தோட்டக்கலை :: பழப்பயிர்கள் :: பிளம்ஸ் |
|||||||||||||||||||
இரகங்கள் : குறுகிய கால இரகம் : ரூபியோ. இடைக்கால இரகங்கள் : ஹேல், கேவியோட்டா மற்றும் அபன்டன்ஸ் பருவம் : ஜீன் - ஜீலை நீண்டகால இரகங்கள் : கெல்சி, ஸார் மற்றும் ஷாட்சுமா பருவம் : ஜீலை - ஆகஸ்ட் பொதுவாக ஹேல் இரகத்தினை அயல் இரகத்துடன் பயிர் செய்வதன் மூலம் நல்ல மகரந்த சேர்க்கை ஏற்பட்டு அதிக மகசூல் கிடைக்கும். மண் மற்றும் தட்பவெப்பநிலை நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் கலந்த களிமண் மிகவும் ஏற்றது. மண்ணின் கால அமிலத்தன்மை 5.8 முதல் 6.2 வரை. கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரம் வரை பயிரிடலாம். விதையும் விதைப்பும் நடவு : ஜீன் - ஜீலையில் அல்லது அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் 4 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ நீளம், அகலம், ஆழமுள்ள குழிகளில் செடிகளை நடவேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை காய்க்கும் மரங்களுக்கும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மரம் ஒன்றுக்கு மக்கிய தொழு உரம் 30 கிலோ, 500 கிராம் தழைச்சத்து, ஒரு கிலோ மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை அளிக்கவேண்டும்.
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி கவாத்து செய்தல் நுனியில் வளர்ந்துள்ள பகுதியை வெட்டிவிட்டு பக்கவாட்டில் வளரும் கிளைகளை வளரச் செய்யவேண்டும். மொட்டு ஒட்டுக்கட்டிய பகுதிக்க கீழிலிருந்து வளரும் துளிர்களை அவ்வப்போது வெட்டி நீக்கவேண்டும். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கவாத்து செய்தல் நல்ல பலன் கொடுக்கும். காய்ந்த குச்சிகளையும், குறுக்காக உள்நோக்கி வளரும் குச்சிகளையும், மிக மெலிந்த குச்சிகளையும் வெட்டி எறிதல் அவசியம். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிர் பாதுகாப்பு இதனைக் கட்டுப்படுத்த அதிகாலை வேளையில் மாலத்தியான் 50இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது பென்தியான் 100 இசி 1 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மீதைல்யூஜினால் ஒரு சத்துடன் மாலத்தியான் 50இசி 1 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவேண்டும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு ப்ளம்ஸ் மரங்களை நோய்கள் ஒன்றும் தாக்குவது இல்லை. மரங்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு நல்ல பயலன் கொடுக்கும். அறுவடை மகசூல் : மரம் ஒன்றுக்கு வருடத்திற்கு 25 முதல் 30 கிலோ பழங்களை அறுவடை செய்யலாம்.
|
|||||||||||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024. |