தோட்டக்கலை :: பழப்பயிர்கள் :: பீச் |
|||||||||||||||||||
இரகங்கள் முன்பருவ இரகங்கள் : கில்லி கிராக்கி மற்றும் ப்ளோரிடாஷன் இடைக்கால இரகங்கள் : ஷாபசந்த் பின்பருவ இரகங்கள் : சிகப்பு ஷாங்காய் மண் மற்றும் தட்பவெப்பநிலை நல்ல வடிகால் வசதியுடைய அங்ககப் பொருட்கள் நிறைந்த செம்மணல் கலந்த களிமண் பயிரிட மிகவும் ஏற்றது. கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டர் உயரம் வரை பயிர் செய்யலாம். மண்ணின் கார அமிலத்தன்மை 5.8 முதல் 6.2 வரை இருக்கவேண்டும். விதையும் விதைப்பும் பயிர்ப்பெருக்கம் இடைவெளி ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை உரமிடுதல் காய்க்கும் மரம் ஒன்றிற்கு 25 கிலோ நன்கு மக்கிய தொழு உரம், 500 கிராம் தழைச்சத்து, ஒரு கிலோ மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை அளிக்கவேண்டும்.
களைக்கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி கவாத்து செய்தல் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வருடத்திற்கொரு முறை பிளம்ஸ் மரங்களுக்கு செய்வது போலவே கவாத்து செய்யவேண்டும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பழஈ ஒரு சத மீதைல்யூஜினால் உடன் மாலத்தியான் 1 மில்லி மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து அதிகாலை வேளைகளில் தோட்டங்களில் ஆங்காங்கே வைக்கவேண்டும். ‘மெத்தையூஜினால்’ திரவத்தால் ஆண் ஈக்கள் கவரப்பட்டு ‘மாலத்தியான்’ பூச்சிக்கொல்லி மருந்தினால் சாகடிக்கப்படுகிறது. நோய்கள் இலைச்சுருள் நோய் இலைச்சுருள் நோயைப்பரப்பும் அசுவினிப் பூச்சியைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். சாம்பல் நோய் ஒரு எக்டருக்கு 25 கிலோ கந்தகத்தூளை தூவவேண்டும் அல்லது கார்பன்டாசிம் 0.5 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும். அறுவடை மகசூல் மரம் ஒன்றுக்கு ஆண்டொன்றிற்கு 10 கிலோ முதல் 15 கிலோ பழங்கள் கொடுக்கவல்லது. |
|||||||||||||||||||
முதல் பக்கம் |நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் | | உர அட்டவணை | |புகைப்படங்கள்| தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024. |