தோட்டக்கலை :: நிழ எழிலூட்டுதல் :: தாவர அங்கங்கள் |
|||||||||
தாவர அங்கங்கள் எழிலூட்டும் தோட்டங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தன்னிலைப்படுத்தி சேர்ப்பதற்காக சற்றே உயரமாக வளரும் அழகிய இலையைக் கொண்டுள்ள செடிகள் நெருக்கமாகவும் நேர் வரிசையிலும் நடப்படுகின்றன. இத்தகைய செடிகள் நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் வளரும் இயல்புடையவையாக இருப்பது அவசியம் செடியின் அடிமட்டத்திலிருந்து மேல்பகுதிவரை பசுமையான அடர்த்தியான இலையைக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய தாவரங்களை கவாத்து செய்தால் நேர்த்தியாக காட்சியளிக்கும் தன்மை பெற்றிருப்பது அவசியம். இலை அலங்கார குத்துச் செடி வேலிகள் அகாலிபா போன்ற மிதமான உயரமுள்ள செடிகள் அதிகம் மறைப்புச் செடிகளாக வளர்க்கப்படுகின்றன. இவ்வகை செடியின் இலைகள் பச்சை, சிவப்பு மற்றும் வேறுபட்ட வண்ணங்களில் உள்ளன. பீநாரி (க்ளீரோடென்ரான் இனெர்மி) செடிகள் பெரும்பாலும் பாதை மற்றும் சாலை ஓரங்களிலும் வெளிப்புற எல்லையிலும் நடப்படுகின்றன. இத்தகைய செடிகளைக் கால்நடைகள் உண்பதில்லை. குறைந்த உயரம் மற்றும் நடுத்தரமான உயரத்தில் இச்செடியை செய்து பராமரிக்கலாம். மிகவும் அழகிய இலையையுடைய குறுஞ்செடியான டுராண்டா செடிகள் தரைமட்டத்திற்கு சற்றே அதிகமாக வளரும் தன்மை பெற்றது. டுராண்டா செடிகள் நீர் குறைவான இடங்களில் வளரும் தன்மை பெற்றது. மருதாணி, காட்டுக் கருவேப்பிலை போன்ற செடிகள் உயரமான வடிவில் கவாத்து செய்வதற்கு ஏற்றது. இவற்றின் இலை சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அழகு சேர்க்கும் தன்மை பெற்றது. பூக்கும் குத்துச்செடி வேலிகள் பெரும்பாலான எழிலூட்டும் இடங்களில் பூக்களை உடைய மறைப்புச் செடிகள் அதிகம் விரும்பப்படுகின்றன. இதற்கு காகிதப்பூ (போகன்வில்லா) ஒரு உதாரணம் ‘லூயி வதினா’ போன்ற போன்வில்லா இரகங்கள் அடர்த்தியான பூங்கொத்துகளில் பல வண்ணங்களில் பூக்களைப் பெற்றுள்ளது. ஹெமிலியாஇ ப்யூசியா போன்ற பூஞ்செடிகள் சிவப்பு , ஆரஞ்சு வண்ணங்களில் பூத்து சூழ்நிலையை அழகுபடுத்துகின்றன. சற்றே உயரமாக வளரும் செம்பருத்தி, லன்டோனா, மாதுளை டெக்காமோ போன்ற செடிகள் நம்நாட்டில் அதிகம் மறைப்புச் செடிகளாக வளர்க்கப்படுகின்றன. இவற்றின் பூக்கள் பல வண்ணங்களில் உள்ளதால் நிலையான மறைப்புச் செடிகளாக வளர்க்கப்படுகின்றன. பெருஞ்செடிகள் எழிலூட்டும் பூங்கா, தோட்டங்களில் 50 செ.மீ – 2 மீட்டா உயரம் வரை வளரும் செடிகள் நீண்ட கால அழகுத் தோற்றத்திற்காக பெருஞ்செடிகள் நடப்படுகின்றன. இத்தகைய பெருஞ்செடிகள் சற்றே கடினதோற்றத்தில் அழகிய இலை மற்றும் பூக்களைப் பெற்றுள்ளன. சிறிய வீடுகள் மற்றும் தோட்டத்திற்கு மிகவும் ஏற்றவை. வீடுகளின் முன்பகுதியில் பெரும்பாலான பூக்கின்ற தன்மையையுடைய செடிகள் வளர்க்கப்படுகின்றன. சவுக்கு, லட்சக்கொட்டைக் கீரை போன்ற இலை அழகுப் பெருஞ்செடிகள் மற்றும் செம்பருத்தி, டெக்கோமா, இச்சோரா போன்ற பூ அழகுப் பெருஞ்செடிகளும் வளர்க்கப்படுகின்றன. இத்தகைய செடிகள் பூந்தொட்டிகளிலும் வளர்க்க ஏற்றவை. பெருஞ் செடிகளின் வகைகள்
சூரிய ஒளியின் நிலைக்கேற்ற வகை
சில முக்கியப் பெருஞ்செடிகள் மிதமான உயரத்தில் பல இலை வடிவம், வண்ணங்களில் வளரும் தன்மையுள்ளது. வண்டு கொல்லிகள் (கேசியா அலேட்டா) உயரமாக வளரும், அதிகம் கிளைக்காத செடி, பூக்கள் அடர் மஞ்சள் நிறத்திலும் நீளமாக இறக்கை வடிவிலான காய்கள் இச்செடியின் அழகுக்குக் காரணமானவை. டுராண்டா உயரமாக வளரும் முள்ளுடைய செடி வகையாகும். இலைகள் மிக அழகிய கண்ணைக் கவரும் நிறத்திலும், பூக்கள் ஊதா நிறத்திலும் உள்ளவை. காய்கள் மஞ்சள் நிறத்திலும், செடிகளில் முள்ளுடையதாகவும் இருப்பதால் வேண்டிய மட்டத்தில் கவாத்து செய்ய ஏற்றது. எரான்திமம் நிழலுள்ள இடங்களில் வளர்க்க ஏற்றது. கவர்ச்சியான இலை மற்றும் பூக்களைப் பெற்றுள்ளது. தண்டு மூலம் பயிர்பெருக்கம். கிராப்டோபில்லம் இலை அழகுச் செடியான இத்தாவரம் நிழலுள்ள இடங்களில் வளர்க்க ஏற்றது. செம்பருத்தி உயரமாக வளரும் செம்பருத்தி செடிகள் வருடந்தோறும் பசுமையான இலைகளையும் அழகிய வண்ணங்களில் பூக்களையும் தரவல்லது. ஓரடுக்கு பலஅடுக்கு நேர்த்தியில் கவர்ச்சியான இதழ்களை உடையது. இட்லிப்பூ வருடந்தோறும் பூக்கின்ற தன்மையுடையது. சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் பூக்கும், தண்டு மூலம் பயிர்பெருக்கம். மல்லிகை , முல்லை வருடத்தில் 5-6 மாதங்கள் பூக்கும் தன்மையுடையது. தண்டு மூலம் பயிர்பெருக்கம். லன்டானா அதிக முட்கள் உள்ள இச்செடி மிகவும் அடர்த்தியாக வளரும் மஞ்சள் , சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் பூக்கின்றன.
பவளமல்லி பென்டாஸ் பிளம்பாகோ லட்சக் கொட்டைக் கீரை நந்தியாவட்டை நித்ய கல்யாணி கொடி வகைகள்
முக்கிய கொடிகளின் குறிப்புகள் ஆண்டி கோனான் லெப்டோப்பஸ் இரயில் பூ கிழங்கு வகை கொடியாகும், பூக்கள் சிவப்பு நிறமாகவும் தேனீக்களை கவரும் கொடியாகும். அலமாண்டா மெல்லிய கிளைகளை உடையது. பூக்கள் மஞ்சள் நிறத்தில் மழைக்காலங்களில் பூக்கும் தன்மை உடையது அஸ்பராகஸ் ப்ளுமோசஸ் சிறகு போன்ற இலையுடைய கொடி வகையாகும். விதை மூலம் பயிர்பெருக்கம். சங்குப்பூ செங்காந்தள் மலர் ஹோம்ஸ்க்கியான்டியா வளைவாகப்படரும் கொடி குளிர்காலங்களில் பச்சை சிவப்பு நிற பூக்களைத் தரும். ரயில்வே கொடி (ஐப்போமியா) ஜாக்மோன்ஷியா தாட்பூட் பழக்கொடி பெரிய இலைகளுடன் அடர்த்தியாக வளரும் கொடியினை பந்தல் , வேலி முதலிய இடங்களில் படரவிட்டு வளர்க்கலாம். வெள்ளை நிறத்தில் கவர்ச்சியான பெரிய பூக்கள் தோன்றும். ஆஸ்திரேலிய பைன் ஆப்பிள் (மான்ஸ்டீரியா) பெட்ரியா வெர்னோனியா அலங்கார மரங்கள் ஏதாவது ஒரு காரண காரியத்தோடுதான் மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தகுந்த இடத்தில் நடப்படுகின்றன. மரங்களை தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவைகளை நடுவதற்கான இடத்தை தேர்வு செய்வது. பெரும்பாலும் கட்டிடங்களுக்கு அழகூட்டும் மரங்களை நடுவதற்கு முன் அவைகளின் உபயோகங்களுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து நடவேண்டும். இயற்கைத் தோட்டம் அமைக்கும் போது மரங்களின் பங்கு அதிகம். அத்தகைய மரங்களின் உபயோகம் மற்றும் அவைகளின் பங்கு பற்றி இனி பார்ப்போம். நிழல் நிழல மட்டும் தேவைப்படும் இடங்களில் கட்டிடத்திலிருந்து ஐந்து மீட்டர் இடைவெளி விட்டு மரங்கள் நட வேண்டும். நிழல் மரங்களின் வடிவங்களைப் பொருத்து நிழல் கொடுக்கும் தன்மை அமையும். நல்ல நிழல் பெற கிளைகள் நீளமாகவும் நாற்புறங்களிலும் வட்ட வடிவமாக படர்ந்து வளரும் மரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் நிழல் மரங்கழள அதன் வடிவங்களைப் பொருத்து
எனப் பிரிக்கலாம். வடிவமைப்பு கட்டிடங்களுக்கு பிரேம் போட்டது போன்ற ஒரு வடிவமுள்ள மரங்கள் நடப்படுகின்றன. இதற்கான மரங்களை கட்டிடத்தின் முன்பக்க ஓலங்களில் சிறிது தூரம் விட்டும் கட்டிடத்தின் பக்கவாட்டிலும் நட வேண்டும். கட்டிடத்தின் முன்புறம் நடப்படும் மரங்கள் அவற்றை இரண்டாக பிரித்துக்காட்டத வண்ணம் இருக்க வேண்டும். பின்புற காட்சி மறைவு வேண்டாத இடங்களை பளிச்சென்று கண்களுக்கு தெரியா வண்ணம் மறைப்பதற்கு மரங்கள் உதவுகின்றன. இதற்காக மரங்களை கூட்டமாக நடும்போது மரங்களின் பலவித வடிவங்களும் , இலை , மலர் ஆகியவைகளின் வண்ணங்களும் கண்களுக்கு புலப்படாமல் செய்து விடுகின்றன. காற்று தடுப்பு தனி உருவகம் கண்கவர் மலப்களுடன் (அ) விகோதமான கிளைகளுடக் கூடிய (அ) சிறிய ஊசி இலைகளுடன் கூடிய மரங்களை தனி ஒரு மரமாக நட்டால் அந்த இடத்திற்கு ஒரு அழுத்தம் கிடைக்கிறது புல் தரையின் ஓரம் , கட்டிடத்தின் முன் பக்க ஓரம் , மதில் ஓரம் நடப்படும் இத்தகைய மரங்கள் கவர்ச்சியுடன் மிளிரும். ஒருமை எங்கும் எப்போதும் கட்டிடங்களையே பார்த்து பார்த்து சலித்த கண்களுக்கு அவைகளோடு பசுமையான மரங்களையும் செடிகளையும் காணும்போது அந்த சலிப்பு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படகிறது. மரங்கள் நடும் முறை அநேக மரங்கள் விதைகள் மூலமும் சில மரங்கள் போத்துக்ள நட்டும் இன்னும் சில மரங்கள் பதியன்கள் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. மரககன்றுகளை நன்கு தயார் செய்யப்பட்ட ( 1 x 1 x 1 மீ) குழிகளில் மேல் மண்ணுடன் சம அளவு மக்கிய மாட்டு உரம் கலந்து நிரப்பி தண்ணீர் விட்டடு பின்பு மரக்கன்றுகளை நட வேண்டும். மரங்கள் வளரும் தன்மையைப்பொருத்து தக்க இடைவெளி விட்டு நட வேண்டும். மரங்கள் வளரும் போது தரையிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை பக்க கிளைகள் இல்லாமல் ஒரே அடி மரத்துடன் இருக்குமாறு வளர்க்க வேண்டும். மரங்களின் வகைகள் மலர் மரங்கள் பேய் மரம் மந்தாரை பத்திரி தொங்கும் கிழைகளில் பளபளக்கும் இலைகளைக் கொண்ட மரம் . வெண்மை நிறத்திலும் இளஞ்சிவப்பு நிறத்திலும் பூக்கள் தோன்றும். மார்ச் – ஏப்ரல் மாதங்களில் கொத்துக் கொத்தாக பூக்கும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பொரச மரம் (காட்டுத் தீ) சரக்கொன்றை கல்யாண முருங்கை மார்ச் – ஏப்ரல் மாதங்களில் இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிட்டு சிவப்பு மலர்க்கொத்துகளை தாங்கி நிற்கும் . பெரிய போத்துகளை நடுவதன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஜெகரான்டா நிழல் மரங்கள் இலை அழகு மரங்கள் (உம்) கிறிஸ்துமஸ் மரம், தூஜா, பெரனி மரம், புளுமேரியா, அழகு ரப்பர், கறிப்பலா, சவுக்கு மரம், தைல மரம், சில்வர் ஓக், நெட்டி லிங்கம் , பாதாம் மரம். அலங்கார குத்து செடிகள் இலை அழகு குத்துச் செடிகள் மலர் அழகுச் செடிகள் குத்துச் செடிகள் நடும்முறை அலங்கார வேலிச் செடிகள் (உம்) அகாலிபா, காகிதப்பூ, கிளிரோடென்ரான், டுரான்டா, குப்ரசஸ், செம்பருத்தி, ஹேமிலியா, மெனியா, சவுக்கு, அரேலியா, மருதாணி போன்றவைகள் ஆகும். வருடாந்திர மலர்ச் செடிகள் அனைத்து பருவ காலங்களுக்கும் ஏற்ற வருடாந்திர மலர்ச் செடிகள் ஆஸ்டர் , சிவந்தி , டயாந்தஸ் ஜெர்பிரா , பேன்சி , சால்வியா, கோல்டன் ராடு, வெர்பினா , சுடுகாட்டு மல்லி குளிரான மலைப் பிரதேசத் தோட்டங்களுக்கு ஏற்ற வருடாந்திர மலர்ச் செடிகள் ஆலிசர், சினாப்டிரகான், ஆப்ரிக்கன் டெய்சி, காலண்டுலா, சைனா ஆஸ்டர், லாஷ்பர் , ஹெலிகிரைசம், ஸ்டேட்டிஸ், லூப்பின், மைமுலஸ், ஈவினிங் விரைம், ரோஸ், லேடிஸ் லேஸ் ஆகியன. மழைக் காலங்களுக்கு ஏற்ற வருடாந்திர மலர்ச் செடிகள் குளிர் காலங்களுக்கு ஏற்ற வருடாந்திர மலர்ச் செடிகள் கோடைகாலத்திற்கு ஏற்ற வருடாந்திர மலர்ச் செடிகள் வாடாமல்லி , ஹாலிஹாக், டேபிள் ரோஸ், கோழிக் கொண்டை
அலங்காரக் கொடிகள் குழிவெட்டி (1 x 1 x 1மீ) குழியில் மண்ணுடன் சம அளவு மக்கிய எரு கலந்து நிரப்பி குளிர தண்ணீர் விட வேண்டும். கொடிகள் பெரும்பாலும் பதியங்கள் , தண்டுகள் அல்லது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றினை நட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். கொடி படர்ந்து வளர்வதற்கான பற்றுக் கோல் மற்றும் இதர சூழ்நிலைகளை செடி நட்டவுடனேயே அமைத்து விட வேண்டும். வளர்ந்து வரும் கொடிகளை அவ்வப்போது நீக்கி வந்தால் கொடி கவர்ச்சியுடன் வளரும். அலங்காரக் கொடிகளின் வகைகள் வீட்டினுள் வளர்க்க ஏற்ற இடங்களும் அழகு செடிகளும் நம் வீட்டில் வரவேற்பரை மற்றும் கலை மற்றும் பரிசுப் பொருடகள் பாதுகாத்து பார்வைக்கு வைக்கும் கண்ணாடி சுவர் அலமாரிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் , உணவருந்தும் மேசை போன்ற பகுதிகளில் நன்கு வளர்ந்த அலங்கார இலைகள் கொண்ட செடிகளை வைத்து அழகுபடுத்தலாம். இவ்வாறு வைக்கப்படும் செடிகளின் எண்ணிக்கை நாம் வைக்கும் நாம் வைக்கும் அறையில் நீள அகல மற்றும் செடிகளின் அமைப்பை ஒத்து மாறுபடும். இங்கு வைக்கும் செடிகள் அவைதம் அமைப்பில் பெரியதாக இருப்பதால் அவற்றிற்கு தண்ணீர் ஊற்றும் போது உபரி கசியும் நீர் தரையில் வழிந்து தரையை சேதம் செய்யா வண்ணம் இருக்க தனித்தனி தட்டுகள் வைத்திட வேண்டும். இவ்வாறு வைக்கப்படும் செடிகள் சூரிய ஒளி கிடைக்க வாய்ப்பே இல்லாமல் தட்டுகள் வைத்திட வேண்டும். இவ்வாறு வைக்கப்படும் செடிகள் வீட்டுத்திண்ணையில் வைத்திட வேண்டும். நல்ல வெப்பநிலையில் சூரிய ஒளி படும்படி வைக்கக்கூடாது. இவை அறையினுள்ளே இருப்பதால் இவற்றில் இலைகளின் தூசி படிய வாய்ப்புள்ளமையால் சிறு தெளிப்பான் கொண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்துவதன் மூலம் செடிகள் நன்கு இயற்கை எழிலுடன் தோன்றச் செய்யயலாம். இது தவிர வீடுகளில் திண்ணை மற்றும் போர்டிகோ வீட்டு அறைக்கு நுழைவாயில் போன்ற இடங்கள் முதலியவற்றையும் செடிகள் கொண்டு நன்கு அழகுறச் செய்யயலாம். போர்டிகோ வீட்டு மற்றும் வீட்டு நுழைவாயில் போன்ற இடங்களில் நல்ல சூரிய ஒளி படும்படி இருப்பதால் நாம் வெளித்தோட்டத்தில் வைக்கும் செடிகளையே தொட்டிகளில் வளர்த்து அவற்றை அவை தாம் கொண்டுள்ள அழகு இலைத் தன்மை, பூத்தன்மை மற்றும் பல நிற வேறுபாடு கொண்ட இலைகள் ஆகியவற்றிற்கு தக்கபடி தொட்டியை முன்னும் பின்னும் மாற்றி அமைப்பதன் மூலம் நன்கு அழகுபடுத்தலாம். சன்னல் பகுதியில் வெளியே சன்சேடு போன்ற பகுதி வரை வளர்ந்து அவற்றின் மேலிருந்து சன்னலை சார்ந்து தொங்கும் வண்ணம் கொடிகளை தரையில் நட்டு வளரச் செய்யலாம். சில தாவர வகைகள் சுவற்றில் ஒட்டி வளரும் தன்மை கொண்டது. சுவரொட்டி என்ற செடி தன்னுடைய தண்டுகளிலிருந்து வரும் சிறிய வேர்களைக் கொண்டு சுவற்றில் ஒட்டிக் கொள்ளும். இவற்றில் சிறுசிறு இலைகள் இருப்பதால் இது சுவற்றில் ஒட்டி படர்ந்து சுவரே வெளியில் தெரியா வண்ணம் அழகிய இலை கொண்டு மூடி எடுப்பான தோற்றத்தைத் தந்திடும். போர்டிகோ பகுதியில் தொங்கும் தொட்டிகள் பொருத்திக் கொள்ள ஏதுவாக இரும்பு வளையங்கள் பல வரிசையாக கட்டிடம் கட்டும்போதே பொருத்தி இருக்கும் இவற்றில் தொங்கும் தொட்டிளில் பல அழகுச் செடிகளை வைத்து தொங்கிவிடுவதன் மூலம் அழகுறச் செய்யலாம். இவ்வாறு வீட்டின் முகப்பில் செடிகளைக் கொண்டு மிகவும் அழகுறச் செய்யலாம். சில வீடுகளின் நுழைவுக்கு முன்பு சிறுபந்தல் போன்ற அமைப்பை அமைத்து அதன் மேல் நம் விருப்பத்திற்கு ஏற்ப மலர்க்கொடிகளை படரவிடுவதன் மூலம் போர்டிகோவில் ஒருபுறம் கான்கிரீட் தொட்டிகள் கட்டுமானத்திலேயே அமைந்திருப்பதைக் காணலாம். இது போன்ற தொட்டிகள் இரு புறங்களிலும் வரிசையாகவோ அல்லது பக்கத்திற்கு ஒன்றிரண்டாகவோ வைத்திருப்பார்கள். இவற்றில் பல அழகுச் செடிகள் அவற்றின் தன்மைக்கு ஏற்றவாறு அழகு இலைகள் கொண்ட செடிகள் , இலை நிற வேறுபாடு கொண்டவை. பூக்கும் தன்மை கொண்ட செடிகள் போன்றவற்றை தனியாகவோ மற்ற செடிகளுடன் கலந்தோ நடுவதன் மூலம் இவ்வகையான போர்டிகோவை நன்கு அழகுறச் செய்யலாம். போர்டிகோவில் பக்கவாட்டில் பூக்கும் அல்லது அழகு இலையுடன் கூடிய படர் கொடிகளை படரவிட்டு போர்டிகோவின் மேலிருந்து தொங்கும் வண்ணம் வளரவிட்டு அவற்றை வெட்டி விட்டு அழகுடன் மிளிரச் செய்யலாம். இது தவிர வீட்டின் முன் வாயில் போர்டிகோவின் முன்பகுதி , போர்டிகோ பகுதி போன்ற இடங்கள் தொட்டிகளில் வளர்க்கப்பட்டு பெரிய, சிறிய செடிகளை தனித் தொட்டிச் செடியாகவோ அல்லது கூட்டாகவோ வைத்து நல்ல எடுப்பான தோற்றத்தை ஏற்படுத்தலாம்.
இப்போது இந்த வகையான வீட்டில் வளர்க்கப்படும். அழகுச் செடிகளைத் தெரிந்து கொள்வோம். பொதுவாக இவ்வகைச் செடிகளுக்கு சூரிய ஒளி அதிகம் தேவைப்படாது. வீட்டில் முன் பகுதி போர்டிகோ பகுதியில் வைக்கும் செடிகள் பனை மர வகைகள் பலவித இலை அமைப்பு கொண்டவைகளான பிட்சார்டிய, திரிநாஷ், குரோட்டன் வகைகள், எராந்திமம், கிராப்டோபியம், அக்ஸோநீமா, ஆஸ்பராக்ஸ், கலர் கீரை, கோலியஸ், டைபன்பேக்கியா, டிரசீனா, பைலியா, பெரலி வகைகள் மற்றும் ரப்பர் செடி வகைகள். பூக்கள் கொண்ட செடிகள் |
|||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015 |