தோட்டக்கலை :: நிழ எழிலூட்டுதல் :: தோட்ட அமைப்பு |
|
பூந்தோட்டக்கலையின் அடிப்படை மற்றும் அமைப்புகள்
பூந்தோட்டக்கலையின் அடிப்படை கொள்கைகள் பிண்ணனி (Background) சுவர்கள் , நெடுமரங்கள் , குத்துச்செடி வேலிகள் போன்ற பிண்ணனிகள் பூந்தோட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பாதிக்காத வகையில் நடுநிலை வகிக்க வேண்டும். முரண்பாடு பூந்தோட்டத்தின் வடிவமைப்பு அதன் ஒருமித்த போக்கை அகற்றும் வகையில் வெவ்வேறு வடிவங்களிலும் , வண்ணங்களிலும் அமைக்கப்பட வேண்டும். திறந்த வெளி மையம் பூந்தோட்டத்தின் மையப் பகுதி திறந்த வெளியாக இருப்பதே சிறந்தது. இதனை புல்வெளி அமைப்பதன் மூலம் செயல்படுத்தலாம். மறுமதிப்பு சில அமைப்புகளை திரும்பத்திரும்ப நிறுவதால் பூந்தோட்டத்தின் இயற்கையான இணைப்பையும் சமநிலையையும் ஒருமைப்பாட்டையும் மேம்படுத்தலாம். இதில் உருவ அமைப்பை மட்டுமே திரும்பத்திரும்ப நிறுவவேண்டுமே தவிர வண்ணங்கள் மற்றும் செடியின் தன்மையில் வேறுபாடு இருக்க வேண்டும். மனமகிழ்வு ஒழுங்கான வரிசைக்கிரமும், பல்வேறு பூந்தோட்ட அமைப்புகளின் சரிவிகித கலப்பும் மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைக்க வேண்டும். எளிமை எளிய முறையில் அமைக்கப்படும் பாகங்கள் பூந்தோட்டத்தின் ஒருங்கிணைப்பிற்கு பெரிதும் உதவும். எளிமையான அமைப்பிற்கு ஒரே மாதிரியான செடிகளை குறிப்பிட்ட இடத்தில் கொத்தாக நடவேண்டும் பாத்தியின் ஓரங்களில் பாம்பு போல் இல்லாமல் நேராகவோ அல்லது சற்றே வளைந்தோ இருந்தால் எளிமை பிரதிபலிக்கும். மையப்புள்ளி ஒவ்வொரு திரைப்படத்திலும் உச்சகட்டம். இருப்பது போல் ஒவ்வொரு தோட்டத்திலும் ஒரு இடம் மட்டும் பளிச்சென்று தெரியும் படியும் மனதில் பதியும் படியும் அமைக்க வேண்டும். அத்தகைய இடத்தை போக்கல் பாயிண்ட் (அ) மண்டல மையம் என்பர். சமநிலைத் தோட்டத்தில் மத்திய நேர்கோட்டு கடைசியில் போக்கல் பாயிண்ட் அமைக்க வேண்டும். சிலை, பறவைகள் , குளிக்கும் தொட்டி, அலங்கார வளைவு, நீர் ஊற்று , நீர் நிலைத் தோட்டம் போன்றவைகளைப் போக்கல் பாயிண்ட்டாக அமைக்கலாம். சமநிலை தோட்டத்தின் மத்திய கோட்டிற்கு இருபுறமும் ஒரே வகை மரங்களையோ அல்லது செடிகளையோ நடுவதன் மூலம் சமநிலை கிடைக்கிறது. இதனை வெவ்வேறு வகை மரங்களையும் செடிகளையும் நட்டு பார்வைக்கு சமநிலையில் தோன்றுவதைப் போல் அமைக்கலாம். முதல்வகை சமமான பூமியில் அமைக்கப்படும் தோட்டங்களுக்கும் இரண்டாவது வகை சற்று சரிவான பூமியில் அமைக்கப்படும் தோட்டங்களுக்கும் பொருந்தும். இயற்கையான இணைப்பு கட்டிடத்தை சுற்றிலும் நட்ட மரங்களும் செடிகளும் அதன் முழு வளர்ச்சியடைந்ததும் கட்டிட அளவோடு ஒத்திருக்க வேண்டும். இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட செடிகள் , மரங்கள் முதலானவை அங்கு நடமாடும் மனிதர்களுக்கு அனுகூலமாக இருக்கவேண்டும். உதாரணமாக சிறுவர்கள் விளையாடும் இடத்தில் செடிகளும் மரங்களும் சிறியதாகவே இருக்க வேண்டும். இங்குள்ள செடிகள் சுற்றுப்புற சூழலுக்கேற்ப அமைய வேண்டும் பெரிய இலைகளைக் கொண்ட செடிகளையும் , மரங்களையும் சிறிய தோட்டத்தில் நடக்கூடாது. ஒருமைப்பாடு ஒரு பூந்தோட்டத்தை அமைக்க தேவையான அமைப்புகளும் தாவரங்களும் வெவ்வேறாக இருந்த போதிலும் அவற்றினிடையே ஒரு ஒற்றுமை இருக்கவேண்டும். இந்த ஒற்றுமை பூந்தோட்டத்தின் அழகை மென்மேலும் மெருகூட்டும். இந்த ஒற்றுமையில் சிறு வேற்றுமை இருந்தாலும் கூட பூந்தோட்டத்தின் தன்மையையே மாற்றிவிடும். உயிரோட்டம் மனிதனுக்கு சுவாவம் போல் பூந்தோட்டத்திற்கு உயிரோட்டம் அவசியம். பூந்தோட்டத்தின் பாகங்கள் எல்லாமே அசைவின்றி அமைந்தால் மனித இயல்பை குரூரமானதாக்கும். மரங்களின் தலையசைவையும் , கொடிகளின் நளினமும், கண்கவர் மலர்களின் அணிவகுப்பும் மேகக் கூட்டங்களும் , வானம்பாடிகளும் , வண்ணத்துப்பூச்சிகளும் பொங்கி வழியும் தண்ணீரும் பூந்தோட்டத்தின் உயிரோட்டங்களாகும். ஆகாயத்தோற்றம் ஒரு பூந்தோட்டத்தை அமைக்க திட்டமிடும் போது ஆகாயத்தோற்றத்தை கருத்தில் கொள்ள வேண்டும். மலைச் சிகரங்கள் , பிரம்மாண்ட விருட்சங்கள் புராதண கட்டிடங்கள் , கோவில் கோபுரங்கள் போன்றவற்றைப் பிண்ணனியாகக் கொண்டு தோட்டத்தைத் திட்டமிட்டால் பூந்தோட்டத்தை மேலும் எழிலூட்டலாம். |
|
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015 |