||| | | | | |
தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் :: பெருநெல்லி
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

முன்னுரை

பெருநெல்லி காயகல்ப மூலிகைகளில் ஒன்றாகும். இக்கனியை முறைப்படி பக்குவம் செய்து உண்டால் மூப்படைந்தவரும் என்றும் இளமையுடன் மாப்பிளைபோல் அழகுடன் திகழ்வர். வேறு எந்தக் கனியிலும் இல்லாதத அளவிற்கு வைட்டமின் ‘சி’ உடையது நெல்லிக்கனி. இக்கனியை உண்டால் உமிழ்நீர் சுரப்பை பெருக்கி தாகத்தைத் தணிக்கும். நெல்லிக்கனியை முறையாக சாப்பிட்டால், மலக்கட்டு, காமாலை, ஆஸ்துமா, பீநகம். குன்மமம், வெள்ளை, சூடு போன்று பல நோய்களைப் போக்கி உடலுக்கு எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

நெல்லிக்காய் மற்றம் நெல்லி முள்ளியைக் கொண்டு திரிபலா, நெல்லிக்காய், இலேகியம், நெல்லி கூந்தல் தைலம், நெல்லிச்சாறு அடர் ரசம் (சிரப்), நெல்லி குளிர்பானம், நெல்லி முரபா, நெல்லி ஊறுகாய், நெல்லி ஷாம்பு பொன்ற பல மருந்துகள் தயாரிக்கலாம்.

தற்போது இந்தியாவிற்கு மட்டுமே 1000 டன் வைட்டமின் ‘சி’ தேவைப்படகிறது. மேலும் இதன் தேவை ஆண்டுக்கு 1.5 சதவீதம் அதிகரிக்கிறது. உலகத் தேவைக்கு சுமார் 83,000 டன் வைட்டமின் ‘சி’ தேவைப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. நெல்லி மருந்து தயாரிப்பு மூலம் அந்நிய செலாவணியாக பல கோடி டாலர்கள் பெற நல்ல வாய்ப்பு உள்ளது.

எனவே, ஆரோக்கியத்தைப் பேணுவதில் தன்னிகரில்லா நெல்லியை, அதன் கனிக்காக வீடுகளிலும், தோட்டங்களிலும், பணப்பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது.

தட்பவெப்பநிலை

பெருநெல்லி மித வெப்ப மண்டலப் பயிர்வகையாக இருந்தாலும், வெப்பமண்டலப்பகுதியில் கூட தற்போது வெற்றிகரமாக சாகுபடி செய்ய்பபடுகிறது. கோடைக் காலங்களில் இலைகளை உதிர்த்து நீராவிப் போக்கினை கட்டுப்படுத்துவதால் சுமாார் 16 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கூட தாங்கிக் கொண்டு வாழும் தன்மை கொண்டது.

மண்வகை

பெருநெல்லி எல்லாவகை மண்ணிலும நன்கு வளரும் தன்மையுடையது. வடிகால் திறனுள்ள வளமாக மண்வாகு மிகவும் ஏற்றது. மண்ணின் கால அமிலத்தன்மை (PH) 6.5 முதல் 9.5 வரை தாங்கி வளரும். ஆயினும். இதன் வளர்ச்சி 7 முதல் 8.5 வரையிலான கால அமிலத்தன்மை கொண்ட மண்ணில் துரிதமாக வளரும்.

இரகங்கள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பி.எஸ்.ஆர் 1 இரகமும், வட இந்திய இரகங்களான சாக்கியா, என்.ஏ.7 கிருஷ்ணா, காஞ்சன் போன்ற இரகங்கள் தமிழகத்தில் பயிர் செய்யப்படுகின்றன. ஆயினும் பி.எஸ்.ஆர் 1 இரகமே தமிழகத்தில் சாகுபடி செய்ய உகந்ததாகவும், அதிக மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகிறது.

விதையும் விதைப்பும்

நடவு வயல் தயாரித்தல்

நடவு வயல் 2 (அ) 3 முறை ஆழ உழவு செய்து நிலத்தை பண்படுத்தவெண்டும். வளமான மண்ணாக இருப்பின் இடைவெளி 18X18 அடி (வரிசைக்கு வரிசை 18 அடி இடைவெளி) விடவேண்டும். வளமற்ற மண்ணாக இருப்பின் 15 X 15  அடி இடைவெளிவிட்டு நடவு செய்யவேண்டும். குழி 2X2X2 அடி நீளம், அகலம், ஆழம் உள்ள குழியை எடுத்து ஒரு வாரக்காலத்திற்கு ஆறப்போடவேண்டும். நடவு குழிக்குள் மேல்மண் +மக்கிய எரு + மணல் ஆகியவற்றை 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து நிரப்பவேண்டும். களர், உவர் நிலமாக இருப்பின் குழி ஒன்றுக்கு 10 கிலோ ஜிப்சம் கலந்து இடவும்.

இவ்வாறு நிரப்பப்பட்ட குழிகளில் ஒட்டு கட்டிய பாகம் மேலே தெரியுமாறற நடவு செய்து, அருகாமையில் ஊன்றுகோல் நட்டு செடியுடன் சேர்த்து இறுக்கமின்றி கட்டி நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

நீர் நிர்வாகம்

நெல்லி கன்று நல்ல வளர்ச்சி அடையும் வரை வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யவேண்டும். நல்ல வளர்ச்சி பெற்ற காய்ப்பிலுள்ள மரங்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை (அ) மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்றவாறு நீர்ப்பாசனம் அளிக்கவேண்டும். நெல்லிக்கன்றுக்கு சுற்றி உள்ள களைகளை அகற்றி பராமரிப்பு செய்யவேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

நெல்லிக்கன்றகள் நட்ட முதலாம் ஆண்டு வரை சுமாரான வளர்ச்சியே இருக்கும். இரண்டாமாண்டு முதல் வளர்ச்சி துரிதமாக காணப்படும். தரைமட்டததிலிருந்து சுமார் 3 அடி உயரத்திற்கு பக்கக் கிளைகள் உருவாகாமல் அவ்வப்போது பக்கக் பிளைகளை வெட்டிவிடவேண்டும். 3 அடிக்குமேல் வளரும் கிளைகளை சூரியஒளி நன்கு படுமாறு நாலாப் பக்கமும் கிளைகள் சரியான இடைவெளியில் படருமாறு பார்த்துக்கொள்ளவெண்டும். குறுக்கும் நெடுக்குமாக உள்ள கிளைகள் மற்றும் காய்ந்த, நோய் மற்றும் பூச்சி தாக்கிய கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தவேண்டும். நெல்லியில் ஒவ்வொரு மகசூல் எடுத்த பின்னர் கிளைகளின் நுனியல் இருந்த சுமார் 10 செ.மீ நீளம் விட்டு வெட்டி விடுவதன் மூலம் புது தளிர்கள் அதிகமாகத் தோன்றி அதிக பூக்கள் உருவாகும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

தொழு உரமிடுதல்

மானாவாரி நெல்லி மரத்திற்கு சுமார் 80 கிலோ மக்கிய தொழு உரம் மழைக்காலம் துவங்கும் முன்பு மரத்திலிருந்து 2 அடி தள்ளி 1 அடி ஆழத்தில் குழி எடுத்து நிரப்பவேண்டும். இறவைக்கு மேற்கூறிய தொழு உரங்கள் இரண்டாப் பிரித்து மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இடவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

மரங்களின் தண்டு மற்றும் பட்டைகளை தண்டப்புீ சுரண்டி உண்பதுடன், புழுக்கள் தண்டில் துளையிட்டு உட்சென்று திசுக்களை உண்டு சேதம் விளைவிக்கும. இவற்றை கட்டுப்படுத்த துளையினுள் வேப்ப எண்ணெயை ஊற்றி பின்னர் துளையை களிமண் கொண்டு அடைத்துவிடலாம். இலைகளில் உள்ள அசுவினியைக் கட்டுப்படுத்த ஈகோநீம்பினால், நீம்சால் போன்ற தாவரப் பூச்சிக்  கொல்லி மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

மகசூல்

பெருநெல்லி ஜனவரியில் முழுமையாக இலைகள உதிர்த்து பகதியில் இருந்து தோன்றி ப்பிரவரி மற்றும் ஜீலை மாதங்களில் பூக்கள் தோன்றுகின்றன. நடவு செய்யப்பட்ட ஒட்டுக்கன்றுகள் 4வது வருடத்தில் இருந்து சுமார் 30 கிலோ முதல் 150 கிலோ நெல்லிக் கனிகள் மகசூலாகப் பெறலாம்.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008