தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் :: மருந்துக் கத்தரி |
||||||||||||||||||||||
முன்னுரை மருந்துப் பயிர்களில் சில கத்தரி வகைகள் ஸ்டிராய்டு மருந்துப் பொருட்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் காய்களிலும் விதைகளிலும் சொலாசொடின் ஆல்கலாய்டுகள் உள்ளன. சொலாசொடின் ஆல்கலாய்டுகள் டெஸ்டோஸ்ட்டிரோன் (Testosterone) மற்றும் கார்டிக்கோ ஸ்டிராய்டு (Corticosteroid) மருந்துகள் தயாரிப்பதற்கு பயன்படுகின்றன. இந்த மருந்து வகைகள் உடலில் ஏற்படும் வலியை உடனடியாகக் குறைப்பதோடு கர்ப்பத் தடை மாத்திரைகள் தயாரிப்பதற்கும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. மருந்துக் கத்தரியியல் முக்கிய வகைகள் அதிகளவு வளர்க்கப்படுகின்றன. அவை சொலானம் வயாரம் அல்லது கேசியானம் (Solanum viatum or S. Khasiahum) மற்றும் சொலானம் லெசினேட்டம் (S. Lacinatum) ஆகியவை ஆகும். இரகங்கள் 1. சொலானம் - அர்க்கா சஞ்சீவினி மண் மற்றும் தட்பவெப்பநிலை ஓரளவு குளிர்ச்சியான இடங்கள் மிகவும் ஏற்றது. வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது. தற்போது ஆந்திரம், கர்நாடகம், குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விதைக்கும் பருவம் ஏப்ரல் - மே அல்லது ஆகஸ்டு - செப்டம்பர் விதைகளை நாற்றாங்கால் அமைதது விதைக்கவேண்டும். எக்டருக்கு 450 கிராம் விதைகள் தேவைப்படும். விதையும் விதைப்பும் நாற்றாங்கால் ஏழு மீட்டர் நீளம் 1.20 மீட்டர் அகலம், 10 செ.மீ உயரமுள்ள மேடைப் பாத்திகளை அமைக்கவேண்டும். ஒரு எக்டரில் விதைக்க இதுபோல பத்துப் பாத்திகளை அமைக்கவேண்டும். பாத்திகளை அமைக்கும் முன் 20 கிலோமக்கிய தொழு எரு இட்டு கலக்கி மண்ணைச் சமப்படுத்தவேண்டும். 7.5 செ.மீ இடைவெளியில் நேர்க்கோடுகளை அமைத்து விதைகளைச் சீராகத் தூவி விதைத்தபின் மண்ணை மேலாக மூடவேண்டும். பிறகு அவற்றில் விதைகளைச் சீராகத் தூவி விதைத்தபின் மண்ணை மேலாக மூடவேண்டும். பிறகு காய்ந்த இலைச்சருகுகளை பாத்திகளில் பரப்பிடவேண்டும். நாற்றுக்கள் நன்றாக வளரும் வரை தினமம் நீர் தெளிக்கவேண்டும். நாற்றுக்களை வேர் அழகல் நோய் தாக்காமல் இருப்பதற்கு 0.25 சதம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு மருந்தை வேர் நனையுமாறு ஊற்றவேண்டும். நடவு முறை நிலத்தை நன்றாக உழுது எக்டருக்கு 10 டன் தொழு எரு இட்டு மண்ணோடு கலந்து பண்படுத்தவேண்டும். பிறகு 45 செ.மீ இடைவெளியில் பார் அமைக்கவேண்டும். நாற்றுக்களை 30 நாட்கள் கழித்து 45 செ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை ஒரு எக்டருக்கு 25 கிலேத தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து மற்றும் 80 கிலோ சாம்பல் சத்து உரங்களை இடவேண்டும். நாற்றுக்களை நடுமுன் நீர்ப்பாய்ச்சி நடுவது நல்லது. செடிகளுக்கு ஒரு மாதம் கழித்து 10 கிலோ தழைச்சதது உரத்தை மேலுரமாக இடவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வேர் அழுகல் நோய் பெரும்பாரும் நாற்றுக்களையும் வளர்ந்த செடிகளையும் தாக்கும். இது ப்யூசேரியம் ஆக்ஸிஸ்போரம் (Fusarium oxasporum) எனும் பூசணத்தால் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த மண்ணில் வடிகால் வசதியை ஏற்படுத்தவேண்டும். நோய்த் தாக்கப்பட்ட செடிகளுக்கு இரண்டு கிராம் தாமிர பூசணக் கொல்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து வேர்கள் நனையுமாறு 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஊற்றவேண்டும். அறுவடை காய்கள் இளம்பழுப்பு நிறமாக மாறும் போது பறித்துவிடவேண்டும். செடிகளை நட்ட ஆறு மாதங்களில் காய்களை அறுவடை செய்யலாம். காய்களை இளம் வெயிலில் ஒரு வாரம் உலர்த்தவேண்டும்.
மகசூல் ஒரு எக்டரில் 5000 கிலோ பச்சைக் காய்கள் அல்லது 1000-1500 கிலோ உலர்ந்த காய்கள் மகசூலாகக் கிடைக்கும். உலர்ந்த காய்களில் 2.0 சதம் சொலாசொடின் ஆல்கலாய்டு இருக்கும்.
|
||||||||||||||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024 |