன் கொடுக்கும்.
பின்பருவ இரகங்கள்
ரோம் ப்யூட்டி, பார்லின்ஸ் ப்யூட்டி மற்றும் கேகேஎல் 1 (கொடைக்கானல் 1). இந்த இரகங்கள் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை பலன் கொடுக்கும்.
மண் மற்றும் தட்பவெப்பநிலை
நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் கலந்து வண்டல் மண் ஆப்பிள் பயிர் செய்வதற்கு மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 5.8 முதல் 6.2 வரை இருக்கவேண்டும். கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் முதல் 2000 மீட்டர் வரை நன்கு பலன் கொடுக்கும். ஆப்பிள் மரங்கள் நல்ல பலன் கொடுப்பதற்கு கடுமையான குளிரும் பனியும் அவசியம் தேவை. குளிர் காலத்தில் சூதோஷ்ணநிலை 00 முதல் 40 அளவில் குறைந்தது 1000 மணி நேரம் தேவைப்படும்.
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், மதுரை மாவட்டத்தில் கொடைக்கானல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு பகுதியில் சாகுபடி செய்யப்படுகின்றன. |
|
|
வொயிட் டாட்டட் ரெட் |
அமேரிக்கன் ஆப்ரியாக் |
|
|
சாமர் |
கோல்டன் டெலிசியஸ் |
|
விதையும் விதைப்பும்
பயிர்ப்பெருக்கம் : ஒட்டு கட்டிய செடிகள்
பருவம் : ஜீன் - டிசம்பர் இடைவெளி மற்றும் நடவு : 4 x 4 மீட்டர் இடைவெளியில் செ.மீ நீளம், 60 செ.மீ அகலம், ஆழத்தில் குழிகள் எடுத்து ஆறவிடவேண்டும். மக்கிய தொழு உரம், மேல ் மண் ஆகியவற்றை கலந்து குழியை நிரப்பவேண்டும். செடிகள் நடுவதற்கு ஜீன்-ஜீலை சிறந்த பருவமாகும். ஒட்டுப்பகுதி மேலே தெரியும்படி செடிகள் காற்றினால் சாயாதவாறு இருபுறமும் குச்சிகள் நட்டு செடியுடன் சேர்த்து கட்டவேண்டும். முதல் ஆண்டில் ஒட்டுப்பகுதிக்கு கீழிருந்து வளரும் துளிர்களை அவ்வப்போது நீக்கிடவேண்டும். |
|
பர்லின்ஸ் ப்யூடி |
|
|
நீர் நிர்வாகம்
நீர்ப்பாசனம் : செடிகள் துளிர்த்து நன்கு வளரும் வரை நீர்ப்பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
உரமிடுதல் : மரம் ஒன்றிற்கு 25 கிலோ தொழு உரம் 500 கிராம் தழைச்சத்து 1 கிலோ மணிச்சத்து 1 கிலோ சாம்பல் சத்து அளிக்கவேண்டும்.
பயிர் |
இடவேண்டிய சத்துக்கள்(கிலோ/ ஒரு மரத்திற்கு) |
இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ/ ஒரு மரத்திற்கு) |
|
தழை |
மணி |
சாம்பல் |
10:26:26 |
யூரியா |
ஆப்பிள் |
0.50 |
1.00 |
1.00 |
4.00 |
0.22 |
களை கட்டுப்பாடு மற்றும பின்செய் நேர்த்தி
கவாத்து செய்தல் : முதல் 3 ஆண்டு காலத்தில் மரங்கள் சிறந்து வளரவும் பிற்காலத்தில் தேவையான உருவத்துடன் விளங்கவும் சரியான கவாத்து முறையைக் கையாண்டு தேவையற்ற கிளைகளை வெட்டிவிடவேண்டும். நடப்படும் வகைகளைப் பொருத்து, நவம்பர் முதல் ஜனவரி வரை கவாத்து செய்யலாம். ஜீன் - ஜீலைகளில் பலனுக்கு வரும் வகைகளும் நவம்பர் மாதத்திலும், ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் அறுவடைக்கு வரும் வகைகளை ஜனவரி மாதத்திலும் கவாத்து செய்யவேண்டும். உள்நோக்கி வளரும் குச்சிகளையும், காய்ந்த குச்சிகளையும் முதலில் வெட்டவேண்டும். பின்பு சென்ற பருவத்தில் வளர்ந்துள்ள குச்சிகளை மூன்றில் ஒரு பகுதி அல்லது பாதியை வெட்டி குறைக்கவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
அசுவினிப் பூச்சியை கட்டுப்படுத்த மீதைல் டெமடடான் 25 இசி 4 மில்லி மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
எம் 778, 799, எம்எம் 104, எம்எம் 110, எம்எம் 112, எம்எம் 113, எம்எம் 114, எம்எம் 115 போன்ற எதிர்ப்புத்திறன் கொண்ட வேர் விட்ட குச்சிகளை உபயோகிக்கவேண்டும்.
நோய்கள்
ஆப்பிள் சொறிநோய் (Scab)
இந்நோய் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட தருணங்களில் மருந்து தெளிக்கவேண்டும்.
மருந்து தெளிக்கும் பருவம் |
தெளிக்க வேண்டிய மருந்து |
மொட்டுக்கள் வரும்போது அல்லது மொட்டு வந்த 15 நாட்களுக்கு |
கேப்டான் அல்லது மேன்கோசெப் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும். |
இதழ்கள் உதிரும் போது |
கார்பென்டாசிம் 0.5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும் |
இதழ்கள் உதிர்ந்து 10 நாட்கள் கழித்து |
கேப்டான் அல்லது மேன்கோசெப் இரண்டு கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். |
பழங்கள் உருவாகி 14 நாட்கள் கழித்து |
கேப்டாபால் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். |
|
|
|
கம்பளி அசுவிணி |
|
மருந்து தெளிக்கும்போது டீப்பால் அல்லது ட்ரைட்டான் போன்ற ஒட்டும் திரவ மருந்தினை 10 லிட்டர் நீருக்கு 10 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். குறைந்த அழுத்தமுடைய தெளிப்பானை உபயோகிக்கவேண்டும்.
லிச்சன்ஸ் உன்னும் படர் பாசிகளைக் கட்டுப்படுத்த 1 கிலோ சுண்ணாம்பை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து கவாத்து செய்தவுடன் தெளிக்கவும்.
அறுவடை
மகசூல் : செடிகள் நட்ட 4ஆம் ஆண்டிலிருந்து காய்க்கத் துவங்கும். 10 முதல் 20 கிலோ ஒரு மரத்திற்கு ஒரு ஆண்டிற்கு. | |
|
|