அஸ்வகந்தா - Withania somnifera
Solanaceae
பொருளாதார பகுதி – வேர்
பெரும்பான்மையான மூலக்கூறு – மொத்த அல்கலாய்டுகள் (0.13-31%) – வித்தானைன், சாம்னிஃபெரைன்
பயன்கள் – மூச்சுக்குழாய் அழற்சி, கீல் வாதம், வீக்கம் குணமாகின்றன
இரகங்கள்
போஷிதா மற்றும் ரக்ஷிதா போன்றவை சிஎஸ்ஐஆர்-சி ஐ எம் ஏ பி, லக்னோ வெளியிட்ட அதிக விளைச்சல் தரும் இரகங்கள் ஆகும். ஜவஹர் 20: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பயிரிடப்படுகிறது. W S R என்ற ரகம் சிஎஸ்ஐஆர்-மண்டல ஆராய்ச்சி ஆய்வகம், ஜம்முவால் வெளியிடப்பட்ட மற்றொரு வகையாகும். நாகோரி என்பது மாவுச்சத்து அதிகம் கொண்ட நாட்டு ரகம் ஆகும்.
மண் மற்றும காலநிலை
7.5-8.0 கார அமிலத் தன்மை கொண்ட, மணல் கலந்த மண்ணில் நன்கு வளரும். அது 600-1200 மீ உயரத்தில் உள்ள சிறந்த வளரும். 35oசெ முதல் 20oசெ இடையேயான வெப்பநிலை சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.
விதை அளவு
எக்டருக்கு 10 – 12 கிலோ விதை தேவைப்படுகிறது. நடவிற்கு, 5 கிலோ விதை / எக்டர் தேவைப்படுகிறது. 6 வார வயதுடைய நாற்றுகள் விளை நிலத்தில் 60 x 60 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
பருவம்
இது மழை காலமான ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை நடவு செய்யப்படுகிறது. அடுத்த மே மாதம் அறுவடை செய்யலாம்.
Two months old crop
Field view
உரமிடுதல்
பயிர் முக்கியமாக மண்ணின் எஞ்சிய வளத்தில் வளர்க்கப்படுகிறது. எனவே, எந்த உரமும் பரிந்துரைக்கப்படவில்லை.
பின்செய் நேர்த்தி
களைகளை கட்டுப்படுத்த நடவு செய்த 30 நாட்கள் கழித்து கைக்களை எடுக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
இலை கருகல் மற்றும் நுனிக் கருகலுக்கு டைத்தேன் எம் 45 (0.3%) அளிக்க வேண்டும்.
நாற்றழுகல் மற்றும் வேரழுகல் - டிரைக்கோடெர்மா விரிடி (2 கிலோ / எக்டர்) மற்றும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்(2 கிலோ / எக்டர்) அளிக்க வேண்டும்.
அறுவடை
இலைகள் உலர்தல் மற்றும் காய்கள் சிவப்பு நிறமாக மாறுவதன் மூலம் பயிர் முதிர்ச்சி அடைவதை அறியலாம். விதைத்த 150-170 நாட்களில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அறுவடை செய்யலாம். முழு செடியும் பிடுங்கப்பட்டு, தண்டிலிருந்து 1-2 செ.மீ விட்டு வெட்டி வேர்கள் பிரிக்கப்படுகின்றன.
Maturity stage
Fresh fruits
அறுவடை பின்சார் தொழில்நுட்பம்
உலர்வதற்கு எளிதாக வேர்கள் 7-10 செ.மீ குறுக்காக வெட்டப்படுகின்றன. காய்கள் தனியாக அறுவடை செய்யப்பட்டு, உலர வைக்கப்பட்டு விதைகள் நீக்கப்படுகின்றன.
Freshly harvested roots
Washing the roots
Dried roots
Dried seeds
வேர்கள் தரம் பிரித்தல்
காய்ந்த வேர்கள், குச்சியால் அடிக்கப்பட்டு ஒட்டியுள்ள மண் மற்றும் மெல்லிய, உடையக்கூடிய பக்கவாட்டு குருத்துவேர் போன்றவை நீக்கப்படுகின்றன. பக்கவாட்டு கிளைகள், வேர் மற்றும் எஞ்சியுள்ள தண்டு கவனமாக ஒரு கத்தி மூலம் ஒழுங்கு செய்யப்படுகிறது. வேர் துண்டுகள் தொடர்ந்து பின்வரும் தரங்களாக வரிசைப்படுத்தப்படுகின்றன.
1) A தரம்
வேர்கள் 7 செ.மீ நீளம், 1-1.5 செ.மீ விட்டம், திட உருளை, மேற்பரப்பு மென்மையாகவும் மற்றும் தூய வெள்ளை நிறமாகவும் இருப்பவை.
2) B தரம்
நீளம் 5 செ.மீ., 1 செ.மீ. அல்லது அதற்கு குறைந்த விட்டம், திட, உடையக்கூடிய மற்றும் உள்ளே வெள்ளையாக உள்ள வேர் துண்டுகள்.
3) C தரம்
நீளம் 3-4 செ.மீ., 1 செ.மீ. அல்லது அதற்கு குறைந்த விட்டம் வரை உள்ள திட வேர் துண்டுகள்.
4) D தரம்
சிறிய வேர், பாதியளவு அல்லது வெற்றிடம், மிக மெல்லிய, உள்ளே மஞ்சளாக உள்ள துண்டுகள், மற்றும் விட்டம் < 1 செமீ.
விவசாயிகள் 7 அல்லது அதற்கு மேற்பட்ட தரங்களாக வேர்களைத் தரப்படுத்துகிறார்கள்.
மகசூல்
எக்டருக்கு 400 – 200 கிலோ உலர்ந்த வேர்கள் மற்றும் எக்டருக்கு 200-500 கிலோ விதைகள் கிடைக்கும்.
|