தோட்டக்கலை :: பழப்பயிர்கள் :: சீமை இலந்தை

இரகங்கள் : பனாரசி, உம்ரான், கோலா, கைத்தளி மற்றும் கோமா கீர்த்தி

மண் மற்றும் தட்பவெப்பநிலை

இலந்தை பயிரிட இரு மண்பாட்டு செம்மண் நிலங்கள் மிகவும் உகந்தவை. இலந்தையை உவர் நிலங்களிலும், வறட்சிப் பகுதிகளிலும் பயிரிடலாம்.

பயிர் பெருக்கம்

மொட்டு கட்டப்படட செடிகள்

நடவு முறை

8 மீட்டர் இடைவெளியில் 1 மீட்டர் ஆழ, அகல மற்றும் நீளமான குழிகள் எடுக்கவேண்டும். குழிகளை ஆறவிடட பின்பு 25 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் மேல் மண் கொண்டு குழிகளை நிரப்பி நீர் பாய்ச்சவேண்டும். இலந்தையில் ஆணிவேர் விரைவாகத் தோன்றுவதர் வேர்ச்செடி விதைகளை குழுிகளில் நேரடியாக விதைத்து, பின்பு வேர்ச்செடி விதைகளைக் குழிக்கு இரண்டு அல்லது மூன்று வீதம் 3 செ.மீ ஆழத்தில் ஊன்றவேண்டும். விதைத்த 90 நாட்களில் நாற்றுகள் மொட்டுக் கட்டுவதற்குத் தயாராகிவிடும். விருப்பமான இரகங்களில் ஒரு ஆண்டு முதிர்ச்சியுள்ள குச்சியிலிருந்து திரட்சியான மொக்குகளைத் தேர்வு செய்து வேர்ச்செடிகளில் மூடி மொட்டுக்கட்டும் முறை மூலம் மொட்டுக்கட்ட வேண்டும். இவ்வாறு மொட்டுக் கட்டப்பட்ட செடிகளில் ஒரு வார காலத்தில் முளைகள் தோன்ற ஆரம்பிக்கும். இவ்வாறில்லாமல் நாற்றாங்காலிலேயே மொட்டுக்கட்டி, அந்தச் செடிகளை நன்கு தயாரிக்கப்பட்டட குழிகளில் நடவு செய்யலாம்.

நீர் நிர்வாகம்

இளம் கரங்களுக்கு வராம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். மானாவாரியாகப் பயிரிடப்படும் இலந்தை மரங்களுக்குத் தேவையான நீரைத் தேக்குவதற்கு சாய்வுப் பாத்திகளைப் பெரிதாக அமைக்கவேண்டும். காய்க்கத் தொடங்கிய இலந்தை மரங்களுக்கு நீர்த் தேவை குறைவு. எனினும், காய்ப்பிடிப்பு நேரத்தில் நீர் பாய்ச்சினால் அதிகமான காய்ப்பிடிப்பு ஏற்படும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரமிடுதல் (செடி ஒன்றிற்கு / வருடத்திற்கு)

மரத்தின் வயது

தொழு உரம் (கிலோ)

ஒரு வருட வளர்ச்சியுள்ள மரத்திற்கு

20

இரண்டு வருட வளர்ச்சியுள்ள மரத்திற்கு

30

 

பயிர்

 

இடவேண்டிய சத்துக்கள்(கிராம் / செடி ஒன்றிற்கு)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிராம் / செடி ஒன்றிற்கு )

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

பொட்டாஷ்

சீமை இலந்தை

ஒரு வருட வளர்ச்சியுள்ள மரத்திற்கு

200

100

200

400

350

170

 

இரண்டு வருட வளர்ச்சியுள்ள மரத்திற்கு

500

200

500

800

911

500

மேற்படி உரங்களைக் கவாத்து செய்தபின்பு இடவேண்டும்.

கவாத்து செய்தல்

பிப்ரவரி மற்றும் மார்ச்சு கவாத்து செய்தல் வேண்டும். பழங்கள் நன்கு பிடிக்க நோய்வாய்ப்பட்ட நலிந்து போன, குறுக்காக வளரும் கிளைகளை வெட்டிவிடவேண்டும். நான்கு திசைகளிலும் பக்கக் கிளைகள் தரையிலிருந்து ஒரு மீட்டர் உயரத்திற்கு மேல் தோன்றவேண்டும். நேராக வளர்வதற்கு பக்க துணையாகக் குச்சிகளை நட்டு பராமரிக்கவேண்டும். ஒரு ஆண்டு வளர்ச்சியான மரங்களின் நுனியை வெட்டிவிடவேண்டும். பின்பு ஆறு அல்லது எட்டு முதன்மைக் கிளைகள் 15 முதல் 30 செ.மீ இடைவெளியில் தோன்ற அனுமதிக்கவேண்டும். பின்பு முதன்மைக் கிளைகளின் வளர்ச்சியைத் தேக்கி இரண்டாவது மற்றும் மூன்றாவது பக்கக் கிளைகள் வளர ஊக்குவிக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

பழ ஈ : இந்த ஈயின் புழுக்கள் பழங்களைத் தாக்குவதினால் பழங்கள் உண்ணுவதற்கு உபயோகமற்றதாகி விடுகின்றன. தாக்கப்பட்ட பழங்களைச் சேகரித்து அழித்துவிடவேண்டும். இந்தப் பழ ஈயை மானோ குரோட்டோபாஸ் அல்லது டைமெத்தோயேட் பூச்சிக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி மீட்டர் வீதம் கலந்து தெளித்துப் கட்டுப்படுத்த வேண்டும்.

லேக் பூச்சிகள் : கவாத்து ஈயின் புழுக்கள் பழங்களைத் தாக்குவதினால் பழங்கள் உண்ணுவதற்கு உபயோகமாற்றி விடுகின்றன. தாக்கப்பட்ட பழங்களைச் சேகரிதிது அழித்துவிட வேண்டும். இந்த பழ ஈயை மானோகுரோட்டோபாஸ் அல்லது டைமெத்தோயேட் பூச்சிக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி லிட்டர் வீதம் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தவேண்டும்.
லேக் பூச்சிகள்கவாத்து செய்யும்போது இப்பூச்சி தாக்கப்பட்ட காய்ந்த குச்சிகளை வெட்டி எரித்துவிடவேண்டும். பின்பு பாஸ்போமிடான் அல்லது மிதைல் டெமட்டான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வீதம் கலந்து தெளிக்கவேண்டும்.

இலைக்கரும்புள்ளி நோய்
இந்நோயைக் கட்டுப்படுத்த கார்பெண்டாசிம் ஒரு கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது குளோரோ தலானில் கலந்து 14 நாட்கள் இடைவெளியில் நோயின் அறிகுறிகள் தோன்றும்போது தெளிக்கவேண்டும்.

சாம்பல்நோய்

இலந்தையில் அதிகம் சேதம் விளைவிப்பது சாம்பல் நோய் ஆகும். தாக்குதல் அதிகமாக இருக்கும்போது மகசூல் சரியாகக் கிடைக்காது. தாக்கப்பட்ட பழங்கள் வெடித்துவிடும். இந்நோயைக் கட்டுப்படுத்த 2 கிராம் கந்தகத் தூளை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

அறுவடை

மகசூல் : 70-80 கிலோ ஒரு மரத்திற்கு ஒரு ஆண்டிற்கு.

விதை உற்பத்தி தொழில்நுட்பம்

அரும்பு மலர்ந்ததிலிருந்து 13வது வாரத்தில் விதைகள் முதிர்ச்சி அடைகின்றது. மேலும் பழங்கள் மஞ்சள் கலந்து சிவப்பு நிறத்தில் இருக்கும்போது அறுவடை செய்யலாம். பிரித்து எடுத்த விதைகளை 22 / 64 “இரும்பு சல்லடை” கொண்டு தரம் பிரிக்கவேண்டும். எந்தவித நேர்த்தியும் இல்லாமல் விதைகளை 30 மாதங்கள் வரை சேமிக்கலாம்.