தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் :: டிஜிடாலிஸ்

இரகங்கள்

ஈசி 1159955 (தேர்வு)

மண் மற்றும் தட்பவெப்பநிலை

நல்ல வடிகால் வசதியுடைய அங்கக சத்துக்கள் நிறைந்த மணற்பாங்கான நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. குறைந்த அளவிலான காரத்தன்மையும், மிதமான வெப்பநிலையும் சாகுபடிக்கு சிறந்ததாகும்.

பருவம் : மே - ஜுன்

விதை மற்றும் விதைப்பு

விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

விதையளவு : ஒரு எக்டருக்கு 8 கிலோ விதைகள்

இடைவெளி : 45 x 30 செ.மீ

நிலம் தயாரித்தல்


நித்தியகல்யாணி

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரம் : 30:50 கிலோ தழை மற்றும் மணிச்சத்து
மேலுரம் : ஒரு எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்தினை இலைவழியாக 60 மற்றும் 180வது நாளில் இடவேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். மேலும் மண்ணின் ஈரப்பதத்திற்கேற்ப நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

பின்நேர்த்தி

ஆரம்பகலக் கட்டங்களில் ஓரிரு முறை களை எடுக்கவேண்டும்.

அறுவடை

முதல் பயிரில் ஜுலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை 8-10 செ.மீ நீளம் வளர்ந்த இலைகளை (காம்புகள் நீங்கலாக) அறுவடை செய்யவேண்டும். அறுவடை செய்த இலைகளை 60 டிகிரி செல்சியஜ் வெப்பத்தில் உலர வைக்கவேண்டும். 2-3 அறுவடைகள் வரை செய்யலாம்.

மகசூல் :

ஒரு எக்டருக்கு 2000-3000 கிலோ உலர்ந்த இலை.